சனி, 15 அக்டோபர், 2016

இசைசூழ் தனிமை - Playlist#4 - Melancholy ?!


இன்னதுதான்னு பகுத்தறியமுடியாத உணர்வை சில பாடல்கள் தரும் (unfortunately சினிமாப் பாடல்கள்லேயே திருப்திப்பட்டுக்குற ஜென்மம் நான்) .இசையமைச்சது ஒரே இசையமைப்பாளரா இல்லாம இருக்கலாம், ஒரே மாதிரியான ராகமா இருக்காது, arrangements வேற வேற மாதிரியானதா இருக்கலாம்.. ஆனா கேக்கும்போது அந்தப் பாடல்கள் தர்ற உணர்வு இருக்கே, அது இந்த எல்லாப் பாடல்களையும் ஒரு புள்ளியில இணைக்குற ரொம்ப மெல்லிசான ஒரு இழை. இந்த பாடல்கள் எல்லாமே கிட்டத்தட்ட பாசம், காதல், ஏக்கம்,பிரிவு, நினைவுகள், அமைதி... இந்த வகைகளுக்குள்ள அடக்கிடலாம். அப்புடி நினைவு தெரிஞ்சு மொதல்ல ரசிச்ச பாடல்
பாடல்: கண்டநாள் முதலாய் காதல் பெருகுதடி
இசை: யுவன்
அசலை எழுதி இசையமைத்தவர்: N.S.சிதம்பரம்
படம்: கண்டநாள் முதல்
பாடியவர்கள் : சுபிக்‌ஷா, பூஜா

அதுக்கப்புறம் கிட்டத்தட்ட அதே மாதிரியான feel கெடைச்ச இன்னொரு பாட்டு.துக்கம், சோகம்... ஏக்கம் எல்லாமே...கலந்த உணர்வு மொத வாட்டி கேட்டுட்டு அழுதுட்டேன்.
பாடல்: மஞ்சள் முகமே... மங்கள விளக்கே
இசை: இமான்
எழுதியவர்: சரவண சுப்பைய்யா
படம்: ABCD
பாடியவர்: சைந்தவி (இவங்க மேல பயங்கரமான லவ்வோட சுத்திட்டு இருந்தேன் அப்போ)

தலைவனுக்காக காத்திருக்குற தலைவியோட உணர்வுகள் வகைப் பாடலா இருந்தாலும் கொஞ்சமே கொஞ்சம் கிண்டலும் மகிழ்ச்சியும் கலந்து இருக்குற இந்தப் பாட்டும் இந்த பட்டியல்ல வரும். தனிப்பட்ட முறைல இந்தப் பட்டியல்லேயே எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்பப் பிடிச்ச பாட்டு இதான். (இதுக்குப் பின்னால ஒரு கத இருக்கு)
பாடல்: எங்கிருந்து வந்தாயடா
இசை: ஸ்ரீராம் பரசுராம் (பாடகி அனுராதா ஸ்ரீராமோட ஊட்டுக்காரர் தான்)
எழுதியவர்: தாமரை
படம்: ஃபைவ்ஸ்டார்
பாடியவர்: சந்தனா பாலா

கொஞ்சம் தாலாட்டு சாயல்ல இருந்தாலும் ரொம்ப ரொம்ப அழகான பாட்டு. ஊர்ல இருந்தப்ப இத காரைக்கால் வானொலில கேட்டுட்டு தேடியலஞ்சு ப்ரவ்சிங் செண்டர்ல ஒருவழியா கண்டுபிடிச்சு டவுன்லோட் பண்ணி சிடில காப்பி பண்ணிட்டு வந்தேன். வீட்டுக்கு வந்து கிட்டத்தட்ட ஒரு வாரம் கேட்டுட்டே இருந்தேன்.
பாடல்: என்னம்மா தோழி பொம்மைய காணோம்
இசை: சதிஷ் ராமலிங்கம்
எழுதியவர்: சசிக்குமார்
படம்: காலைப்பனி
பாடியவர்: (RJ) சுலபா

