நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

ஞாயிறு, 8 மார்ச், 2015

இசை சூழ் தனிமை - Playlist#2



இதுக்கு முந்தைய மூனு பாடல்கள் பத்தின போஸ்ட் இங்கே : இசை சூழ் தனிமை Playlist#1

ரொம்ப நாள் முன்னாடி எழுத ஆரம்பிச்ச ப்ளேலிஸ்ட் போஸ்ட்ட தொடரலாமேன்னு... இப்போ மறுபடியும்.

4.இந்த பாட்டும் ஒரு random accidentல கெடச்சது தான்.ரொம்ப பொழுது போகலன்னா சவுண்ட்க்ளவ்ட்ல எதையாவது ரேண்டமா தேடி எடுத்து கேட்டுட்டு இருப்பேன்.அப்போ எதேச்சையா இந்த பாட்டுடைய ஒரு சின்ன ஆடியோ க்ளிப்ப கேட்டேன். கேட்டவுடனே ரொம்பவும் பிடிச்சுப் போய் அந்த ஹிந்தி வரிகள்ல எனக்கு புரிஞ்சளவுக்கு எதோ tune meri jaana.. kabhi nahi jaana ன்னு ரெண்டு வரிய மட்டும் கூகுள்ல தேட ஆரம்பிச்சு ஒரு வழியா பாட்டைக் கண்டு பிடிச்சேன். ஆல்பம் பேரு ‘Emptiness'... பாடுனவரு கஜேந்திர வர்மா. பாதி லிரிக்ஸ் இங்க்லீஷ்லயும் மீதி ஹிந்திலையுமா... ரொம்ப அழகான பாட்டு. விஷுவலாவும் ரசிக்கிற மாதிரி தான் இருக்கும்.வட இந்திய இளைஞர்கள் மத்தியில ரொம்பவே பிரபலம் இந்தப் பாட்டு. காதல் பாட்டு தான்.ஹிந்தி லிரிக்ஸுக்கு மீனிங் இங்க பாத்துக்கோங்க.


Oh! Love of mine

With a song and a wine

You're harsh and divine

Like truth and a lie
But the tale ends not here
I've nothing to fear
For my love is yellow forgiving & hollow
And the bright emptiness
In a room full of heads
Is the cruel mistress... wo ho..
I feel this unrest
That nests a hollowness
For I have no where to go
And I am cold
And I feel so lonely yea..
There's a better place then this, emptiness
And I'm so lonely yea...
There's a better place then this emptiness...
Yei yei yei ye....


Read more: http://www.lyricsmint.com/2011/03/tune-mere-jaana-emptiness-lyrics-rohan.html#ixzz3Tit8Yv8k

இந்தப் பாட்டுக்கு ஒரு reprise வெர்ஷனும் இருக்கு.அதுவும் அட்டகாசமா தான் இருக்கும்.அதையும் கேட்டுடுங்க.

5.இதுவரைக்கும் சொன்ன பாடல்கள் எல்லாமே வரிகள், அது தர்ர உணர்வு, பாடலுடைய mood, காட்சிப்படுத்துன விதம்.... இதெல்லாம் தான் மேலோங்கி இருக்கும். Arrangement wise பாத்தா நான் ரொம்பவே ரசிச்ச, துள்ளலான ஒரு ஆல்பம் பாடல் இது.பெப்பு.. பெப்பு...ன்னு சொல்வாங்கள்ல அத நம்மள அறியாம நமக்குத்தரும்.செம்ம டைனமிக்கான vocals....!! பாட்டுடைய தீம்.. வழக்கம் போல காதல் தான்.நம்ம தமிழ் சினிமா ஹீரோக்களெல்லாம் ஒரு வசனம் சொல்லுவாங்கள்ல.. ’என்னத்தவிர உன்ன வேற எவனும் நல்லா பாத்துக்க முடியாது’ன்னு..கிட்டத்தட்ட அந்த மாதிரி தான்.பாதி ஹிந்தி.. பாதி இங்க்லீஷ். பெங்ளூர்வாசியான ரகு திக்‌ஸித் தான் எழுதியது.. பாடியது.. எல்லாமே...இவர் புகழ் BBC வரைக்கும் பரவியிருக்கு...!!



