முன்பே மூன்று புத்தகங்கள் எழுதியிருந்தாலும் இது யுவகிருஷ்ணா அண்ணனின் முதல் புதினம் என்பதால் மிகுந்த ஆவலோடு காத்திருந்தேன் 'அழிக்கப் பிறந்தவனு'க்காக.வலைப்பூவில் வெளியிட்டிருந்த அத்தியாயங்கள் வேறு ஏகத்துக்கும் ஆர்வத்தைக் கிளப்பிவிட்டபடியால்... வெளியிட்ட அன்றே வாங்கியாயிற்று இந்த புத்தகத்தையும்... அன்றிரவே படித்தும் முடித்தாயிற்று.
ஒரு கொலை,ஒரு போலிஸ் கம்ப்ளைன்ட், இதனைத் தொடர்ந்து கோர்வையாக நடக்கும் விசாரணைகளும்,தொடர் கொலைகளும் விறுவிறுப்பை அதிகமாக்குகின்றன.பர்மா பஜார் பெருந்தலை காதர் பாய், அவரின் சிஷ்யன் மாரி, அவனுடைய நண்பன்...இப்படி வரிசையாக அறிமுகமாகும் ஒவ்வொரு கேரக்டரும் கதையை அடுத்தடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்கின்றன.
தட தடவென எக்ஸ்பிரஸ் ரயில் பயணம் போல அப்படியொரு வேகமான நடை கதையிலே... கதாபத்திரங்களின் படைப்பு, அவர்களின் பின்னணி, அவர்கள் புழங்கும் இடங்கள்...அத்தனையிலும் அப்படி ஒரு டீட்டெய்லிங் ().பர்மா பஜார் வியாபாரம்,திருட்டு வி.சி.டி கும்பல், கடல் வழி கடத்தல்,சினிமா விநியோக உரிமை, என கொடுத்திருக்கும் ஒவ்வொரு டீட்டெய்லுக்கும் ரொம்பவே உழைத்திருப்பது தெரிகின்றது..
ஹாலிவுட் இயக்குனர்களான மார்ட்டின் ஸ்கார்சீஸ், கை ரிட்சி, படங்களில் பார்ப்பது போல ஒரு இருள்/நிழல் உலகத்தை நம் கண் முன்னே மிகத் துல்லியமாகக கொண்டுவந்து நிறுத்தியிருக்கின்றார். ஒருவரின் நிழலில் இன்னொருவர் உருவாவதும்... வளர்ந்தபின் வளர்த்தவர் மேலேயே பாய்வதும் ஆகிய நிழல் உலகின் 'Survival of the Fittest ' கொள்கைகளை மிக சிறப்பாகவே சொல்லியிருக்கின்றார்.மாரியின் காதல் எபிசோடை கொஞ்சம் விரிவாகச் சொல்லியிருக்கலாம் என்பது என் வருத்தம்.. :) :)
ஒரு கமர்ஷியல் த்ரில்லர் சினிமாவுக்குத் தேவையான அத்தனை அம்சங்களும் கொண்டிருக்கின்றான் இந்த 'அழிக்கப் பிறந்தவன்'.
யுவா அண்ணனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்...!!!
அடுத்த நாவலை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றேன்...!!
டிஸ்கி:
நன்றி தோழர்!
பதிலளிநீக்குலக்கியின் வெற்றியே அவரது எழுத்து நடைதான் அரிதாரம் பூச முனையாத சாமான்யனின் எழுத்து அவரது !
பதிலளிநீக்கு