நேற்று காலை 7.30 மணிக்காட்சி
சங்கம் திரையரங்கில் வேட்டை பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பி காசி திரையரங்கம்
வந்து 11.30 மணி காட்சியில் நண்பனும் பார்த்தாகிவிட்டது.
முன்குறிப்பு: கதை
தெரிந்த கதையாக இருந்தாலும் காட்சிகளை விவரித்தால் சுவாரசியம் குறைந்து
விடுமென்பதால் கொஞ்சம் அடக்கியே வாசித்திருக்கின்றேன்.
ஷங்கர் இயக்கம்,ஏற்கனவே
இந்திய அளவில் சூப்பர் ஹிட்டான 3 இடியட்ஸின் ரீமேக்,ஆரவாரமில்லா ரிலீஸ்,
ஃப்ரெஷ்ஷான விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், இலியானா என பெரிய ஸ்டார்காஸ்ட், இப்படி
எதிர்பார்ப்பைத்தூண்டும் விஷயங்கள் ரொம்பவே அதிகம்.எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே
ஈடு செய்திருக்கின்றார்கள்.
கதை எல்லோருக்குமே தெரிந்த
விஷயமாக இருந்தாலும் படத்தின்மேல் பெரிதாய் ஆர்வம் வரக் காரணம் ஷங்கர்.அவரின் முதல்
ரீமேக் இது.முதன் முதலில் 3 இடியட்ஸ் பார்த்தபோது இந்த படத்தைத் தமிழில் எடுத்தால்
எப்படி திரைக்கதை அமைப்பார்கள்...யாரெல்லாம் நடிப்பார்கள்..என நிறைய
யோசித்திருக்கிறேன்.ஷங்கர் இயக்கம் என்றவுடன் மகிழ்ந்த மனது அமீர்கான் கேரக்டரில்
விஜய் என்றறிந்தவுடன் பகீரென்றது...குத்து பாட்டு...பறந்தடிக்கிற ஃபைட் என மசாலா கலந்து
பஞ்சர் ஆக்கிவிடுவார்களோ என பயந்தேன்.நல்ல வேலை அப்படி எதுவும் நடக்கவில்லை.
பஞ்சவன் பாரிவேந்தனாக
விஜய்... என்ன சொல்வது இவரை... சச்சின்,காவலனுக்குப் பிறகு இப்படி ஒரு Soft, Subtle பெர்ஃபார்மன்ஸில் விஜய்யை
பார்ப்பதே ஆச்சரியமான,ஆறுதலான விஷயமாக இருந்தது.மனிதர் அப்படி பிய்த்து
உதறியிருக்கின்றார் நடிப்பில்... சின்ன சின்ன ரியாக்ஷன்ஸ், பாடி லாங்குவேஜ்,
டயலாக் டெலிவரி என அத்தனையிலும் மொத்தமாய் ஸ்கோர் செய்கின்றார் விஜய்.
சேவற்கொடி செந்திலாக ஷர்மான் ஜோஷி கேரக்டரில் ஜீவா, தான் இந்த
பாத்திரத்திற்கான மிகச்சரியான தேர்வு என நிரூபித்திருக்கின்றார்.முதலில் பாரியோடு
பழகுவதில் தயக்கம் காட்டுவதாகட்டும், மாடியிலிருந்து குதித்து அடிபட்டு பின் தேறி
வந்து தன்னம்பிக்கையொடு இண்டர்வியூவில் பேசும் காட்சிகளாகட்டும்...Jeeva at his best… என்றுதான் சொல்லவேண்டும்.வெங்கடச
மாதவன் ரோலில் ஸ்ரீகாந்த், அதிகம் ஸ்கோப் இல்லாவிட்டாலும் தனக்கான காட்சிகளில் உணர்வுப்பூர்வமாக
சிறப்பாகவே செய்திருக்கின்றார்.இலியானா கேடிக்குப் பிறகு தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார்.செம்ம
கியூட்.. ;) J நம்ம ஊருக்கு பரிச்சயமில்லாத
சைஸ் ஜீரோ..ஸ்லிம் பியூட்டியாக...அழகாய் இருக்கின்றார்... பாடல்களில் ஷகிரா ஸ்டைல்
ஹிப் டான்ஸ் சூப்பர்... J
திரைப்படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ரெண்டு பேர் சதுர் பாத்திரத்தில்
ஸ்ரீவத்ஸனாக வரும் சத்யனும், பிரின்சிபால் விருமாண்டி சந்தானமாக கலக்கியிருக்கும்
சத்யராஜும் தான்.கொஞ்சமே கொஞ்சம் நாடகத்தனமாய் இருந்தாலும் ரெண்டு பேருமே
அவரவர்கள் பாத்திரங்களில் பட்டைய கிளப்பிருக்கின்றார்கள்..!!