வீடியோ வெர்ஷன் கொஞ்சம் சவ சவன்னு இருக்குற மாதிரி ஃபீல் பண்ணீங்கன்னா இங்க soundcloudல தெறிக்கிற க்வாலிட்டியோட இருக்கு..இதே பாட்டு... அதக் கேட்டுப் பாருங்க.
               

No man will ever love you, like I do

Ever since this wandering heart of mine, met you
I dismissed the time when we were strangers,
and made you mine on this journey I began My love!

I am a lost cloud in the blue sky
I hum, thunder and shower rain
Infatuated by you My Love
Amidst the stars, on the moon, on the earth and in the sky
My aspirations echo My Love
No man will ever love you, like I do


6.என்னடா ஹிந்தியாவே போய்ட்டு இருக்கேன்னு யோசிக்காதீங்க.ஒரு சேஞ்சுக்கு ஒரு மலையாள ஆல்பத்துல வந்த பாட்டு. நான் காலேஜ் படிக்கும்போது தான் மொத மொதல்ல கேட்டது. ஃப்ரெண்டோட ஃப்ரெண்டோட ஃப்ரெண்டி ரெஃபர் பண்ண பாட்டு.மலையாளமா இருந்தாலும் கிட்டத்தட்ட நமக்கு அர்த்தம் புரியும்னு வைங்க. கொஞ்சம் ‘மின்னலைப் பிடித்து மின்னலைப் பிடித்து’ பாட்ட ஞாபகப் படுத்துனா நான் பொறுப்பில்ல.ஆல்பம் பாடல்களுக்கே உரிய அந்த பாட்டுக்குள்ள கத சொல்ற டெக்னிக் ரொம்பவே பொருந்தியிருக்கும்.
அந்த ‘வெள்ளிக் கொலுசிட்ட காலச்சம் கேக்க...காத்திருக்கும் எண்டே ஹ்ருதயமே’ வரியை அப்புடி ரசிச்சேன் நான். இப்பவும் தான் :) :)

தொடரும்...!!

புதன், 25 பிப்ரவரி, 2015

ஒரு புது தமிழ்ப் படம் - அது.. இது.. எது...?

1:சார் ஒரு செம்ம படம் பாத்தேன் சார் இன்னைக்கு...!!

2:இருங்க சார் படம் பேர் சொல்லாதீங்க... எதாவது க்ளூ குடுங்க... நான் கண்டுபிடிக்கிறேன்...

1:அதாவது சார்... இது ஒரு reincarnation கதை... போன ஜென்மத்துல ஆரம்பிக்கிற காதல் அடுத்த ஜென்மத்துல தொடருது...

2:இருங்க சார்... இது ஒரு தெலுங்கு படமாச்சே... பேரு கூட.. ஹ்ம்ம்ம்... ‘மனம்’... அதான.??



1: இல்ல சார் இது அதில்ல... வேற கதை.. போன ஜென்மத்துல சேரமுடியாம செத்துப் போற காதலர்கள்..அடுத்த ஜென்மத்துல சேர முயற்சி பண்றாங்க. அப்போ அவங்கள வாழ விடாம பிரிச்ச வில்லன் தான் அடுத்த ஜென்மத்துலயும் அவங்களுக்கு தொல்ல குடுக்குறான்..

2: சார்.. ஞாபகம் வந்துருச்சு இதுவும் ஒரு தெலுங்கு படம்தான் சார்... ஆங்.. மகதீரா...??!

1: இல்ல சார்... தப்பா சொல்றீங்க... இந்த படத்துல ஹீரோ ஹீரோயின கொன்னவன் சாகாம அப்டியே இருப்பான்... அடுத்த ஜென்மத்துல ஹீரோ மறுபிறவி எடுத்து வரும்போது ஹீரோயின் தான் வில்லன பத்தி உண்மைய எல்லாம் சொல்றாங்க..

2: அடப்போங்க சார்...என்னைய கேனையன்னு நெனச்சீங்களா... இது ’நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தோட கதையாச்சே... ஏன் இப்டி மொக்க போடுறீங்க..


1:யோவ் தப்புய்யா...! கடுப்பேத்தாத.. இப்போ கேரக்டர்ஸ் பத்தி சொல்றேன் அத வெச்சாவது கண்டுபிடி... ஹீரோவோட கேரக்டர் பேரு அஷ்வின்... அவன் கூட flirt பண்ணிகிட்டே சுத்துற ஒரு பொண்ணு வில்லனோட சதியால செத்துப் போறா... அப்புறம்..

2: சார்...நிறுத்துங்க சார்.. செம்ம ஈசி சார்... ‘கோ’ படம் தான சொல்றீங்க...

1: டேய் நீ என் கைல செம்ம அடி வாங்கப் போற... நான் சொல்ல வந்தது ஒரு புது தமிழ் படத்தப் பத்தி

2: போடாங்.. நீயும் உன் படம் ம**ம்.. அறிவு கெட்டக்***

செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

7.83 ஹெர்ட்ஸ் - க.சுதாகர்


சுதாகருக்கு எண்கள் மேல் அப்படி என்ன காதல் என்று தெரியவில்லை. :) முதல் புத்தகத்துக்குப் பெயர் 6174.இரண்டாவது புத்தகம் போன மாதம் வெளியிடப்பட்ட 7.83 ஹெர்ட்ஸ்.சயின்ஸ் ஃபிக்‌ஷன் என்றாலே கம்ப்யூட்டரும் ரோபோவும் என்பதுதான் தமிழ் இலக்கிய அறிவியல் புனைகதை உலகின் மரபு. ஆனாலும் அதை மாற்றி biotechnology, microbiology, genetics, anthropology, biochemistry, metallurgy, organic chemistry, crystallography, geometry  என பல துறைகளில் வித்தியாசனமான தளங்களில் அறிவியல் புனைகதைகளில் பட்டைய கிளப்பிவருகிறார் சுதாகர்.

நாவலின் base என்னவென்று பார்த்தால் ’சை-ஆப்ஸ்’(Psy-Ops) எனப்படும் ரேடியோ கதிர்களை ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணில் ஒலிபரப்பி அதன் மூலம் மனிதர்கள் (அல்லது விலங்குகளின்) மனநிலையைக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து ஆட்டுவிப்பது. வேலவதார் சரணாலயத்தில் ஓநாய்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் ஒரு இளம்பெண் ஓநாய்களாலேயே கொடூரமாக கொல்லப் படுவதில் தொடங்குகிறது கதை.இதன்பின் பெங்களூரில் ஒரு முக்கியமான தகவலை மட்டும் விட்டுவிட்டு தன்னை எரித்துக் கொண்டு உயிரை மாய்த்துக் கொள்கிற தீவிரவாதி (போராளி..!!)...அவன் பயன்படுத்திய பெனெல்லி சப்மெஷின் கன்... செசன்யாவுக்கும் அவனுக்குமான தொடர்பு... மனிக்கெயிசம்... HAARP கருவி... (High Frequency Active Auroral Research Program)... ஒநாய்களுக்கும் செசன்யர்களுக்குமான தொடர்பு... ஓநாய்களின் வரலாறு... என வெவ்வேறு தகவல்களோடு வெவ்வேறு தளங்களில் பயனிக்கிற கதைகளின் இழைகள் அத்தனையையும் அட்டகாசமாய் கோர்த்து படிக்கிற நமக்கு ஒரு மறக்கமுடியாத அனுபவமாகத் தந்திருக்கின்றார்.

6174 போல இந்த நாவலில் வருகிற தகவல்கள் overloadஆக இல்லாமல் படிக்கிற நமக்கு சின்னச் சின்ன ஆச்சரியங்களை ஏற்படுத்தியபடி..அதேநேரம் மைய கதையிலிருந்தும் விலகாமல் இருக்கின்றன.பொதுவாகவே சயின்ஸ் ஃபிக்‌ஷன்களில் நம்மை அசரடிக்கிற ஒரு டீட்டெய்லிங் இருக்கும். போகிற போக்கில் ஒரு தகவலையும் சொல்லிவிட்டு போய்விட முடியாது .அதுவும் உலகெங்கும் உள்ள வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் ,புத்தகத்தில் படிக்கிற தகவல்களை (புனைவாக இருந்தாலும் இல்லாவிட்டாலும்) validate செய்யத் தயங்குவதில்லை. ’டாவின்சி கோட்’ புகழ் டான் ப்ரவுன் மாதிரியான எழுத்தாளர்கள் ஒரு எக்ஸ்பர்ட் டீமை வைத்து தனது நாவலுக்கான தகல்களைக் கட்டமைப்பதாக இணையத்தில் படிக்கிறோம். ஜான் க்ராக்னர் எழுதிய ‘Into the wild' நாவலில் காட்டில் தனியாக வாழ்கிற நாயகன் Christopher Mccandles ஏதோ ஒரு விஷ காட்டுச் செடியின் விதைகளைத் தெரியாமல் உண்டதால் இறப்பதாக எழுதியிருப்பார். இது உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாவலாக இருந்தாலும் அவர் உயிரைப் பறித்தது என்ன மாதிரியான விஷம்...அவர் உண்டதாக எழுதப்பட்ட செடியில் நிஜமாகவே அப்படி உயிரைப்பறிக்கிற விஷம் இருக்கிறதாவென ஒரு பெரிய ஆராய்ச்சியே நடந்துவருகிறது.