இது ஒரு அம்மா-மகன் பாட்டு தான். கிட்டத்தட்ட மேல பாத்த பாடல்கள பாடுனவங்களோட voice timbre தான் இந்த பாடகிக்கும். மொதல்ல கேட்டப்போ சாதாரணமா இருந்து அப்புறமா this one grew on me..!! Lovely song..! கவிஞர் தாமரையோட வரிகள்ல இருக்குற உயிர்ப்பே தனி தான்.
பாடல்: கண்கள் நீயே
இசை: ஜி.வி.பிரகாஷ்
எழுதியவர்: தாமரை
படம்: முப்பொழுதும் உன் கற்பனைகள்
பாடியவர்: சித்தாரா

இதுவும் அம்மா-மகன் பாட்டு தான். பிரிவுத் துயரம் ஊடாடுற வரிகள்... வைக்கம் விஜயலக்ஷ்மி தமிழ்ல பாடுன முதல் பாட்டு.கலங்கடிச்ச பாட்டு...!
பாடல்: புதிய உலகை புதிய உலகை
இசை: இமான்
எழுதியவர்: மதன் கார்க்கி
படம்: என்னமோ ஏதோ
பாடியவர்: வைக்கம் விஜயலக்ஷ்மி



கடைசியா இப்டி ஒரு லிஸ்ட் போடுறதுக்கு காரணமான பாட்டு. இந்தப் படத்துக்கு வந்து சிக்கிட்டோமேன்னு ஃபீல் பண்ணாலும் ஒரே ஆறுதல் இந்தப் பாட்டு தான். மறுபடியும் இமான்... நாதஸ்வர preludeஓட ஆரம்பிக்கிற பாட்டு..அந்த dense voiceக்காகவே எத்தன வாட்டி வேணாலும் கேக்கலாம்..!!! <3 span=""> <3 span=""> <3 span="">நந்தினி ஸ்ரீகர் குரல்ல யுகபாரதியின் வரிகள் அவ்ளோ அழகு..!
பாடல்: கண்ணம்மா கண்ணம்மா
இசை: இமான்
எழுதியவர்: யுகபாரதி
படம்: ரெக்க
பாடியவர்: நந்தினி ஸ்ரீகர்

சனி, 8 அக்டோபர், 2016

கபாலி, பாலைய்யா மற்றும் இந்திய ரயில்வே



கபாலி திரைப்படத்தில் ரஜினியின் அறிமுகக் காட்சியில் சிறையில் அவர் படித்துக்கொண்டிருக்கிற புத்தகமாகத்தான் பெரும்பாலானவர்களுக்கு (நான் உட்பட) இந்தப் புத்தகம் அறிமுகம். ஒரு நல்ல புத்தகம் ஏதாவதொரு வகையில் பலரையும் சென்றடைவதில் மகிழ்ச்சி தான் .

சமூகத்தால் ஒடுக்கப்பட்ட, கல்வி மற்றும் ஏனைய வசதிகள் மறுக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் மூன்று தலைமுறைக் கதைதான் இந்தப் புத்தகம்.


சமீபத்தில்,தொலைக்காட்சியிலும் செய்திகளிலும் நாம் பார்த்த ஒரு காட்சி;  ஒரிசாவை சேர்ந்த டானா மான்ஜி என்பவர் இறந்துபோன தன் மனைவியின் உடலைச் சுமந்தபடி தன் மகளோடு நடந்து செல்கிற அந்தக் காட்சி நிச்சயம் நம்மை உலுக்கியிருக்கக் கூடும். கிட்டத்த நூறாண்டுகளுக்கு முன்பு அதே மாதிரியான சூழலில் யெலுக்காட்டி நரசையா (இந்தப் புத்தகத்தின் எழுத்தாளர் சத்தியநாராயணாவின் தாத்தா) எடுத்த முடிவுதான் பின்வரும் தலைமுறைகளில் யெலுக்காட்டி குடும்ப வழித்தோன்றல்களின் வாழ்க்கையையும் சமூகத்தில் அவர்களின் நிலையையும் மாற்றி இருக்கின்றது. இறந்தபோன தன் மனைவியின் உடலை கட்டி இழுத்துக் கொண்டு தன் மூன்று வயது மகன் பாலையாவுடன் சொந்த கிராமத்தைவிட்டு கண்ணீரோடு வெளியேறுகிறார் நரசைய்யா.தனது மகனுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துத்தர வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவர் மனம் முழுவதும் நிறைந்திருந்தது.



பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் வியாபாரத்துக்காகவும் நிர்வாக வசதிக்காகவும் 'The Great Indian Peninsula Railway Corporation' ஆக  பிரிட்டிஷாரால் தொடங்கப்பட்ட இந்திய ரயில்வே, அடுத்த நூறாண்டுகளில் நாட்டின் உள்கட்டமைப்பு முன்னேற்றத்துக்கும், வளார்ச்சிக்கும் மட்டுமல்லாது சாதீய ஒடுக்குமுறைகளுக்கு உள்ளான மக்களுக்கு முறையான கல்வி, வீட்டு  வசதி, வேலைவாய்ப்பு கிடைக்கவும் பேருதவியாய் இருந்தது. புதிய பல கதவுகளைத் திறந்தது.இந்திய ரயில்வேயின் பெரும்பாலான உயர்பதவிகளில் பிரிட்டிஷாரும், இரண்டாம் நிலை அதிகாரிகளாக படித்த பிராமணர்களும் , அதற்கடுத்த அலுவலகப் பதவிகளில் சூத்திரர்களான இடைநிலை சாதி இந்துக்களும் பணிபுரிந்த நிலையில், பெரும் உடலுழைப்பை கோருகிற, கிட்டத்தட்ட உயிருக்கே ஆபத்தான அடிமட்ட பணிகளில் (பாயிண்ட்ஸ்மேன், கேங்மேன்)  தலித்துகள் பெருமளவு வேலைக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். அப்படிப்பட்ட ஒரு பாயிண்ட்ஸ்மேனாகத் தான் நரசைய்யா ரயில்வேயில் சேர்கிறார். அதன்பின் அவருடைய இரண்டாம் திருமணம், ரயில்வே குவாட்டர்ஸ் குடியேற்றம் எனத் தொடற்கிறது அவருடைய கதை.


இந்திய கிராமங்கள் குறித்து அம்பேத்கர்:
The Indian village is the very negation of a republic. If it is a republic, it is a republic of the touchables by the touchables and for the touchables. The untouchables have no rights. They are only to wait, serve and submit. In this republic, there is no place for democracy. There is no room for equality. There is no room for liberty and there is no room for fraternity.

19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய கிராமங்களில் (இப்போதும் கூட) சாதீய ஒடுக்குமுறைகள் கொடுமையாக இருந்தபோது பிரிட்டிஷாரும் இந்திய ரயில்வேயும் நிகழ்த்திய  குறிப்பிடத்தக்க சமூக மாற்றங்கள் நிச்சயம் ஏராளமானவை. அதில் ஒன்று சூத்திரர்களையும், பிராமணர்களையும் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்டவர்களையும் ஒரே இடத்தில் பணிபுரிய வைத்ததும், ஒரே சுற்றுச்சுவருக்குள் வீடுகளில் குடியிருக்கவைத்ததும் . இதுபற்றி சத்தியநாராயணா பின்வருமாறு  குறிப்பிடுகிறார்.

It was a strange situation: untouchables, who were outcasts and segregated in every village, were suddenly living in the same quarters as Sudras! The environment had changed, and now they had the means to learn many new things, not just about work, but about society and social structures too. In many ways, it was the British Indian era that opened the doors of development to the untouchables.

இரண்டாம் தலைமுறையான நரசைய்யாவின் மகன் பாலைய்யாவும் ரயில்வேயில் ஒரு அடிப்படை ஊழியராக (பாக்ஸ் மேன்) வேலையில் சேர்கிறார்.  முறையாக கல்வி கற்கும் வாய்ப்பு இல்லாவிட்டாலும் கல்வியின் மேன்மையை உணர்ந்ததும், கற்கும் ஆர்வம் இருந்ததும் தான் யெலுக்காட்டி குடும்பத்தினரின்  முன்னேற்றத்துக்குக் காரணம்.உணவு உள்ளிட்ட அடிப்படை  வசதிகளில் குறியிருந்தாலும் பாலைய்யா தனது எட்டு குழந்தைகளுக்கும் ஒழுங்கான கல்வியறிவைப் பெற்றுத்தருவதில் கவனமாகவும் கண்டிப்புடனும் செயல்பட்டார்.

