Got an opportunity to meet with this amazing human being... Artist, Writer, Padmashri Manohar Devadoss sir (85) for an interview.
Inspirational என்ற ஒற்றை சொல்லில் எல்லாம் சொல்லிட முடியாத அளவு Inspirationalஆன ஒருவர். மதுரையில் இருக்கிற புராதன கட்டிடங்கள், கோவில் கோபுரங்கள், சித்திரைத் திருவிழா, தமிழகத்தின் பிற ஊர்களுடைய சிற்பங்கள், மெட்ராஸின் பழைய கட்டிடங்கள் என நூற்றுக்கணக்கான கலாச்சார அடையாளங்களை அற்புதமான நுணுக்கமான மை- கோட்டோவியங்களாக (Ink/Pen Sketch Drawings) வரைந்திருக்கிறார் 85 வயதான ஓவியர்/எழுத்தாளர் மனோகர் தேவதாஸ்
அது போக இவருடைய முதல் புத்தகமான 'Green Well years' தொடங்கி Multiple facets of My Madurai, அண்மையில் வெளியான Madras Inked வரையிலும் என 8 புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.
இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம், இத்தனையையும் Retinitis Pigmentosa என்கிற மரபணுக் குறைபாட்டின் காரணமாகவும், கண்புரையின் காரணமாகவும் அவருடைய பார்க்கும் திறன் கொஞ்சம் கொஞ்சமாய்க் குறையத் தொடங்கி முற்றிலும் பார்வை இழந்து கொண்டிருக்கும்போதே செய்திருக்கிறார்.
கிட்டத்தட்ட இருபது பதிப்புகளைக் கடந்துவிட்ட இவருடைய புத்தகங்களின் விற்பனையிலிருந்து இதுவரை கிடைத்த, கிடைக்கிற ராயல்டி தொகை மொத்தத்தையும் மதுரையில் தான் படித்த பள்ளிக்கும், அமெரிக்கன் கல்லூரிக்கும், இவருடைய பார்வைக் குறைபாட்டைக் கடந்து ஓவியங்கள் வரைய உதவிய அரவிந்த் கண் மருத்துவமனைக்கும், சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனைக்கும் தொடர்ந்து வழங்கிவருகிறார்.
மனோகர் அவர்களின் 8 புத்தகங்களில் மூன்று புத்தகங்கள் அவருடைய மனைவி மஹிமா அவர்களைப்பற்றி எழுதியவை. தன்னுடைய எல்லா நேர்காணல்களிலும் மனோகர் அவர்கள் தவறாமல் குறிப்பிடும் ஒரு விஷயம் அவருடைய மனைவி மஹிமா தனக்கு எத்தனை உறுதுணையாகவும் ஆதரவாகவும் இருந்தார் என்பதைத்தான்.
திருமணமாகி சில பல ஆண்டுகள் கடந்த பின்னர் இவருக்கு பார்வைக் குறைபாடு ஏற்படத்தொடங்கிய அதே நேரத்தில் தான், மஹிமா அவர்கள் ஒரு சாலை விபத்தில் சிக்கி முதுகெலும்பில் அடிபட்டு கழுத்துக்கு கீழ் உடல் முழுவதுமாக செயலிழந்து (Quadriplegic) போகிறார். அதன்பின் 35 ஆண்டுகள் சர்க்கர நாற்காலியின் துணையோடே (wheelchair bound) வாழ்ந்திருந்தாலும் மனோகர் அவரை கருத்தாக கவனித்துக் கொண்டிருந்திருக்கிறார். "When she became wheel chair bound, I promised her she would never get bedsores. And I kept my promise for 35 years" என்று முகம் மலரக் குறிப்பிடுகிறார். "We were not a couple who'd say Oh dear I'd love you for eternity or things like that. The love was just always there and we enjoyed every moments of our life despite of what it put through" என்றும் சொன்னார்.
இருவருக்குமான உடல் உபாதைகளையும் குறைபாடுகளையும் தாண்டி மிக மிக நிறைவான மகிழ்ச்சியான ஒரு வாழ்வை அவர்கள் வாழ்ந்திருப்பதை மனோகர் அவர்களுடைய பேச்சிலிருந்தே அறிந்துகொள்ள முடிகிறது. மஹிமா மறைந்து எட்டு ஆண்டுகள் ஆன பின்னும் இன்றும் மனோகருடைய மனம், பேச்சு, சொல் என அத்தனையிலும் அவர் நிறைந்திருக்கிறார்.
It was a wonderful meeting overall. மேலும் பல விஷயங்களுடன் இந்த நேர்காணல் காணொலி வெளி வரும்போது இணைப்பைப் பகிர்கிறேன்.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக