எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.
என்றைக்கும் இல்லாமல் திடீரென ஒரு நாள், தூங்கி எழுந்ததும் காலை ஒரு மாதிரி வெறுமையாக இருக்கும். வழக்கத்தை விட கொஞ்சம் சீக்கிரம் எழுந்திருப்பேன். தூக்கம் தெளிந்தும் தெளியாமல் இருக்கும். அப்படியே பல்துலக்கி விட்டு முகம் கழுவிவிட்டு, ஒரு காப்பி போட்டுக் கொண்டு, லேப்டாப்பைத் திறந்து ஏதாவது ஒரு பாடலைத் தேடுவேன். அது எப்போதோ கேட்ட அல்லது யாரோ சொன்ன ஒரு பாடலாக இருக்கலாம். அல்லது மனதுக்குள் முனுமுனுத்துக் கொண்டேயிருக்கிற பாடலாக இருக்கலாம். அல்லது இதுவரை கேட்டேயிராத ஆனால் அப்போதைய மன அலைக்கழிப்பை ஆற்றுப் படுத்துகிற ஒரு பாடலாக/ இசைத்துணுக்காக இருக்கலாம்.
அந்தப் பாடலைக் கேட்டதும் , இவர்களைப் பற்றி நம் நட்புவட்டத்தில் யாரேனும் எழுதியிருக்கிறார்களா எனத் தேடிப் பார்ப்பதுண்டு. எப்படியும் ஓரிருவர் எழுதியிருப்பார்கள். அதிலிருந்து மற்றுமொரு திறப்பு கிட்டும். வேறொரு பாடல்; வேறொரு இசைக்கலைஞர் ; வேறொரு பரிமாணம் வேறொரு உலகம். ஒன்றை அடியொற்றி மற்றொன்றென நம்மை சுற்றியிருக்கிற உலகை மறந்து, வேலை நாளின் பரபரப்பை மறந்து, ஒரு இசைச் சுழலில் சிக்கி உழன்று கொண்டிருப்பேன். பின்பு ஏதோவொரு புள்ளியில் மனம் அடங்கியதும் ஒரு மாதிரி புத்துணர்வுடன் இந்த புற உலகிற்கு மீண்டு வருவேன்.
இம்மாதிரி musical rabbit holeல் விழுவதும் தேடுவதும் கேட்டிராத புது இசையைக் கண்டடைவதும் அண்மையில் (கடந்த ஒரு சில ஆண்டுகளில்) வெகுவாக குறைந்துவிட்டது. வாழ்க்கைச் சூழல், பணி , பொறுப்புகள், தேவைகள், சோம்பேறித்தனம், மன அயற்சி, என பல காரணிகள் உண்டு. கேட்ட பாடல்களையே கேட்டுக் கொண்டிருப்பதில் ஒரு அலாதியான சொகுசு உண்டு. பழகிவிட்ட மனமும் அதனைத் தாண்டி வேறெங்கும் செல்ல அனுமதியாது. அத்தனையையும் தாண்டி ஒரு நாள் இந்த தேடலில் இறங்கினால் கிடைக்கிற அத்தனையும் புதையல்களாக இருக்கும். இன்றைய நாள் அப்படியொரு நாள்.
முதலில் கேட்டது Glass beams - Mahal . ஆஸ்த்ரேலிய இசைக்குழுவானாலும் ஒரு மாதிரி துருக்கிய வாடையுடனான இசையாகத் தோன்றியது. மத்திய கிழக்கும் இந்தியாவும் மேற்கத்திய இசையில் சந்திக்கிற புள்ளி போல. தொடர்ந்து அவர்களைப் பற்றி தேடிப் படித்து மற்ற பாடல்களையும் கேட்கத்துவங்கினேன். Such a trip it was Mahal தொடங்கி rattlesnake, mirage, taurus என ஒவ்வொரு பாடலும் ஒரு ரகம் ஒரு அனுபவம். இவர்களைப் பற்றி தேடியதில் ரெட்டிட்டின் r/Khruangbin குழுமத்தில் இவர்களுடைய காணொலியைப் பகிர்ந்து பாராட்டி பேசியிருந்தார்கள். அதில் ஒரு கமெண்ட் 'They sound like middle eastern khruangbin' என்றிருந்தது. உடனே khruangbin பற்றித் தேட.. voila மற்றுமொரு கதவு திறந்தது. And yes , I discovered Khruangbin , only now. க்ஹ்ராங்பின் பற்றி யாரேனும் எழுதியிருக்கிறார்களா எனத் தேட Srinivasan Rம் , Ravi kiranம் பகிர்ந்திருந்த இவர்களுடைய பாடல்கள் கண்ணில் பட்டன.