பாடல்களிலும் சரி..பின்னணி இசையிலும் சரி... ஹாரிஸ் ஜெயராஜிடம் நன்றாக வேலை
வாங்கியிருக்கின்றார் ஷங்கர்.ஹாரிஸும் தனது வழக்கமான டெம்ப்ளேட் ட்யூன்களை விட்டுவிட்டு
கொஞ்சம் வித்தியாசம் காட்டியிருக்கின்றார். இவ்வளவு கலர்ஃபுல்லாகவும்..யூத்ஃபுல்லாகவும்
இருக்கின்ற ஒரு கல்லூரி சார்ந்த கதைக்கு
மனோஜ் பரமஹம்ஸாவின் ஒளிப்பதிவு மிகப் பெரிய பலம்.சுஜாதா இல்லாத குறையை
கார்க்கி தீர்த்துவைத்திருக்கின்றார்.அவ்வளவு அருமையான ஷார்ப்பான வசனங்கள்...
மொத்தத்தில் 2012ல் முதல் படமே விஜய்க்கு மிகப்பெரிய ப்ளாக்பஸ்டராக
அமையுமென்பதில் சந்தேகமே இல்லை...!!!
நண்பன் – ஆல்ல்ல்ல்ல்ல் இஸ்ஸ்ஸ்ஸ் வெல்ல்ல்ல்...!!!!
பின்குறிப்பு : வேட்டை விமர்சனம் அடுத்த பதிவில்...!!
நண்பன் படம் குறித்த இதுகாறும் வந்த அனைத்து பதிவாளர்களின் விர்சனத்தையும் (அனேகமாக) படித்து முடித்து விட்டேன். ஆனால் சொல்லிவைத்தாற்போல் அனைவருமே இந்த படத்தில் வரும் ஒரு சில அருவருப்பான காட்சிகளைக் குறித்து விமர்சிக்க தவறி விட்டனர் அல்லது தவிர்த்துவிட்டனர். கற்பழிப்பது (கற்பிப்பது) குறித்து இத்தனை நீண்ட அங்கலாய்ப்பு அவசியமா? அதைப்போலவே கொங்கைகள் குறித்தும், குசுவாசம் குறித்தும் இத்தனை வியாக்கியானம் தேவையா? குழந்தைகளோடு, குறிப்பாக பெண்குழந்தைகளோடும் சகோதரிகளோடும் படம் பார்க்கும்போது உறுத்துறது. ஒரு நல்ல படத்தில் இது தேவை இல்லை என்றே கருதுகிறேன்
பதிலளிநீக்கு@அனானி உங்கள் கருத்தை ஒப்புக்கொள்கின்றேன் நண்பரே...அந்த கற்பித்தல்-கற்பழித்தல்,கொங்கை,குசுவாசம் ஆகியன பற்றிய காட்சிகளில் கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கலாம் தான்...நகைச்சுவைக்காகவும்..கமர்ஷியல் வேல்யூவுக்காகவும் சேர்க்கப்பட்டிருந்தாலும்,குறிப்பிட்டு சொல்ல வேண்டிய நல்ல விஷயங்கள் நிறைய இருப்பதால் இவை பெரிய குறையாக இல்லாமல் போயிருக்கலாம்.மேலும் இவற்றை விட அருவருப்பான,கேவலமான காட்சிகளையும் வசனங்களையும் நாம் நகைச்சுவை என்ற பெயரில் பார்த்து வந்திருக்கின்றோம்.அவற்றிற்கு இது கொஞ்சம் பரவாயில்லை என விட்டு விடலாம்...
பதிலளிநீக்கு