இப்படியான சூழலில்.. தனக்குக் கொஞ்சமும் தொடர்பில்லாத பல்வேறு துறைகளின் தகவல்களை எடுத்துக்கொண்டு, அவற்றைப் படித்துப் புரிந்துகொண்டு.. கதைக்கேற்ற வகையில் அந்த தகவல்களை புகுத்தி.. அடிப்படை அறிவியல் அறிமுகம் இல்லாதவர்கள் கூட எளிமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் எளிமைப்படுத்தி எழுதி... ப்ப்பா..  monstrous effort.சுதாகரின் உழைப்பு உண்மையிலேயே அசரடிக்கிறது.

சென்ற வருடம் டிசம்பர் மாதம் கருந்தேள் ராஜேஷ் தமிழில் அறிவியல் புனைகதைகள் மற்றும் திரைப்படங்களின் தோற்றம் வளர்ச்சி குறித்தும் அவற்றின் தற்போதைய வெற்றிடம் குறித்து அட்டகாசமான ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். அவர் சொல்லியிருக்கிற அந்த unconquered territoryயை சுதாகர் கைப்பற்றுகிற நாள் வெகு தொலைவில் இல்லை.

வாழ்த்துகள் சுதாகர் சார்...!!

சுதாகரின் முந்தைய புத்தகமான ’6174’  குறித்து நான் எழுதியது : இங்கே

7.83 ஹெர்ட்ஸ் -க.சுதாகர்
வம்சி பதிப்பகம்
விலை. ரூ.200
ISBN: 97893845980404
ஆன்லைனில் வாங்க: இங்கே 

ஞாயிறு, 30 நவம்பர், 2014

காவியத்தலைவன்




நேத்து காவியத்தலைவன் பாத்துட்டேன். வழக்கமா வசந்தபாலன் படங்களில் இருக்கிற சோகமோ...இருன்மையோ இல்லாம ரொம்ப கொண்டாட்டமா கலர்ஃபுல்லா இருந்துச்சு படம். என்னுடைய தாத்தா அந்த காலத்துல ஏகப்பட்ட மேடை நாடகங்கள்ல நடிச்சவரு... நிறைய கதைகள சொல்லுவாரு... சங்கரதாஸ் சுவாமிகளுடைய நாடகங்கள்.. நாடக நடிகர்களுடைய வாழ்க்கைமுறை... அரிதாரம் பூசிக்கிறதுல தொடங்கி... மண்ணெண்ணை வெச்சு தேங்கா நார போட்டு தேய்ச்சு வேஷங்கலைக்குற வரைக்கும்...நெறைய சொல்லிருக்காரு. அந்த வெத்தலை குதப்பலோட கண்ல கொஞ்சம் போதையோட பேசுகிற ஸ்டைலாகட்டும்... மல் துணி சட்டையாகட்டும்... நான் கேள்விப்பட்ட விஷயங்கள் எல்லாமே படத்துல Close to reality காமிச்சுருக்காங்க. அதப் பத்தி எழுத ஆரம்பிச்சா இன்னும் எழுதிட்டே போலாம்.

அப்புறம் நாடக நடிகர்களுக்கு கெடைச்ச சமூக அங்கீகாரம் பத்தி படத்துல பாதி தான் (இராஜ பார்ட் மட்டும்) வருது.இது இல்லாம ஸ்த்ரீ பார்ட் போடுறவங்க.. கள்ளபார்ட் வேஷம் கட்டுனவங்க.. அவங்கள மக்கள் நடத்துன விதம் (ஸ்த்ரீ பார்ட் -கேலி, கள்ள பார்ட் - வெறுப்பு) இதெல்லாம் தாத்தா சொல்லி கேட்டுருக்கேன்.ரொம்ப பழைய படங்கள் மேல ஆர்வமேற்பட்டதுக்கு என் பெரிய மாமாவும் தாத்தாவும் தான் காரணம்.