மாஸ்டர் சரவண கணேஷின் மற்றுமொரு கட்டுரையும் கிடைத்தது. அவர் பகிர்ந்திருந்த பாடல் க்ஹ்ராங்பின்னுடையதாக இருந்தாலும் கட்டுரை மற்றுமொரு ஆஸ்த்ரேலிய funk இசைக்குழுவான Hiatus Kaiyote பற்றியது. அதுவரையில் இவர்களையும் கேட்டதில்லை. Laputa, Jekyll, Shaolin monk motherfunk என இது ஒரு ரோலர் கோஸ்ட்டர் பயணம். இறுதியாக toumani diabate ல் வந்து நின்றிருக்கிறேன். What a wonderful experience and what a ride it has been. எல்லா பாடல்களின் இணைப்புகளையும் கமெண்ட்ல போட்றேன்.
//...have no idea to this day what those two Italian ladies were singing about. Truth is, I don't want to know. Some things are best left unsaid. I'd like to think they were singing about something so beautiful, it can't be expressed in words, and makes your heart ache because of it. I tell you, those voices soared higher and farther than anybody in a gray place dares to dream. It was like some beautiful bird flapped into our drab little cage and made those walls dissolve away, and for the briefest of moments, every last man in Shawshank felt free. - Red (Shawshank redemption) //
ஒரு கலைப் படைப்பு எப்போது உச்சம் பெறும் ? மற்றவர்களால் கொண்டாடப்படும் போதா ? காலம் தாண்டியும் நிலைக்கும்போதா ? படைப்பாளியை மக்கள் கொண்டாடும்போதா ? எனக்குத் தோன்றுகிற பதிலை கடைசியில் சொல்கிறேன்.
பொதுவாகவே படைப்பாளிகளுக்குத் தன் படைப்புகளின் மீது அதீதமான பெருமையும்/உரிமையும் இருக்கும். அத்தகைய உயர்ந்த படைப்பை உருவாக்கிய ஒரு கவிஞன், தன் படைப்பை, தன் மகத்தானதொரு கவிதையை ”இது இனி என்னுடையதல்ல. எனக்குரியதல்ல…இது வேறொருவருக்குச் சொந்தமானது” என்று சொன்னவரையும் , சொல்லவைத்தவரையும் பற்றிய கதை இது.
நூர் ஜெஹான் - பிரிவினைக்கு முந்தைய இந்தி(ய) திரையுலகின் பிரபலமான பாடகி/நடிகை. பாகிஸ்தான் பிரிந்தபின் “நான் எங்கே பிறந்தேனோ அங்கேயே செல்ல விரும்புகிறேன்” என்று சொல்லி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டு பாகிஸ்தான் சென்றவர். அந்நாட்டு மக்களால் ’மேடம்’ நூர்ஜெஹான் என அன்போடு அழைக்கப்பட்டவர்...! பாகிஸ்தானின் உருது திரைப்படங்களில் அற்புதமான பல பாடல்களைப் பாடியவர்.
ஃபைஸ் அகமது ஃபைஸ் - . தீவிரமான மார்க்சிய-இடதுசாரி சிந்தனையாளர்; எழுத்தாளர்; உருதுக்கவிஞர். ப்ரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ராணுவத்தில் இந்தியாவுக்காக இரண்டாம் உலகப் போரில் பங்கு பெற்றவர்,1947க்குப்பின் ராணுவத்திலிருந்து வேலையை விட்டுவிட்டு லாஹூருக்குச் சென்றபின் இன்னும் தீவிரமாக இயங்கத் தொடங்கினார்.பாகிஸ்தான் டைம்ஸ் என்க்ற இடதுசாரி ஆங்கில பத்திரிகையிலும், வேறு சில உருதுப் பத்திரிக்கைகளிலும் பணிபுரியத் தொடங்கினார்.இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனைகள் உச்சக்கட்டதிலிருந்த காலத்திலேயே காந்தி கொல்லப்பட்டபோது லாஹூரிலிருந்து டெல்லிக்கு வந்து அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றவர். பாகிஸ்தானின் இடதுசாரி தலைவர்களோடான நட்பும், கம்யூனிச சித்தாந்தப்பிடிப்பும்,இவரை பாகிஸ்தான் அரசாங்கத்தால் சிறையில் தள்ளப்படுமளவு கொண்டுபோனது.
நான்கு ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பின் விடுதலையான ஃபைஸை வரவேற்க கவிஞர்களும், கலைஞர்களும் சிறைவாசலில் காத்திருக்கிறார்கள். அவர்களோடு நூர்ஜெஹானும்.
ஃபைஸ் வந்ததும் அவருடைய புகழ்பெற்ற கவிதைகளில் (Nazm) ஒன்றான ’முஜ்சே பெஹ்லி சி ’ (Mujhse pehli si mohabbat mere mehboob na mang) யை தானே மெட்டமைத்து பாடுகிறார் நூர்ஜெஹான்.சுற்றியிருந்த அத்தனை பேரும் அவருடைய குரலில் கட்டுண்டதுபோகிறார்கள். நூர்ஜெஹான் பாடிய விதத்தில் நெகிழ்ந்து போன ஃபைஸ் “இதை விட சிறப்பாக இந்தப் பாடலை வேறு யாராலும் பாட முடியாது. இந்தக் கவிதை இனி உன்னுடையது” என்று சொல்லி அந்தப் பாடலையே அவருக்கு பரிசாக வழங்கிவிடுகிறார். சில ஆண்டுகளுக்குப் பின் 1962ஆம் வருடம் ‘கைதி’ திரைப்படத்தில் நூர்ஜெஹான் இந்தப் பாடலைப் பாட , பாடல் சூப்பர்ஹிட்டாகிறது. அதன் பின் பல தருணங்களில் பல் மேடைகளிலும் இந்தப் பாடலை பாடியிருக்கிறார் நூர்ஜெஹான். பின்னாட்களில் ஃபைஸிடம் இந்தக் கவிதை குறித்து கேட்கப்பட்டபோதெல்லாம் அவர் சொன்ன பதில், “ அந்தப் பாடல் என்னுடையதல்ல. என்றோ நூர்ஜெஹானுடையதாகிவிட்டது...!”
நான் இந்தப்பாடலை முதன் முதலில் கேட்டது 'Ae dil hai mushkil' திரைப்படத்தின் ஒரு காட்சியில் தான். பின்பு அந்தப் பாடல்வரிகளை வைத்துக் கொண்டு தேடப்போக அதன் பின் இப்படியொரு நெகிழ்ச்சியான வரலாறு இருப்பது தெரியவந்தது. எதற்காக இந்தப் பாடல் இப்படி கொண்டாடப் பட்டது என்பதற்கான காரணம் அந்தப் பாடல்வரிகளின் பொருளைத் தெரிந்து கொண்டபோது புரிந்தது.
My love, do not ask from me the love we shared once before. If you were here, I always thought life would shine, eternally.
We share our grief, so why argue over the sorrows of the world? Your countenance is the assurance of perennial spring, everywhere.
For what is the worth of this world but the sight of your eyes? If only I found you, the fates would be enthralled.
This wasn’t how it should have been, except that I wanted it to be; there are more sorrows in this world beyond the anguish of love.
There is more to happiness than the relief of reunion; the blight of dark magic of years beyond counting,
while draped in silk, satin and brocade; everywhere, in alleys and marketplaces, young flesh is up for sale.
Dragged in the dirt, bathed in blood, bodies emerge from furnaces of pestilence.
Pus flows untapped from leaking ulcers. My eyes can't look away, what should I do?
Your beauty still allures, but what can I do? There are sorrows in this world beyond the pleasures of love.
There is more to happiness than the relief of reunion; so my love, do not ask from me the love we shared once before.
இந்தக் கவிதையை எழுதிய கவிஞனின் கதையையும், உயிர்தந்து காற்றில் மிதக்கவிட்ட பாடகியின் கதையையும் தாண்டி, ஏதோவொன்று நம்மை அலைக்கழிக்கின்றது. வரிகளில் பொதிந்து கிடக்கிற தனிமையும் துயரமும் மகிழ்ச்சியும் ஒருங்கே உறக்கம் கெடுக்கின்றன. There's something about this song. Something mystic and spiritual at the same time.
இது கைதி திரைப்படத்தில் அவர் பாடிய version :
(In a soft and sharp voice tone)
இது unplugged version. ஃபைஸின் முன்பு முதன்முதலில் பாடப்பட்ட பாடலின் பதிவு என்றும் சொல்லப்படுகின்றது:
(Bass/dense voice tone)
பின்னொரு நாளில் BBCன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாடியது:
ஃபைஸின் குரலிலேயே கேட்க:
நான் கேட்டதிலேயே அட்டகாசமான வெர்ஷன் ஸோரா செகல்’ன் recital (டைட்டன் விளம்பர பாட்டி)
If at all you're interested to dig up more on F.A.Faiz and Noor Jehan...below are the external references:
இன்னதுதான்னு பகுத்தறியமுடியாத உணர்வை சில பாடல்கள் தரும் (unfortunately சினிமாப் பாடல்கள்லேயே திருப்திப்பட்டுக்குற ஜென்மம் நான்) .இசையமைச்சது ஒரே இசையமைப்பாளரா இல்லாம இருக்கலாம், ஒரே மாதிரியான ராகமா இருக்காது, arrangements வேற வேற மாதிரியானதா இருக்கலாம்.. ஆனா கேக்கும்போது அந்தப் பாடல்கள் தர்ற உணர்வு இருக்கே, அது இந்த எல்லாப் பாடல்களையும் ஒரு புள்ளியில இணைக்குற ரொம்ப மெல்லிசான ஒரு இழை. இந்த பாடல்கள் எல்லாமே கிட்டத்தட்ட பாசம், காதல், ஏக்கம்,பிரிவு, நினைவுகள், அமைதி... இந்த வகைகளுக்குள்ள அடக்கிடலாம். அப்புடி நினைவு தெரிஞ்சு மொதல்ல ரசிச்ச பாடல்
பாடல்: கண்டநாள் முதலாய் காதல் பெருகுதடி இசை: யுவன் அசலை எழுதி இசையமைத்தவர்: N.S.சிதம்பரம் படம்: கண்டநாள் முதல் பாடியவர்கள் : சுபிக்ஷா, பூஜா
அதுக்கப்புறம் கிட்டத்தட்ட அதே மாதிரியான feel கெடைச்ச இன்னொரு பாட்டு.துக்கம், சோகம்... ஏக்கம் எல்லாமே...கலந்த உணர்வு மொத வாட்டி கேட்டுட்டு அழுதுட்டேன்.
தலைவனுக்காக காத்திருக்குற தலைவியோட உணர்வுகள் வகைப் பாடலா இருந்தாலும் கொஞ்சமே கொஞ்சம் கிண்டலும் மகிழ்ச்சியும் கலந்து இருக்குற இந்தப் பாட்டும் இந்த பட்டியல்ல வரும். தனிப்பட்ட முறைல இந்தப் பட்டியல்லேயே எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்பப் பிடிச்ச பாட்டு இதான். (இதுக்குப் பின்னால ஒரு கத இருக்கு)
கொஞ்சம் தாலாட்டு சாயல்ல இருந்தாலும் ரொம்ப ரொம்ப அழகான பாட்டு. ஊர்ல இருந்தப்ப இத காரைக்கால் வானொலில கேட்டுட்டு தேடியலஞ்சு ப்ரவ்சிங் செண்டர்ல ஒருவழியா கண்டுபிடிச்சு டவுன்லோட் பண்ணி சிடில காப்பி பண்ணிட்டு வந்தேன். வீட்டுக்கு வந்து கிட்டத்தட்ட ஒரு வாரம் கேட்டுட்டே இருந்தேன்.
இது ஒரு அம்மா-மகன் பாட்டு தான். கிட்டத்தட்ட மேல பாத்த பாடல்கள பாடுனவங்களோட voice timbre தான் இந்த பாடகிக்கும். மொதல்ல கேட்டப்போ சாதாரணமா இருந்து அப்புறமா this one grew on me..!! Lovely song..! கவிஞர் தாமரையோட வரிகள்ல இருக்குற உயிர்ப்பே தனி தான்.
பாடல்: கண்கள் நீயே இசை: ஜி.வி.பிரகாஷ் எழுதியவர்: தாமரை படம்: முப்பொழுதும் உன் கற்பனைகள் பாடியவர்: சித்தாரா
இதுவும் அம்மா-மகன் பாட்டு தான். பிரிவுத் துயரம் ஊடாடுற வரிகள்... வைக்கம் விஜயலக்ஷ்மி தமிழ்ல பாடுன முதல் பாட்டு.கலங்கடிச்ச பாட்டு...!
பாடல்: புதிய உலகை புதிய உலகை இசை: இமான் எழுதியவர்: மதன் கார்க்கி படம்: என்னமோ ஏதோ பாடியவர்: வைக்கம் விஜயலக்ஷ்மி
கடைசியா இப்டி ஒரு லிஸ்ட் போடுறதுக்கு காரணமான பாட்டு. இந்தப் படத்துக்கு வந்து சிக்கிட்டோமேன்னு ஃபீல் பண்ணாலும் ஒரே ஆறுதல் இந்தப் பாட்டு தான். மறுபடியும் இமான்... நாதஸ்வர preludeஓட ஆரம்பிக்கிற பாட்டு..அந்த dense voiceக்காகவே எத்தன வாட்டி வேணாலும் கேக்கலாம்..!!! <3 span="">3><3 span="">3><3 span="">3>நந்தினி ஸ்ரீகர் குரல்ல யுகபாரதியின் வரிகள் அவ்ளோ அழகு..!
இந்த ‘திருமணம் என்னும் நிக்காஹ்’ (அது ஒரு மொக்க படம்னாலும்) படத்துல வர பாட்டு எல்லாம் கேட்ருப்பீங்க. ’யாரோ இவள் யாரோ இவள்’ பாட்டு ஆரம்பிக்கும்போது கிஜ்மாஜாரே ராக்கோஓஓஒ ந்னு ஏதோ புரியாத பாஷைல ஒரு சின்ன ஹம்மிங் பிட் வரும்... நான் போன வாரம் ‘நீலாகாசம் பச்சக்கடல்.. சுவண்ணபூமி’ன்னு துல்கர் சல்மான் நடிச்ச ஒரு மலையாளப் படம் பாத்துட்டு இருந்தேன். கேரளாலேர்ந்து அவருடைய காதலியைத் தேடி நாகலாந்து வரைக்கும் போவாரு...! அப்போ கொல்கத்தாவுக்கு முன்னாடி ஒரு ஊர்ல இவங்க தங்கிருக்கும் போது ஒரு குழப்பமான மனநிலைல ஹீரோ வெளில வருவாரு. அங்க கேம்ப் ஃபயர் போட்டுட்டு ஒரு நாடோடிகள் கூட்டம்.. கஞ்சா புகைத்தபடி... ஏக்தாராவை (நயன்தாரா மாதிரி நடிகை அல்ல, இசைக்கருவி) வாசித்தபடி.. இந்த பாட்டை பாடுவார்கள்... ‘அமி ஹ்ரித் மாஜ்ஹாரே ராக்ஹ் போ.. ச்ஹேரே தெப்ஹோ னா’ அப்டின்னு...!அந்த பாட்டு தர அந்த உணர்வு இருக்கே..அத வார்த்தைல சொல்றது ரொம்பக் கஷ்டம்.
இந்த வீடியோவுல கரெக்டா 6.36 ல நான் சொன்ன அந்த பாட்டு வரும் பாருங்க.
அதுக்கப்புறம் அந்த பாட்டு வரிய கூகிள் பண்ணதுல.. அது ஒரு வங்காள மொழி நாட்டுப்புறப் பாடல்னு தெரிஞ்சுது. அப்டியே இந்த மாதிரி பாடல்களைப் பாடித்திரிகிற ‘பவுல்’ (Baul) என்கிற ஒரு குழுவினர் பத்தியும் தெரிஞ்சுது. இந்த பவுல் துறவிகள் எல்லாம் கிட்டத்தட்ட சூஃபிகள் மாதிரி இசை+ஆன்மிகம்னு திரியுறவங்க. இந்து மதம், புத்த மதம், சூஃபியிஸம், எல்லாத்தோட தாக்கமும் இருந்தாலும் இவங்க குறிப்பிட்ட எந்த மதத்தோடவும் தங்களை அடையாளப் படுத்திக்கிறது இல்ல.அதுல ஒருத்தர், லக்கன் தாஸ் பவுல் (Lakhan das baul) அமெரிக்காவுல போய் பாடுன இதே பாட்டுடைய வெர்ஷனை மறக்காம கேட்டுப் பாருங்க.ரொம்ப ரொம்ப soulful singing..!!
இந்த பவுல்களுடைய தோற்றம்னு பார்த்தா.. வங்கதேசமும்... இந்தியால மேற்கு வங்க மாநிலமும் தான். இன்னைக்கு உலகம் பூரா பரவி இருக்காங்க.இன்னொரு அழகான பவுல் பாடல் ஜும்ப்பா லஹிரியுடைய (Jhumpa lahiri) 'The Namesake’ நாவலுடைய திரை வடிவத்துல வர மோன் தோலே (Mon dole). அதையும் கேட்டுடுங்க.இதுவும் லக்கான் தாஸ் பாடுனது தான்.
ரொம்ப நாள் முன்னாடி எழுத ஆரம்பிச்ச ப்ளேலிஸ்ட் போஸ்ட்ட தொடரலாமேன்னு... இப்போ மறுபடியும்.
4.இந்த பாட்டும் ஒரு random accidentல கெடச்சது தான்.ரொம்ப பொழுது போகலன்னா சவுண்ட்க்ளவ்ட்ல எதையாவது ரேண்டமா தேடி எடுத்து கேட்டுட்டு இருப்பேன்.அப்போ எதேச்சையா இந்த பாட்டுடைய ஒரு சின்ன ஆடியோ க்ளிப்ப கேட்டேன். கேட்டவுடனே ரொம்பவும் பிடிச்சுப் போய் அந்த ஹிந்தி வரிகள்ல எனக்கு புரிஞ்சளவுக்கு எதோ tune meri jaana.. kabhi nahi jaana ன்னு ரெண்டு வரிய மட்டும் கூகுள்ல தேட ஆரம்பிச்சு ஒரு வழியா பாட்டைக் கண்டு பிடிச்சேன். ஆல்பம் பேரு ‘Emptiness'... பாடுனவரு கஜேந்திர வர்மா. பாதி லிரிக்ஸ் இங்க்லீஷ்லயும் மீதி ஹிந்திலையுமா... ரொம்ப அழகான பாட்டு. விஷுவலாவும் ரசிக்கிற மாதிரி தான் இருக்கும்.வட இந்திய இளைஞர்கள் மத்தியில ரொம்பவே பிரபலம் இந்தப் பாட்டு. காதல் பாட்டு தான்.ஹிந்தி லிரிக்ஸுக்கு மீனிங் இங்க பாத்துக்கோங்க.
5.இதுவரைக்கும் சொன்ன பாடல்கள் எல்லாமே வரிகள், அது தர்ர உணர்வு, பாடலுடைய mood, காட்சிப்படுத்துன விதம்.... இதெல்லாம் தான் மேலோங்கி இருக்கும். Arrangement wise பாத்தா நான் ரொம்பவே ரசிச்ச, துள்ளலான ஒரு ஆல்பம் பாடல் இது.பெப்பு.. பெப்பு...ன்னு சொல்வாங்கள்ல அத நம்மள அறியாம நமக்குத்தரும்.செம்ம டைனமிக்கான vocals....!! பாட்டுடைய தீம்.. வழக்கம் போல காதல் தான்.நம்ம தமிழ் சினிமா ஹீரோக்களெல்லாம் ஒரு வசனம் சொல்லுவாங்கள்ல.. ’என்னத்தவிர உன்ன வேற எவனும் நல்லா பாத்துக்க முடியாது’ன்னு..கிட்டத்தட்ட அந்த மாதிரி தான்.பாதி ஹிந்தி.. பாதி இங்க்லீஷ். பெங்ளூர்வாசியான ரகு திக்ஸித் தான் எழுதியது.. பாடியது.. எல்லாமே...இவர் புகழ் BBC வரைக்கும் பரவியிருக்கு...!!
வீடியோ வெர்ஷன் கொஞ்சம் சவ சவன்னு இருக்குற மாதிரி ஃபீல் பண்ணீங்கன்னா இங்க soundcloudல தெறிக்கிற க்வாலிட்டியோட இருக்கு..இதே பாட்டு... அதக் கேட்டுப் பாருங்க.
No man will ever love you, like I do
Ever since this wandering heart of mine, met you
I dismissed the time when we were strangers,
and made you mine on this journey I began My love!
I am a lost cloud in the blue sky
I hum, thunder and shower rain
Infatuated by you My Love
Amidst the stars, on the moon, on the earth and in the sky
My aspirations echo My Love
No man will ever love you, like I do
6.என்னடா ஹிந்தியாவே போய்ட்டு இருக்கேன்னு யோசிக்காதீங்க.ஒரு சேஞ்சுக்கு ஒரு மலையாள ஆல்பத்துல வந்த பாட்டு. நான் காலேஜ் படிக்கும்போது தான் மொத மொதல்ல கேட்டது. ஃப்ரெண்டோட ஃப்ரெண்டோட ஃப்ரெண்டி ரெஃபர் பண்ண பாட்டு.மலையாளமா இருந்தாலும் கிட்டத்தட்ட நமக்கு அர்த்தம் புரியும்னு வைங்க. கொஞ்சம் ‘மின்னலைப் பிடித்து மின்னலைப் பிடித்து’ பாட்ட ஞாபகப் படுத்துனா நான் பொறுப்பில்ல.ஆல்பம் பாடல்களுக்கே உரிய அந்த பாட்டுக்குள்ள கத சொல்ற டெக்னிக் ரொம்பவே பொருந்தியிருக்கும்.
அந்த ‘வெள்ளிக் கொலுசிட்ட காலச்சம் கேக்க...காத்திருக்கும் எண்டே ஹ்ருதயமே’ வரியை அப்புடி ரசிச்சேன் நான். இப்பவும் தான் :) :)
திரையிசைப் பாடல்களல்லாத பிற ஆல்பங்களைக் கேட்கிற ட்ரெண்ட் காலங்காலமாக நம்மிடையே இருந்து தான் வந்திருக்கின்றது. ஆங்கிலமோ, ஹிந்தியோ, கஸல் பாடல்களோ...அல்லது வேறேதும் இசைக்குழுக்களின் தனி ஆல்பங்களோ...இசைக்கோவைகளோ...ஏதோவொன்று மக்களை வந்தடைந்து அவர்களின் மனதைக் கவர்வதும் வாடிக்கையாக நடந்து கொண்டு தான் இருக்கின்றது. என்ன ஒன்று.. முன்பு கேசட்களின் காலத்தில் இந்த தேடலும் அடைதலும் கொஞ்சம் கடினம்.90களுக்குப் பின்னான சி.டி யுகத்தில் பெருநகரங்களில் இந்த மாதிரி தனி ஆல்பங்களைத் தேடிப்பிடிப்பதென்பது அத்தனை கடினமாகவெல்லாம் இல்லை.இன்றைக்கு உலகின் எந்த மூலையில் இருக்கிற இசைக்குழுக்களின் பாடல்களைக் கூட யூட்யூபிலேயே கேட்க முடியும்.
சரி...சுற்றி வளைக்காமல் விஷயத்துக்கு வருகிறேன்.
நண்பர்கள் மூலமாகவோ புத்தகங்கள் மூலமாகவோ அல்லது வேறெந்த வகையிலோ எனக்குப் பரிச்சயமாகி மனதுக்கு மிகவும் நெருக்கமாகிவிட்ட பாடல்களைப் பற்றி இந்த மாதிரி பட்டியல் போட்டு பகிரலாம் என்றிருக்கின்றேன்.என்னுடைய மனநிலைக்கு தகுந்தாற்போல ஏதோவொரு பாடலைத் தேர்ந்தெடுத்துக் கேட்டுக் கொண்டிருத்தல் ஒரு ரசனையான அனுபவம்.அதை உங்களுக்கும் கடத்திவிட முடியுமென்று நம்புகின்றேன்.
முதலில்
1. 2008ம் வருடம் சூப்பர் சிங்கரின் இரண்டாவது எடிஷன்.ரவி, ரேணு, அஜீஷ், பிரசன்னா,விஜய் என எல்லாருமே அட்டகாசமான பாடகர்கள்.போட்டியின் இறுதிக்கட்டங்களில் ஒரு மெட்லி ரவுண்ட்.ஏதாவதொரு ராகத்தை எடுத்துக் கொண்டு அந்த ராகத்தில் அமைந்த வெவ்வேறு பாடல்களை இணைத்துப் பாடவேண்டும்.என்னுடைய favorite பாடகர் ரவி தேர்ந்தெடுத்தது சாருகேசி ராகம். ஒரு ஆலாபனையில் தொடங்கிய அவர் முதலில் பாடியது ‘வசந்த முல்லை போலே வந்து’ பாடல்.அதிலிருந்து ’ஆடல் கலையே தேவன் தந்தது’.இடையில் ஒரு ஹிந்தி கஸல் பாடலின் சரணம்.இறுதியாக ‘உதயா உதயா’ பாடலில் முடித்தார்.அட்டகாசமான ஒரு அனுபவம்.இந்த கலவையில் என்னைக் கவர்ந்ததென்னவோ அந்த ஹிந்தி கஸல் தான்.உடனே அவர் பாடிய வார்த்தைகளை நான் புரிந்து கொண்டவரையில் ஆங்கிலத்தில் டைப் செய்து கூகிளில் தேடத் தொடங்கினேன். (jiz ta rab jaaye) ஆனால் எவ்வளவு தேடியும் என்னால் அந்த ஒரிஜினல் பாடலைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை,இந்தத் தேடல் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் போய்க்கொண்டிருந்தது.என்ன பாடல் கேட்டாலும் என்ன வேலை செய்தாலும் உள்ளுக்குள் இது ஓடிக்கொண்டே இருக்கும். இரண்டு வருடங்களுக்குப் பின் ஒரு யூட்யூப் கமென்டிலேயே தான் என் தேடலுக்கான விடை கிடைத்தது.
