வியாழன், 22 டிசம்பர், 2016

டாப் 10 - ஃபேஸ்புக் பதிவுகள் - 2016


எல்லாரும் மாத்தி மாத்தி பட்டியல் போடுற இந்த நேரத்துல, நாமளும் ஒரு லிஸ்ட்ட போடுவோம்னு யோசிச்சேன். 2007 வாக்குல தான் ப்லாக் எல்லாம் படிக்க ஆரம்பிச்சது. இன்னதுன்னு வரைமுறை இல்லாம சினிமா தொடங்கி ,அறிவியல், பயணம், அரசியல், டெக்னாலஜி, கவிதை, சுயசொறிதல் உள்ளிட்ட எல்லாவகையான content எழுதுறதுக்கும் ஆளுங்க இருந்தாங்க. இப்ப ஃபேஸ்புக்லயும்,ட்விட்டர்லயும், மெயின்ஸ்ட்ரீம் மீடியாவுலயும் எழுதுறவங்கள்ள முக்கியமானவங்க எல்லாரையும் ப்லாக் வழியா தான் எனக்குத் தெரியும். இந்த evolutionல Google Reader காணாமலே போச்சு (இன்னமும் feedly வெச்சு ப்லாக் போஸ்ட் படிக்கிற ஜீவன் நானு).நமக்கு மூளைல அரைக்க இந்த மாதிரியான content தேவை. இப்போ ஃபேஸ்புக்ல அதே மாதிரி அட்டகாசமான content எழுதுறவங்க நெறைய பேர தேடிப்பிடிச்சு/தேடிப்படிச்சு சேத்து வெச்சுருக்கேன். அப்புடி படிச்சதுல randomஆ மனசுக்குப் புடிச்சத சேவ் அல்லது evernoteல clip பண்ணி வெச்சுருக்கேன். அதுல சிலத இங்க பகிர்ந்துக்கலாம்னு...!!
இதுல சிலர் முழுநேர எழுத்தாளர்களாகவும்/கவிஞர்களாகவும் இருந்தாலும்..ஃபேஸ்புக்ல அவங்க எழுதுனதுல எனக்கு ரொம்பப் பிடிச்சத மட்டும் இங்க போட்டு வெச்சுருக்கேன்.
***************************************************************************
மொதல்ல Karundhel Rajesh எழுதுன இந்த போஸ்ட். ராஜேஷ் அவரோட சைட்ல நெறைய எழுதுனாலும் அப்பப்ப fbல நச்சுன்னு சில போஸ்ட்ஸ் போடுவாரு. அப்டி ஒன்னுதான் இது.
https://www.facebook.com/rajesh.scorpi/posts/10153901617955987
***************************************************************************
அடுத்தது Bogan Sankar எழுதுன ’அப்பாக்களின் நாட்கள்’ங்குற போஸ்ட். கொஞ்சம் உணர்வுப்பூர்வமானதா இருந்தாலும் we need something to feel emotional every now and then... Isn't it ?
****************************************************************************
இந்த வருஷத்துல அதிகமா சேவ் பண்ணி வெச்சது Vijay Bhaskarvijay எழுதுன பதிவுகளா தான் இருக்கும். அறிவியல், கணிதம்,இலக்கியம், சொந்த அனுபவங்கள்னு கலந்துகட்டி ரொம்ப விவரமா எழுதுவாரு. புதுசா எதாவது புத்தகங்கள் பத்தி கண்டிப்பா தெரிஞ்சுக்கலாம். கணக்கு நமக்கு பீதியக் கெளப்புற ஒரு சப்ஜெக்ட்,.ஆனாலும் அத ரசிக்கிற மாதிரி எளிமையா எழுதுவார். விஜயுடைய பதிவுகள்ள சேவ் பண்ணி வெச்ச சிலது இங்க..!
தமிழிலக்கியம்- வெஸ்டர்ன் ஃபிலாசஃபி
https://www.facebook.com/meevijay8/posts/637526713006341
கணித மேதை ராமானுஜன் - கொள்கை/அரசியல்
https://www.facebook.com/meevijay8/posts/1029872007105141
******************************************************************************
Shan Shylesh
ஆளு நம்ம செட்டுன்னு நெனைக்க வைக்கிற ஆள். சென்னைலதான் இருந்தாலும் இன்னும் சந்திக்காத நண்பன்.சமகால அரசியல், relationships, பெண்கள் (Yes...!) பத்தி இவர் எழுதுற பல விஷயங்கள் ரொம்ப ரொம்ப sensibleஆ தோணும் எனக்கு. நெறைய எழுதுறதில்ல இப்போ. ஆனாலும் சின்னச்சின்னதா blurb மாதிரி தன்னுடைய கருத்துகள சொல்லிட்டே இருப்பாரு. அதுல எனக்குப் பிடிச்ச ஒரு போஸ்ட்.
The delusion of choice : பெண்ணியமும் நுண்ணடிமைத்தனமும்
https://www.facebook.com/iKoothaadi/posts/1283233528356528
இறைவி படம் பத்தி
https://www.facebook.com/iKoothaadi/posts/1207730729240142
எளிமைவாதம் : ஏன் வாசிப்பதில்லை நாம்.
https://www.facebook.com/iKoothaadi/posts/1210646458948569
********************************************************************************
Karl Max Ganapathy
மாக்ஸுக்கு நான் சர்டிஃபிகேட் தர வேண்டியதில்ல. அவருடைய அரசியல் கட்டுரைகளுடைய தீவிரத்தன்மையும் தெளிவும் பத்தி எல்லாருக்கும் தெரியும். அவரு எழுதி மொதல்ல நான் படிச்ச போஸ்ட் இது
பூவரசி பிரச்சனையும் அது சார்ந்த விளக்கங்களும்
https://www.facebook.com/gkarlmax/posts/1235980709768783
********************************************************************************
Sam Nathan
ஓஷோவைப் பத்திக் கேள்விப்பட்டாலோ/படிச்சாலோ இவர் ஞாபகம் வர அளவுக்கு அறிமுகப்படுத்தியிருக்காரு.
அதுமட்டுமில்ல..ஏகப்பட்ட விவாதங்கள்.. எழுத்தாளர்களை அறிமுகப்படுத்துறது..அது இதுன்னு இன்னும் நெறைய...!
கொண்டாட்டமான personality..!!
இது அவரு போன வருஷம் எழுதுன போஸ்ட் தான். ஆனாலும்..பட்டாசான போஸ்ட்
தஞ்சை பிரகாஷ் - பாலியல் - சமகால இலக்கியம்
https://www.facebook.com/sam.nathan.18/posts/1188276434524315
சாம் இப்படியும் எழுதுவாரான்னு ஆச்சரியப்பட வெச்ச (கொஞ்சம் எமோஷனல்) போஸ்ட்..!
https://www.facebook.com/sam.nathan.18/posts/1222223987796226
கடைசியா இந்த லெட்டர்...! இது புனைவா இல்ல நிஜமான்னு எல்லாரும் கேள்வி கேக்குறதுலயே எந்தளவு பாதிப்பு இருந்திருக்கும்னு புரியுது. ரொம்ப அழகான கடிதம்..!!
இந்த இரவை என்னுடன் கழித்தவனுக்கு
https://www.facebook.com/sam.nathan.18/posts/1482567748428514
*************************************************************************
மாம்ஸ் Lakshmi Saravanakumar எழுதுன இந்த போஸ்ட்..!
Enough said..!
”பிறக்க இருக்கும் என் மகளுக்காக”
https://www.facebook.com/saravanakumar.lakshmi/posts/1244146252262210
*********************************************************************************
வாசுகி பாஸ்கர்
வருஷக்கடைசில தான் இவருடைய பதிவுகள தொடர ஆரம்பிச்சேன். சமூகநீதி,அறம் சார்ந்து முன்வைக்கிற கருத்துகள், அந்த தெளிவு simply amazing.
நான் படிச்ச அவருடைய முதல் போஸ்ட்
போராட்டங்களையும் போராடுபவர்களையும் கேலிக்குள்ளாக்குகிறவர்கள் பற்றி
இடஒதுக்கீடு பற்றிய பொதுபுத்தி
https://www.facebook.com/photo.php?fbid=10210525581791526&set=a.10202327954975979.1073741837.1104997241&type=3&theater
*****************************************************************************
Madhu Sridharan
இவரை தொடர்பவர்களுக்கு நிச்சயம் இந்த எண்ணம் தோன்றியிருக்கும். சின்ன பகவதி, சின்னம்மா வரிசைல சின்ன சுஜாதா ங்குற பட்டத்துக்கும் பயங்கரமான போட்டி வரும் பட்சத்துல he is one tough contender...!
அறிவியல்-ஆன்மிகம்-இலக்கியம் காம்போ ல இப்போதைக்கு read-worthy contents (எனக்கு) நெறைய கெடச்சது இவரோட எழுத்துலதான்
இவருடைய facebook பதிவுகள Random Thoughtsனு pdfஆகவே தொகுத்து வெச்சுருக்கார் (கேட்டு வாங்கிக்கங்க - worthy of your time)
சாம்பிளுக்கு அவருடைய போஸ்ட்ஸ் சில
https://www.facebook.com/madhu.sridharan.14/posts/1532475430103024
********************************************************************************
இவரு என்ன எழுதுனாலும் படிப்பேன். புதுசா கத்துக்க ஏதாவது இருக்கும்னு நெனைக்கிற இன்னொருத்தர் கவிஞர் Raja Sundararajan அவர்கள்.
உதாரணத்துக்கு ஒரு ரெண்டு போஸ்ட் மட்டும் கீழ
’அருவி’ங்குற ஒத்த வார்த்தைய வெச்சு ஆடுன ஆட்டம்
https://www.facebook.com/raja.sundararajan.9/posts/1364780540222448
World Diabetes Day அன்னைக்கு எழுதுனது
https://www.facebook.com/raja.sundararajan.9/posts/1350682208298948
*********************************************************************************
Saravanan Chandran அண்ணனோட எல்லா பதிவுகளுமே ஒரு கத சொல்லும். விளையாட்டு, உடல் உறுதி, இன்னும் நிறைய விஷயங்கள் பத்தி அடிக்கடி ஸ்டேட்டஸ் போட்டுட்டே இருப்பாரு. அதுல ஒரு ஸ்டேட்டஸோட லின்க் கீழ
அப்புறம் இந்த ‘கஞ்சா’ போஸ்ட் ;)
https://www.facebook.com/saravanan.chandran.77/posts/1090816541026593
அஜ்வாவுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்ண்ணே...!!
************************************************************************************
Venba Geethayan எழுதுற கிருஷ்ணார்ப்பணம் சீரிஸ் :) மொதல்ல ஜெயமோகன் வெண்முரசுல எழுதுனத ஷேர் பண்ணிருக்காங்களோன்னு தான் நெனச்சேன் அப்புறம்தான் அது அவங்களோட எழுத்துன்னு தெரிஞ்சுது. மொழிநடை செம்ம <3 span=""> <3 span=""> <3 span="">
நான் படிச்ச மொதல் கிருஷ்ணார்ப்பணம் போஸ்ட்
https://www.facebook.com/venba.geethayan/posts/534540606670812
************************************************************************************
Vidhya Vijayaraghavan நிறைய long reads எதுவும் எழுதறதில்ல. ஆனாலும் நான் படிச்ச முதல் போஸ்ட்
Sharp, sarcastic அண்ட் கலாய் queen ( Digital India..?? Ole da சாம்பிள் :D :D :D )
பெண்களுடைய tolerance பத்தி
https://www.facebook.com/vidhya.vijay.911/posts/10205983878270621
************************************************************************************
Bavachelladurai Bava அவர்கள் எழுதுன வைக்கம் முகமது பஷீர் பத்தின இந்த போஸ்ட். <3 span=""> <3 span="">
அந்த பேப்பூர் சுல்தானை போய் பாக்கனும்னு தோணவெச்ச எழுத்து
************************************************************************************
காடோடி நாவலை எழுதுன நக்கீரன் நக்கீரன் அவர்கள் குறைய நாட்களுக்கு முந்தைய சென்னை புயலினால் ஏற்பட்ட மரச்சேதங்கள் குறித்து எழுதியிருந்த இந்த போஸ்ட்
ஷேர் பண்ண என் மச்சானுக்கும் Vedha Arjun சேத்து நன்றிகள்
************************************************************************************
த.ராஜன் இந்த ஆல்பத்துல தான் படிச்ச புத்தகங்கள் பத்தி எழுதியிருக்கிற எல்லாமே பிடிச்சது தான். சில அற்புதமான புத்தகங்கள் எனக்கு அறிமுகமானது இதன் வழியாதான்.