அடுத்தடுத்த தலைமுறையினர் பள்ளிக்கல்வியைத் தாண்டி கல்லூரிக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் சென்று படித்தது, ரயில்வே துறையிலேயே உயர் பதவிகள் வகித்தது, அடையாளங்களைத் துறக்கும் பொருட்டு பெயர்களை மாற்றிக் கொண்டது, சாதீய ஒடுக்குமுறைகளிலிருந்து விடுபட வேறு மதத்தை தழுவிக் கொண்டது , தெய்வ வழிபாடு, உணவுப் பழக்கவழக்கங்கள் மாற்றத்திற்குள்ளாவது என யெலுக்காட்டி குடும்பத்தின் மூன்றாம் தலைமுறையினருள் ஒருவரான இப்புத்தகத்தின் எழுத்தாளர் சத்தையா என்கிற சத்யாநாராயணா, தனிப்பட்ட ஒரு குடும்பம் சார்ந்து மட்டும் பேசாமல் பல விஷயங்களைப் பற்றிப் பேசுகிறார்

Abbasayulu, Narsing Rao and Anjiah were well-settled as lecturers in different colleges. People marvelled at how a single family had produced four lecturers. Life was good now in every family. I began to observe the slow cultural transformation of each family towards Sanskritization.
We had a simple process: my father would offer food to Goddess Durgamma – rice and mutton, and sometimes a bottle of liquor, pray briefly, and then enjoy drinking and eating the offerings. There were no such things as fasting, offering flowers, or making special vegetarian dishes and offering them – untouched and untasted by others – to the gods. But now I would find pictures of gods and goddesses like Saraswati, Lakshmi, Ganapati and Venkateshwara in our families

இத்தனை ஆண்டுகளில் எத்தனையோ விஷயங்கள் மாறியிருந்தாலும் மனித மனங்களுக்கு உள்ளே இருக்கின்ற அழுக்கு கொஞ்சம் கூட மாறவில்லை என்பதற்கு சான்றாக ஒரு நிகழ்ச்சியையும் விவரிக்கிறார் சத்யநாராயணா. 1982ஆம் டெல்லியில் இந்தியா முழுவதிலிருந்தும் பல்வேறு கல்லூரிகளின் தலைமையாசிரியர்கள் கலந்து கொண்ட கருத்தரங்கில் நடந்தது இது.

There was a debate on the subject of the emancipation of scheduled caste and scheduled tribe students, and the affirmative actions a principal could take to achieve this goal. It was an interesting and important topic, during which I came to know the attitude of caste Hindus towards this section of students. Instead of discussing how best the students’ grievances could be addressed and their socio-economic sufferings relieved, or how the social ills of untouchability and segregation could be removed, there was a deviation from the subject and everyone started discussing how long the reservations should continue. The antagonism was clear. None of the heads of institutions was even thinking in favour of reservations for Dalit students. One principal made a derogatory remark, ‘Aap kitni bhi chhoot de, ye harijans sudharne vale nahi hain.

No matter what reservations you provide and however long you extend it, these Harijans are never going to get any better. Their children attend colleges simply to receive the scholarship money.’ I could see upper-caste arrogance in his words; he had not made a single affirmative suggestion and was showing his contempt and hatred against students from the scheduled castes and tribes. I could not restrain myself any more and said, ‘I strongly protest against the remarks made against Dalit students. They are derogatory and insulting, and if this is the attitude of the principal, I wonder how his unfortunate and neglected students can expect any social justice.’

இந்தியாவில் சாதியின் பெயரால் இதுவரை நடந்த நடக்கின்ற கொடுமைகள் பற்றி எதுவும் தெரியாமல்; தெரிந்துகொள்ளவும் விரும்பாமல், ”இப்பலாம் யார் சார் ஜாதி பாக்குறா ?”, “Because of this reservation only I was not able to get medical seat.." மாதிரியான மொக்கைப் புலம்பல்களை உதிர்த்தபடி   , இட ஒதுக்கீடு பற்றி அவதூறு பேசியபடி திரிபவர்களும், சாதிப் பெருமை பேசியபடியும், சமகால அரசியல் தெரியாமல் பேசுபவர்களும் நிச்சயம் படிக்கவேண்டிய புத்தகம் இது.

இந்த புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: இங்கு க்ளிக்கவும்

Update: 06/06/2018 - இப்புத்தகம் இப்போது தமிழில் ஜெனி மொழிபெயர்க்க ‘என் தந்தை பாலய்யா’ என்ற பெயரில் காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. வாங்க இங்கு சொடுக்கவும்