அந்த பாடல் ஹரிஹரன் அவர்களுடைய ’ஹாஸிர்’ (Hazir) கஸல் ஆல்பத்தில் வந்த 'ஷெஹர் தர் ஷெஹர்' (shehar dar shahar).ஹரிஹரனுடைய குரலே பட்டையைக் கிளப்பும்.இதில் உஸ்தாத் ஜாகிர் ஹுசைனின் தபேலாவும் சேர்ந்தால் the song goes to an entirely different level.எத்தனை முறை கேட்டிருப்பேனென்றே நினைவிலில்லை.So addictive...!தவறாமல் கேளுங்கள்
2.அடுத்ததாக கைலாஷ் கெர் (Kailash Kher).தமிழில் இவருடைய குரலை நிறைய கேட்டிருக்கலாம் (வெயிலோடு விளையாடி, ரங்கு ரங்கம்மா - பீமா, ஒரே ஒரு - அபியும் நானும்..இன்னும் ஏராளமான பாடல்கள்).வித்தியாசமான, Folk பாடல்களுக்கான பிரத்தியேகமான ஹைபிட்ச் குரல்.கைலாஷ் கெரின் அறிமுகம் M Tvயில் அடிக்கடி ஒளிபரப்பான Tauba Tauba பாடலின் மூலம்தான்.ஹிந்தி பாடல்களில் கொஞ்சம் ஆர்வம் வந்த பின்பு என்னுடைய வழக்கமான ஆ.கோ வினால் இவர் பாடிய எல்லா பாடல்களையும் தேடித்தேடிக் கேட்க ஆரம்பித்தேன்.(ஹிந்தி டாப்-10 திரைப்பாடல்களை கடைசியில் சொல்கிறேன்) அப்படி எதேச்சையாக யூட்யூபில் பார்த்தது தான் 'Tu kya Jaane'.
வழக்கமான வார்த்தைகளில் சொல்வதானால் இந்த பாடல் ஒரு விஷுவல் கவிதை.எனக்கு ஹிந்தி தெரியாததால் இந்த பாடல் வரிகளின் அர்த்தத்தை கூகிளில் தேடிப் பி(ப)டித்துத் தெரிந்து கொண்டேன்.
tu kya
jaane
tu kya jaane
tu bin dil bin jazbaat allah jaane
mere jee ki baat tu kya jaane
tu bin dil bin jazbaat allah jaane
bhooli nahi abhi chandni raatein
bhooli nahi teri pyaari baatein
tujh bin ye din nahi bhaate
kya batayen hum
wohi khile khile sapne salone
bas gaye hon jo kone kone
ban gaye jazbaat khilone
dil tadpe par tu kya jaane
what do you
know
what do you know
you are without heart and feelings, god knows..
what do you know about what's happening in my heart
you are without heart and feelings, god knows..
the moonlit nights aren't yet forgotten,
your lovely talks aren't yet forgotten,
without you I don't like these days,
what should I tell..
those blossoming beautiful dreams,
which lived in every corner,
the feelings became toys,
the heart is in agony but what do you know
செம்ம லிரிக்ஸ்... செம்ம ஃபீலிங்.. மொத்த பாடல் வரிகளின் ஆங்கில மொழிபெயர்ப்பும் இங்கே
அப்புறம் M.Tv யின் கோக் ஸ்டூடியோ நிகழ்ச்சியில் வந்த இந்த பாடல்.அட்டகாசமான மிக்ஸ்.பாடகி தஞ்சாவூர் சின்னப்பொண்ணு கைலாஷ் கெர் கூட சேர்ந்து பட்டையை கிளப்பியிருப்பார்,.செம்ம கொண்டாட்டமான பாட்டு.இதையும் கேட்டுடுங்க.
3.அடுத்தது 'Da Saz' என்கிற தில்லியைச் சேர்ந்த ஒரு இசைக்குழுவின் பாடல்.இந்த இசைக்குழு பற்றியும் இவர்களின் ’Jet Lag' ஆல்பம் பற்றியும் தெரிந்துகொண்டது எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் ‘கலகம்.. காதல்..இசை..’ புத்தகம் வாயிலாக.வழக்கம் போல கூகிள் தேடல் தான்.பாடல் வரிகள் நேரடியான ஹிந்தி அல்ல.பஞ்சாபி என நினைக்கிறேன்.ரொம்ப அர்த்தமுள்ள ஆழமான வரிகள்.அமைதியான சூழலில் கண்களை மூடி கேட்டால் தியானம் செய்த உணர்வு.Please..don't miss it.An awesome sufi rendition...!! 'Hindu'வில் வெளிவந்த Da Saz குழுவின் பேட்டியை படிக்க இங்கு க்ளிக்கவும்.
(எவ்வளவு தேடியும் வரிகளோ அல்லது ஆங்கில மொழிபெயர்ப்போ கிடைக்கவில்லை.)
இந்தப் பட்டியல் தொடரும் (நேரம் கிடைக்கும் போது)...