படத்துல சொல்லப்பட்டிருக்குறது எஸ்.ஜி.கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள் அவர்களுடைய கதைன்னு சொன்னாலும்... சித்தார்த்துடைய அந்த வாழ்ந்து கெட்ட பாத்திரம் எனக்கு தியாகராஜ பாகவதரைத் தான் ஞாபகப் படுத்துச்சு.அவருடைய Rise and fall மட்டும் ஓரளவு ஒத்துப் போகுது.. ஆனா சுதந்திரப் போராட்ட பின்னணி..சினிமா வாழ்க்கை இதிலெல்லாம்..MKT வாழ்க்கை irrelevant.

பிருத்விராஜுங்குற நடிப்பு ராட்சசனுக்கு முன்னால சித்தார்த் டல்லடிச்சு தான் போறாரு.என்னவோ என்னால சித்தார்த் கேரக்டரோட ஒத்துப்போகவே முடியல...!அந்த ஜமீந்தார் மகளுடனான காதலாகட்டும்..அவளுடைய மறைவுக்குப் பின்னான சோகமும் அழுகையுமாகட்டும்.. சித்தார்த்துடைய நடிப்பு கொஞ்சங்கூட என்ன பாதிக்கல. பிருத்விராஜ் அடிச்சு ஃப்ரேமுக்கு ஃப்ரேம் பட்டைய கெளப்பிருக்காரு.வேதிகாவைப் பத்தியும் சொல்லனும்..ரொம்ப இயல்பான...அழகான நடிப்பு. வெச்ச கண் வாங்கல :) :) அழ...கி..!


செட்கள், எழுத்து, ஒப்பனைன்னு எல்லா விஷயத்தையும் பாத்துப் பாத்து பண்ணிருக்காங்க.ஆனாலும் வசனங்கள் எனக்கு திருப்தியில்ல...! :( ராஜேஷ் சொல்லிருக்க மாதிரி ரொம்பவே சாதாரணமான வசனங்கள்.இதுக்கு ஜெயமோகன் தேவையில்ல.அப்புறம் இதுவரைக்கும் இல்லாத வகைல.. இது ரஹ்மான் இசைன்னு துருத்திகிட்டுத் தெரியாம.. நம்மள distract பண்ணாம (ARR எப்பவும் அப்படியில்ல..ஆனாலும் இசை தனியா தெரியும்) படத்தோட ஒன்றி பாக்கமுடிஞ்சுது. (ஏற்கனவே இந்தப்படப் பாடல்களுக்கு நான் அடிமை) பாட்டா கேக்கும்போது கொஞ்சம் போரடிச்சது எல்லாம் படத்துல ரசிக்குற விதமாதான் இருந்துச்சு.



ஒரு துறைல ஒரே சமயத்துல நுழையுற ரெண்டு பேரு.. அதுல ஒருத்தருக்கு கிடைக்குற புகழ்.. அங்கீகாரம்... இதனால இன்னொருத்தருக்கு வர கோபம்.. வெறுப்பு ..வஞ்சம்...ego. இதையெல்லாம் ஏற்கனவே ‘இருவர்’ல கொஞ்சம் பாத்துருக்கோம். நாசருடைய கேரக்டர் வேற அதையே ஞாபகப்படுத்துச்சு.நாசர்.. பொன்வண்ணன்...இவங்களுக்கு நாம சர்டிஃபிகேட் தரத்தேவையில்ல.பட்டாசு performance.படம் முழுக்க நெறைய டீட்டெய்லிங் இருந்தாலும்...முடிவு மட்டும் ஏனோ திருப்தியில்ல. கண்டிப்பா பாக்கலாம்.பழைய நாடகங்கள் பத்தி கேள்வியே படாதவங்களுக்கு நிச்சயம் ஒரு புது அனுபவமாதான் இருக்கும்.

கீழே: ராஜேஷ் எழுதுன ‘காவியத்தலைவன்’ விமர்சனம். இன்னபிற விவரங்களோட விரிவான விமர்சனம்.கண்டிப்பா படிங்க.

http://karundhel.com/2014/11/kaaviya-thalaivan-2014-tamil-review.html
Related Posts Plugin for WordPress, Blogger...