சனி, 6 மே, 2017

மரணமெனும் பெருவாழ்வு - When Breath Becomes Air - Dr.Paul Kalanithi

Courtesy: http://stanmed.stanford.edu


Don’t think I ever spent a minute of any day wondering why I did this work, or whether it was worth it. The call to protect life—and not merely life but another’s identity; it is perhaps not too much to say another’s soul—was obvious in its sacredness. Before operating on a patient’s brain, I realized, I must first understand his mind: his identity, his values, what makes his life worth living, and what devastation makes it reasonable to let that life end. The cost of my dedication to succeed was high, and the ineluctable failures brought me nearly unbearable guilt. Those burdens are what make medicine holy and wholly impossible: in taking up another’s cross, one must sometimes get crushed by the weight.

என் அம்மா அடிக்கடி சொல்கிற ஒரு விஷயம் இது. ”நமக்கு ஒரு விஷயம் புதுசா தெரியுது அல்லது கத்துக்க வேண்டி வருதுன்னா வாழ்க்கைல ஏதோ ஒரு கட்டத்துல நமக்கோ இல்ல நம்மால யாரோ ஒருத்தருக்கோ அது பயன்படப்போகுதுன்னு அர்த்தம். எதுவும் யாருக்கும் சும்மா வந்துட்றதில்ல... காரணமில்லாம காரியமில்ல...! “

எப்போதும் நமக்குள்ளிருக்கிற தேடல் ஒரு கட்டத்தில் நம்மை வழிநடத்திச்செல்லத் தொடங்கும். மெல்லமாக ஒரு புரிதலில் தொடங்கி, நாம் தேடுகிற விஷயங்களே நம்மைத் தேடி வந்தடைய ஆரம்பிக்கும். இசை, இலக்கியம், நட்பு, காதல், வாழ்க்கை, அமைதி, ஆன்மிகம் என அத்தனைக்கும் இது பொருந்தும்.

அப்படியான தேடலில், நம்மை திடீரென சூழ்ந்து கொள்கிற கேள்விகள் நீண்ட நாட்களுக்கு நம்முடைய உறக்கத்தைக் கெடுத்துவிடக்கூடும். எதிர்காலம் குறித்த அச்சமும், நாம் இதுவரை வந்த பாதையும் இனிமேல் செல்கிற பாதையும் சரியானவைதானா என்ற சந்தேகமும், தேவையில்லாத கேள்விகளை உருவாக்கி நம்மை கலக்கமுறச் செய்யும். வாழ்வு குறித்தும் மரணம் குறித்தும் இப்படியான தேடலையும் கேள்விகளையும் கொண்டிருந்த ஒருவர் அதற்கான விடையை தன் வழியாகவே உணர்ந்துகொள்ள நேர்கிற இறுதிக் காலமும், அவர் உணர்ந்தவற்றை இந்த உலகுக்கு சொல்வதும் தான் இந்தப் புத்தகம்.


The throwaway assumption that the mind was simply the operation of the brain [was] an idea that struck me with force; it startled my naïve understanding of the world. Of course, it must be true — what were our brains doing, otherwise? Though we had free will, we were also biological organisms — the brain was an organ, subject to all the laws of physics, too! Literature provided a rich account of human meaning; the brain, then, was the machinery that somehow enabled it. It seemed like magic. That night, in my room, I opened up my red Stanford course catalog, which I had read through dozens of times, and grabbed a highlighter. In addition to all the literature classes I had marked, I began looking in biology and neuroscience as well.

பால் கலாநிதி ஒரு வித்தியாசமான நரம்பியல் அறுவை சிகிச்சை (Neuro-Surgeon) நிபுணர். அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் குடியேறிய தமிழ்க் குடும்பம் இவருடையது. இளமையில் புத்தகங்கள் மேல் கொண்ட காதல் ஆங்கில இலக்கியம் படிக்க உந்தித் தள்ளினாலும் எதேச்சையாக தோழி ஒருத்தி தந்த ’Satan: His Psychotherapy and Cure by the Unfortunate’ புத்தகத்தைப் படித்ததும் உயிரியலும் படிக்க முடிவு செய்கிறார். ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியமும் உயிரியலும் படித்த ஒருவர் எந்தமாதிரியான ஒரு சிந்தனையையும் கருத்தாக்கத்தையும் கொண்டிருந்திருப்பார். மொழியும், அறிவியலும், மனமும், தத்துவங்களும் சந்திக்கிற புள்ளியல்லவா இது. இவையத்தனையையும் சாத்தியப் படுத்துகிற மனித மூளையின் பக்கம் அவருடைய கவனம் திரும்புகின்றது.