************************************************************************************
Lekha Ramasubramanian இவங்க புத்தகங்கள், சினிமா பத்தி எழுதுற எல்லாமுமே செம்ம போஸ்ட்கள். அதுல எனக்கு ரொம்பப் பிடிச்ச சில
ராணியுடன் ஒரு தேநீர் விருந்து
https://www.facebook.com/lekha.ramasubramanian/posts/10153309732968039
எம்.டி.வாசுதேவன் நாயரின் "இறுதி யாத்திரை"
https://www.facebook.com/photo.php?fbid=10153461385083039&set=a.439473748038.215838.685783038&type=3&theater
************************************************************************************
கட்டக்கடைசியா ரொம்ப சமீபத்துல படிச்ச Akhil Kumar எழுதுன இந்த போஸ்ட். நம்மளமாதிரி யாருக்காக எழுதுறோம் எதுக்காக எழுதுறோம்னு கேள்வி எழுப்பி அதுக்கான பதிலையும் எழுதியிருக்காரு.
எழுத்தெனப்படுவது:
https://www.facebook.com/Ksrakhil/posts/1154825611270125
***********************************************************************************
பிற்சேர்க்கை:
’டாப் டென்’ னு தலைப்பு வெச்சுட்டு இஷ்ட சிகைக்கு போட்டுத் தள்ளியிருக்கியே ஏண்டான்னு கேட்டீங்கன்னா.. அது ஒரு click bait..கவர்ச்சிக்காக வெச்ச டைட்டில். ’படித்ததில் பிடித்தது’ மாதிரியான ரசவடைய விட ‘டாப் 10’ நறுக்குன்னு இருக்கு.
புரியாத தன்னிலை விளக்கம்:
புதுசா ஒருத்தரை சந்திக்கிறோம்..பழகி புரிஞ்சு நல்லது கெட்டது எல்லாத்தையும் தெரிஞ்சுக்குறோம். அதுக்கப்புறம் அவங்களுடைய அரசியலோ, கொள்கையோ, ரசனையோ நம்மளவிட மாறுபட்டு இருந்தா..அது நமக்கு ஒத்துவராதுன்னு தெரிஞ்சா விலகுறதுதான் பெஸ்ட் ஆப்ஷன்னு நெனப்போம். அப்படி விலகிட்டா அவங்களோட பக்கத்து நியாயங்களை /பார்வையை நம்மளால தெரிஞ்சுக்கவே முடியாம போய்டும். It is equally important to listen to the other side. வாதம் பண்ணி புரியவைக்க சொல்லல. குறைந்தபட்சம் காதுகொடுத்து கேக்குறதுக்காவது பக்குவமில்லைன்னா எவ்வளவுதான் தேடித் தேடி இலக்கியம் படிச்சாலும் அதால எதுவும் பயனில்லைங்குறது என்னுடைய தாழ்மையான கருத்து.Difference of opinionங்குற ஸ்கேல கைல எடுத்துட்டா இந்த இன்னொரு perspectiveங்குற விஷயத்தை கடைசி வரைக்கும் பாக்கவே முடியாமப் போயிடும்ங்குறதனால..புதுசா கத்துக்குற/தெரிஞ்சுக்குற விஷயங்கள்ல எந்தவிதமான முன் முடிவும் இல்லாம தான் அனுகுறேன்/வேன்...!!
மத்தபடி பத்தி பத்தியா எழுதித்தள்ளுன எல்லாருக்கும்
எல்லையில்லா அன்பு...!! <3 span=""> <3 span=""> <3 span=""> நிறைய எழுதுங்க..! என்ன மாதிரி எவனோ ஒரு கிறுக்கன் தேடிப் படிச்சுட்டு இருப்பான்..!! :);)

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக