பொதுவாக
ஃபாண்டஸி (fantasy) எனப்படும் கற்பனைக் கதைகள் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. நிஜ உலகில் சாத்தியப்படாத நிகழ வாய்ப்பே இல்லாத... பல விஷயங்கள்,கற்பனையான பல வகை மனிதர்கள்,விலங்கினங்கள்.கடவுள்கள்,தேவதைகள்,பூதங்கள்... இப்படி எல்லையே இல்லாமல் பறந்து விரிந்து கிடப்பது இந்த கற்பனை/மாய உலகங்கள்... இவ்வாறான உலகங்களையும் மக்களையும் பற்றிய விந்தை கதைகளை முதலில் நமக்கு வரலாறுகளும்..புராணக்கதைகளும் சொல்லி வந்தன.. பின் காலமாற்றத்தில்.. நாம் கதைகளில் படித்து கற்பனை செய்தவற்றையெல்லாம் தொழில்நுட்பத்தின் உதவியோடு திரையில் உயிர் கொடுத்து உலவ விட ஆரம்பித்தனர்..!! ஆங்கிலத் திரைப்படங்களைப் பொறுத்தவரையில் அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸ் தொழில் நுட்பங்களில் பல உயரங்களைத் தொட்டவர்கள் ஆதலால் மிகச் சிறந்த
ஃபாண்டஸி திரைப்படங்களை இந்த உலகுக்கு அவர்களால் தர முடிந்தது...!!
ஸ்டார் வார்ஸ் தொடங்கி லார்ட் ஆப் த ரிங்க்ஸ், நார்னியா, ஹாரி பாட்டர்,பேட்மேன்,சூப்பர் மேன்,ஸ்பைடர் மேன், அவதார் வரை உச்சபட்ச தொழில்நுட்பத்தின் துணையோடு ஹாக்வார்ட்ஸ்,பண்டோரா,மிடில் எர்த் என பலவேறு மாய/கற்பனை உலகங்களையும்...அவற்றின் அதிசய உயிரினங்களையும்...அந்த உலகத்து நாயகர்களின் சாகசங்களையும் திரைப்படங்களில் பார்த்து மகிழ்ந்து வந்திருக்கின்றோம். திரைப்படங்களின் உருவாக்கத்திற்குப் பின்னாலுள்ள அறிவியல் புரியாத வயதில் அவற்றைப் பார்த்து ஏற்பட்ட பிரமிப்பை விட பல மடங்கு அதிகமான ஆச்சரியமும் பிரமிப்பும் அந்த திரைப்படங்களின் உருவாக்கத்திற்கு பின்னணியில் உள்ள உழைப்பையும் கஷ்டங்களையும் அறிந்துகொள்ளும்போது ஏற்பட்டது.
இப்படியான ஒரு
ஃபாண்டஸி திரைப்பட தொடரை எடுத்துக்கொண்டு அந்த திரைப்படத்திற்கான கதை முதன் முதலில் புத்தகமாக உருவானது தொடங்கி, அதிலுள்ள பாத்திரங்கள், கதை நிகழ்கின்ற உலகம், காலம், அந்த கற்பனை உலகின் மக்கள் பேசுகின்ற மொழி, அவர்களுக்கு இடையேயான உள்நாட்டு பிரச்சனைகள்,அந்தந்த நாடுகளின் வரலாறுகள், இத்தனையையும் சொல்லி இவையெல்லாவற்றையும் மூன்று பாகங்கள் கொண்ட ஒரு திரைப்படத்தினுள் அடக்கி திரையில் கொண்டு வர படக்குழுவினர் பட்ட கஷ்டங்கள் ,படத்துக்காக அமைக்கப்பட்ட செட்கள்,
புதுமையான கேமரா டெக்னிக்ஸ், ஸ்பெஷல் எபெக்ட்கள், படப் பிடிப்பின்போது படக்குழுவினர் எதிர்கொண்ட சவால்கள், எடிட்டிங் உத்திகள்,ஆடையலங்கார வடிவமைப்புகள்,நடிகர்களைத் தேர்வு செய்த விதம்,பின்னணி இசையின் உருவாக்கம்..இப்படி ஆதி முதல் அந்தம் வரை அக்குவேறு ஆணிவேராக பிரித்து மேய்ந்து ஒரு புத்தகம் வந்தால் எப்படி இருக்கும்...??
அந்த Cast & Crew வோடு மொத்தமாக பயணித்த ஒரு உணர்வைத் தருமல்லவா...??
அப்படித்தான் இருந்தது எனக்கு நண்பர் கருந்தேள் ராஜேஷ் எழுதி ஹாலிவுட் பாலா மற்றும் கொழந்த கணேஷ் அவர்களின் வடிவமைப்பில் வெளிவந்திருக்கின்ற வார் ஆப் த ரிங் (War of the Ring) மின்புத்தகத்தை படித்தபோது.ராஜேஷ் முதன் முதலில் தமிழில் பதிவெழுத ஆரம்பித்தலிருந்து அவரது தளத்தின் அத்தனை கட்டுரைகளையும் படித்து வந்திருக்கின்றேன்.சின்னதாய் ஒரு விஷயம் சொன்னாலும் அதற்கு பின்னால் ஒரு உழைப்பும், ஹோம்வொர்க்கும் கட்டாயம் இருக்கும்.ஹாலிவுட் பாலா வின் fx மற்றும் பிக்ஸார் ஸ்டோரி படித்தவர்களுக்கு அவரைப்பற்றி நான் சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. LOTR சீரிஸ் பற்றி ராஜேஷ் எழுதத் தொடங்கியபோது அந்த சீரிஸின் ஒரு திரைப்படத்தையும் நான் பார்த்திருக்கவில்லை...படத்தைப் பற்றியும் எதுவும் தெரியாது..!!நான் ஹாரி பாட்டர் விரும்பி ஆதலால் LOTR சீரிசை தொடர்ந்து படிக்கவுமில்லை. ஆனால் LOTR மின்புத்தகம் பற்றிய ராஜேஷின் அப்டேட்டுகள் ஆர்வத்தைத் தூண்ட ஆரம்பித்தன. ஒரு வழியாக மின்புத்தகம் நிறைவடைந்து வெளிவந்த பொழுது ஒரு பெரிய நடிகரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்ப்பதற்கு ஈடான ஆர்வத்தோடு படிக்கத்தொடங்கினேன். முழுமையாக படித்து முடிக்க எனக்கு 15 நாட்கள் தேவைப்பட்டன.
பின்னே... லார்ட் ஆப் த ரிங்க்ஸ் புத்தகங்களை எழுதியவரான டோல்கீன் (Sir.JRR.Tolkien) மற்றும் LOTR திரைத் தொடரின் இயக்குனர் பீட்டர் ஜாக்சன் (Peter Jackson)ஆகியோர் அளித்த நூறு சதவீத உழைப்பில் ராஜேஷும், பாலா,கொழந்த குழுவினரும் ஐம்பது சதவிகித உழைப்பை இந்த மின் புத்தகத்திற்கான உருவாக்கத்திலும் தகவல் சேகரிப்பிலும் அளித்திரும்போது அந்த புத்தகத்தை படிக்கும் நான் ஒரு ஐந்து சதவிகித உழைப்பையாவது தருவது தான் இவர்களுக்கு நான் தரக் கூடிய மரியாதையாக இருக்கும். LOTR சீரிஸின் மூன்று திரைப்படங்களின் எக்ஸ்டெண்டட் வெர்ஷன்களையும் தரவிறக்கி பார்த்துவிட்டு, பின்னணி இசைக் கோர்ப்புகளை முழுவதும் கேட்டுவிட்டு மின்புத்தகத்தை மீண்டுமொரு முறை மேய்ந்துவிட்டே இந்த பதிவினை எழுதிக்கொண்டிருக்கின்றேன்.
'War of The Ring' மின்புத்தகத்தை உருவாக்கியவர்கள் |
Rajesh and JRR.Tolkien |
Hollywood Bala and Peter Jackson |
என்ன சொல்ல...!! எந்தவொரு வணிக நோக்கமுமில்லாமல் நேரத்தையும் உழைப்பையும் செலவிட்டு கிட்டத்தட்ட Lord Of The Rings-க்கான ஒரு தமிழ் என்சைக்ளோபீடியாவை உருவாக்கியிருக்கின்றார்கள்...!! ஒரு முழுமையான Making of LOTR வீடியோ பார்த்த திருப்தியை அளித்தது இந்த வார் ஆப் த ரிங்ஸ் மின்புத்தகம்...!! ராஜேஷ் மற்றும் பாலா அண்ட் கோவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்...!! :) :)
கருந்தேள் ராஜேஷ் அவர்களின் தளம் இங்கு..!!
Image Courtesy: Original Uploaders
//எந்தவொரு வணிக நோக்கமுமில்லாமல் நேரத்தையும் உழைப்பையும் செலவிட்டு கிட்டத்தட்ட Lord Of The Rings-க்கான ஒரு தமிழ் என்சைக்ளோபீடியாவை உருவாக்கியிருக்கின்றார்கள்...!//
பதிலளிநீக்குஉண்மை.
ஆமா ... நம்ம கருந்தேள் வயசானதும் அப்படித் தான் வருவார்னு சொல்றீங்களோ? :)
@ஹாலிவுட் ரசிகன் //நம்ம கருந்தேள் வயசானதும் அப்படித் தான் வருவார்னு சொல்றீங்களோ? // ஆமாங்க.. :) :) யாரு கண்டா..?? தலைவர் டோல்கீன் மாதிரி தனி மொழிகளைக்கூட எதிர்காலத்தில் கண்டுபிடிக்கலாம்...!! :) :) ;)
பதிலளிநீக்குஅந்த மார்ஃபிங் ரொம்ப நல்லாஇருக்கு.. ஆமா அதுக்கு பேர் மார்ஃபிங் தான ?
பதிலளிநீக்குஅது என்ன ராஜேஷ் பத்தின பதிவுக்கு விஸ்வரூபம்ன்னு பேர் வைச்சு இருக்கிங்க எனி உள்குத்து ??
பதிலளிநீக்கு//அந்த மார்ஃபிங் ரொம்ப நல்லாஇருக்கு.. ஆமா அதுக்கு பேர் மார்ஃபிங் தான ?// ஆமாங்க..!! :) :)
பதிலளிநீக்கு//அது என்ன ராஜேஷ் பத்தின பதிவுக்கு விஸ்வரூபம்ன்னு பேர் வைச்சு இருக்கிங்க எனி உள்குத்து ??//
க.க.க.போ...!! :) :) :) ராஜேஷுக்கு ரொம்ப பிடிச்ச பெயர் இல்லையா அது.. அதான்.. :) :)