நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.
என்னைப்பற்றி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
என்னைப்பற்றி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 24 ஏப்ரல், 2010

என்னைப்பற்றி கொஞ்சம்....


எங்கோ ஒரு ஊரிலிருந்து படிச்சு முடிச்சுட்டு, சென்னைக்குப்போனா நல்ல வேலை கெடச்சு செட்டில் ஆயிடலாம்னு நெனச்சுக்கிட்டு இங்க வந்து , கிடைக்குற ஏதோவொரு வேலைய மாங்கு மாங்குன்னு செய்ற ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான பசங்கள்ள நானும் ஒருத்தன்.... சொந்த ஊர் திருவாரூர்... ஸ்கூல்,காலேஜ் படிப்பெல்லாம் அங்கேதான்...படிச்சது B.C.A... இப்போ desktop support engineerஆ வேலை செய்றேன்.பாட்டுனா ரொம்ப பிடிக்கும்...நிறைய பேசுவேன்...நிறைய பாட்டு கேப்பேன்... கொஞ்சம் சுமாரா பாடுவேன்.... சின்ன வயசுலேர்ந்தே கம்ப்யூட்டர்னா ரொம்பப்பிடிக்கும்... ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது கத்துக்க ஆரம்பிச்சேன்.. செவன்த் படிக்கும்போது S.S.I சென்டர்ல டிப்ளோமா முடிச்சாச்சு... அப்புறம் ஸ்கூல் காலேஜ் எல்லாத்துலயும் கம்ப்யூட்டர் சயின்ஸ்... இப்போ அதே வாழ்க்கையா ஆயிடுச்சு. அவ்ளோதான்... என்னப்பத்தி மத்ததெல்லாம் நீங்களே பழகி தெரிஞ்சுக்கோங்க......

எல்லோருக்கும் வணக்கம்....இது என்னுடைய முதல் பதிவு.என்னைப்பற்றி சொல்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை என்றெல்லாம் சொல்லமாட்டேன்.படித்தது வளர்ந்தது எல்லாமே திருவாரூர் தான்.கல்லூரிப்படிப்பை முடித்துவிட்டு இப்போது சென்னையிலே ஒரு நிறுவனத்தில் தொழில்நுட்பம் தொடர்பான ஒரு தற்காலிக பணியில் உள்ளேன்..நீண்ட நாட்களாக பதிவுலகத்திற்கு ஒரு வாசகனாக மட்டும் இருந்து வந்த நான் இப்போது எழுதலாம் என்ற விபரீத முடிவுக்கு வந்திருக்கின்றேன்... கேபிள் அண்ணன், வால் அண்ணன் போன்ற பெருந்தலைகள் இந்தப்பக்கம் வரமாட்டார்கள் என்ற நம்பிக்கையில்,.. :-) என்றும் உங்கள் நல்லாதரவை நாடும் ....சுதர்

Related Posts Plugin for WordPress, Blogger...