I had come to see language as an almost supernatural force, existing between people, bringing our brains, shielded in centimeter-thick skulls, into communion. A word meant something only between people, and life’s meaning, its virtue, had something to do with the depth of the relationships we form. It was the relational aspect of humans — i.e., “human relationality” — that undergirded meaning. Yet somehow, this process existed in brains and bodies, subject to their own physiologic imperatives, prone to breaking and failing. There must be a way, I thought, that the language of life as experienced — of passion, of hunger, of love — bore some relationship, however convoluted, to the language of neurons, digestive tracts, and heartbeats. For my thesis, I studied the work of Walt Whitman, a poet who, a century before, was possessed by the same questions that haunted me, who wanted to find a way to understand and describe what he termed “the Physiological-Spiritual Man.”

மொழியின் வழியாக மனித மனத்தையும் வாழ்க்கையையும் அறிந்துகொள்ள நினைத்தவருக்கு மொழி, மனம், எண்ணம், சொல், செயல் அத்தனையுமே உடலியக்கமும் மூளைச் செயல்பாடும் உருவாக்குகிற கூட்டுவிளைவுதான் என்று புரியத்தொடங்கியதும், யேல் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிக்க முடிவு செய்கிறார். கேள்விகளும் தேடல்களும் நிறைந்த அவருடைய கொண்டாட்டமான கல்லூரிக்காலம் பற்றியும் , தான் படித்த அற்புதமான உலக இலக்கியங்கள் பற்றியும் , மருத்துவம் பயிலும்போது தான் எதிர்கொண்ட நோயாளிகள் பற்றியும்  நிறைய பேசுகிறார் பால்.
  • மூளையின் ஹைப்போதாலமஸ் பகுதியில் ஏற்பட்ட ஒரு சிறிய கட்டியை அகற்றும் பொருட்டு சிகிச்சைக்கு வருகிறான் ஒரு எட்டு வயது சிறுவன். கட்டியை நீக்கிவிட்டால் அவனை காப்பாற்றி விட முடியும். ஆனால் பசி, தூக்கம், தாகம், உள்ளிட்ட உணர்வுகளைக் கட்டுபடுத்துகிற ஹைப்போதாலமஸ் கொஞ்சம் சேதமடையும். அந்தச் சிறுவன் பசியைக் கட்டுப்படுத்த முடியாமல் போகலாம். அறுவை சிகிச்சை நடந்து அவன் மேற்சொன்னபடி காப்பாற்றவும் படுகின்றான். 4 ஆண்டுகளுக்குப் பிறகு வேறு ஒரு பிரச்சனைக்காக மீண்டும் மருத்துவனைக்கு வருகின்றான். ஆனால் பசியைக் கட்டுப்படுத்தமுடியாமல் எப்போதும் தின்று கொண்டே இருந்ததனால் அதீதமாக உடல் எடை அதிகரித்து காணப்படுகின்றான். மென்மையான சிறுவனாக இருந்தவன் இப்போது ஐந்து மடங்கு உடல் எடை அதிகரித்து அதீத வன்முறைக் குணம் கொண்டவனாக மனநலமருத்துவமனையில் சிகிச்சை பெரும் அளவுக்கு மாறிப்போகிறான். அவனுடைய பெற்றோரோ மருத்துவர்களோ யாருமே எதிர்பார்க்காத திருப்பம் இது. 
  • வெர்னிக் (Wernicke) மற்றும் ப்ரோக்கா (Broca)ஆகியவை மூளையின் முக்கியப் பகுதிகள். ஒரு  மனிதனின் மொழித்திறன், புரிந்து கொள்ளுதல், பேச்சுத்திறன் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் பகுதிகள் இவை. ப்ரோக்கா பகுதியில் ஏதும் பாதிப்பு ஏற்பட்டால் நோயாளியால் ஒரு மொழியை பேசவோ எழுதவோ முடியாமல் போகலாம். ஆனால் மொழியைப்புரிந்து கொள்ளமுடியும். இதுவே வெர்னிக் பகுதியில் சேதமேற்பட்டால் மொழியைப் புரிந்துகொள்ள முடியும் ஆனா பேசவோ எழுதவோ முடியாது. கோர்வையில்லாமல்,அர்த்தமில்லாத  ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத வார்த்தைகளால் தான் பேச முடியும். அப்படி மூளையில் ஏற்பட்ட கட்டியின் காரணமாக வெர்னிக் பகுதி பாதிப்படைந்த முதியவர் பற்றிச் சொல்கிறார் பால். மருத்துவர்களோ மற்றவர்களோ எந்தக் கேள்வி கேட்டாலும் அந்த முதியவர் சொல்கிற பதில் வெறும் எண்களாகத்தான் இருக்கும் உதாரணம் "How are you feeling today ?" என்கிற மருத்துவர்களின் கேள்விக்கு “Four six one eight nineteen" என பதில் கிடைக்கும் அவரிடமிருந்து. எல்லா கேள்விகளுக்கும் எண்கள் தான் பதில். இறக்கும் தருவாயில் அவர் ஒரே எண்ணை திரும்பத்திரும்பச் சொல்லியபடி இறந்துபோயிருக்கிறார். அவர் சொல்லவந்த விஷயம் யாருக்குமே சொல்லப்படாமல் அவரோடே  புதைந்துபோனது.
இது போல் இன்னும் ஏகப்பட்ட உதாரணங்கள்...கதைகள்..!!
நோயுற்றவர்களின் கதைகளைக் கேட்கும்போதெல்லாம் நாம் எந்தமாதிரியான ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோமென யோசிக்கத் தோன்றும். மூளையின் இயக்கம் குறித்தும் இந்த உடலெனும் அற்புதம் குறித்தும் நாம் கொண்டிருக்கிற அத்தனை அலட்சிய எண்ணங்களும் மாறிவிடக்கூடும்.

ஆறு ஆண்டுகளுக்கும் மேலான கடுமையான உழைப்பிற்குப் பிறகு கிட்டத்தட்ட அவருடைய கல்விக்காலம்/ஆராய்ச்சிக்காலம் முடிவடைந்து பட்டம் பெறப்போகிற நேரத்தில்தான் பால் கடுமையான நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதைக் கண்டறிகிறார். உடைந்து போகிறார்கள் பாலும் அவரது குடும்பத்தினரும். ஆனாலும் அடுத்தடுத்து ஆக வேண்டியவை பற்றிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன. புற்றுநோய்க்கான சிகிச்சைகள் தொடங்கும் முன்னர்  பாலும் அவரது காதல் மனைவி லூசியும் செயற்கைக் கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்கிறார்கள்.

புத்தகம் எழுதவேண்டும் என்கிற தனது நீண்டகால ஆசையை இப்போது நிறைவேற்ற முடிவு செய்கிறார் பால்.

மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக இருப்பது உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் ஒருவரை எந்தளவு பலவீனமாக்கும் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. கிட்டத்தட்ட ஒன்பது மணி நேரங்களுக்கு தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழலும் ஏற்படலாம். உடல் உழைப்பும், பணிச்சுமையும் ஏற்படுத்துகிற மன அழுத்தமும் ,சோர்வும் பல மருத்துவர்களை தற்கொலை மாதிரியான விபரீத முடிவை எடுக்குமளவு தள்ளியிருக்கின்றன. எத்தனையோ மரணங்களை எதிர்கொண்ட ஒரு மருத்துவர் தன் மரணத்தையே நிதானமாக எதிர்கொள்கிற மனநிலை கிட்டத்தட்ட ஒரு ஞானியின் மனநிலைக்கு ஈடானது . 


I began to realize that coming in such close contact with my own mortality had changed both nothing and everything. Before my cancer was diagnosed, I knew that someday I would die, but I didn’t know when. After the diagnosis, I knew that someday I would die, but I didn’t know when. But now I knew it acutely. The problem wasn’t really a scientific one. The fact of death is unsettling. Yet there is no other way to live.

புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதிலிருந்து தொடர்ச்சியான சிகிச்சைகள் எதுவும் பலனளிக்காமல்  கிட்டத்தட்ட இரண்டாண்டு காலத்துக்குப் பின் இவ்வுலகிலிருந்து விடைபெறுகிறார் பால். பிறந்து எட்டே மாதங்களான தன் மகளுக்கு எழுதிய கடிதத்தில் இப்படிச் சொல்கிறார் .


There is perhaps only one thing to say to this infant, who is all future, overlapping briefly with me, whose life, barring the improbable, is all but past.

That message is simple:

When you come to one of the many moments in life where you must give an account of yourself, provide a ledger of what you have been, and done, and meant to the world, do not, I pray, discount that you filled a dying man’s days with a sated joy, a joy unknown to me in all my prior years, a joy that does not hunger for more and more but rests, satisfied. In this time, right now, that is an enormous thing.

கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம். வாழ்வு குறித்தும் உடலின் இயக்கம் குறித்தும் மரணம் குறித்தும் நாம் கொண்டிருக்கிற மதிப்பீடுகள் நிச்சயம் மாறலாம்.

When Breath Becomes Air - Dr.Paul Kalanithi - Penguin Randomhouse UK - Rs.590

ஆன்லைனில் வாங்க : லின்க் இங்கு
Kindle பதிப்பு வாங்க: லின்க் இங்கு (விலை: ரூ.350)