2012-இல் நான் பார்த்த
முதல் ஆங்கிலத் திரைப்படம் ‘Warrior’. IMDB - இல் வழக்கம்போல துழாவிக்கொண்டிருந்தபோது இந்த திரைப்படத்தின்
பெயர் கண்ணில் பட்டது.எப்போதும் பார்க்கவேண்டிய ஹாலிவுட் திரைப்படங்களை அதன்
இயக்குனரை வைத்தோ அல்லது அதில் நடித்த நடிகர் – நடிகைகளை வைத்தோ தான் தேர்வு
செய்வது வழக்கம்.ஆனால் போஸ்டரையும் படத்தின் பெயரையும் பார்த்துவிட்டு எதோ
பாக்சிங்/ஆக்ஷன் கதை போல என நினைத்து தான் தரவிரக்கினேன். சத்தியமாக இப்படி ஒரு
அருமையான அனுபவத்தை இந்த படம் தரப் போகின்றது என நான் நினைக்கவில்லை.
அந்த பகுதியில் உள்ள ஒரு உடற்பயிற்சிக்கூடத்திற்குச் செல்லும் டாமி அங்கு ‘ஸ்பார்ட்டா’ (Sparta) எனப்படும் ஒரு மிகப்பெரிய ’மிக்சட் மார்ஷியல் ஆர்ட்ஸ்’ ( Mixed Martial Arts - MMA) குத்துச்சண்டை போட்டிக்காக பயிற்சி செய்யும் ‘மேட் டாக்’ (Mad Dog) என்ற மிடில் வெயிட் சாம்பியனோடு பயிற்சிக்காக
சண்டையிட நேர்கின்றது. டாமி 'மேட் டாக்' – ஐ சில நிமிடங்களில் அடித்து துவைத்துவிட,
மேட் டாக் நிலைகுலைந்து சரிகின்றான். இதைக் கண்டு மேட் டாக்கின் பயிற்சியாளரும்,
ஜிம்மில் இருக்கும் மற்றவர்களும் திகைத்து போகின்றார்கள்.அடுத்த நாள் டாமி
ஜிம்முக்கு செல்கையில் மேட் டாக்கின் பயிசியாளன் டாமியின் பெயரை ஸ்பார்டா போட்டியாளர்கள்
பட்டியலில் சேர்த்து விட்டதாகச் சொல்கின்றான்.டாமி தன் தந்தையிடம் சென்று தான்
ஸ்பார்ட்டாவில் கலந்து கொள்ளப் போவதாக சொல்லி அவரை தனக்கு பயிற்சியளிக்குமாறு
வேண்டுகிறான்.இதை சாக்காக வைத்து தந்தை-மகன் உறவை புதுப்பிக்கலாமென எண்ணிக்கொள்ள
வேண்டாமெனவும் தன் தந்தையை எச்சரிக்கின்றான்.(இந்த கடுப்புக்கு பின்னால் தனி கதை
உண்டு)
முன்னாள் (U.F.C) குத்துச்சண்டை வீரனாகிய பிரெண்டன், பண முடையை சமாளிப்பதற்காக
இரவு நேரங்களில் அமெச்சூர் வீரர்களோடு சின்ன சின்ன போட்டிகளில்
சண்டையிடுகின்றான்.இந்த செய்தி எப்படியோ பிரெண்டனின் மாணவர்களிடையே பரவி பள்ளி
நிர்வாகத்தின் காதுகளையும் எட்டுகின்றது. பள்ளி மாணவர்களுக்கு இது ஒரு தவறான
உதாரணம் என்று ஒழுக்கத்தை காரணம் காட்டி பிரெண்டன் பள்ளி நிர்வாகத்தினால் பணி இடைநீக்கம்
செய்யப்படுகின்றான். கிடைத்துக்கொண்டிருந்த ஒரு வருமானமும் நின்று போக வேறு
வழியின்றி முழு நேரமாக தன் பழைய தொழிலான குத்துச் சண்டையில் ஈடுபட
முடிவெடுக்கின்றான்.
தன் முன்னாள் நண்பன் ஃப்ராங்க் கம்பானா(Frank Campana)-வை சந்தித்து அவனிடம் பயிற்சி பெறத்
தொடங்குகின்றான். ஸ்பார்ட்டா போட்டியில் சண்டையிடுவதற்காகத் தயாராகி வந்த
ஃப்ராங்கின் மாணவனுக்கு பயிற்சியின்போது எதிர்பாராத விதமாக காலில் அடிபட்டு விட அவனால்
ஸ்பார்டனில் பங்கு பெறமுடியாத நிலைமை ஏற்படுகின்றது.அவனுக்கு பதிலாக ஸ்பார்ட்டனில்
பங்குபெற பிரெண்டன் முன்வருகின்றான்.ஃப்ராங்கும் தன் நண்பன் மீது நம்பிக்கை வைத்து
போட்டிக்காக அவனை ஆயத்தப் படுத்துகின்றான்.
ஐந்து மில்லியன் டாலரை பரிசுத்தொகையாகக் கொண்ட ‘ஸ்பார்டா’வில் டாமி கட்டுக்கடங்காத காட்டு மிருகம்போல
எதிரிகளோடு வெறிகொண்டு சண்டையிட்டு அவர்களை தோற்கடித்து இறுதி போட்டியை நோக்கி
முன்னேறுகின்றான். இன்னொரு பக்கம் சில சுற்றுகள் கூட தாக்குப்பிடிக்க மாட்டான் என
எல்லோரும் குறைத்து மதிப்பிட்ட பிரெண்டன் யாருமே எதிர்பாராவண்ணம் எதிரிகளோடு
திறமையாக சண்டையிட்டு இறுதி போட்டிக்கு முன்னேறுகின்றான்.
இரண்டு பேருக்குமே இது வாழ்வா...சாவா... பிரச்சனை. டாமிக்கும் பரிசுத்தொகை தேவை... பிரெண்டனுக்கும் பரிசுத்தொகை தேவை...அண்ணனும் தம்பியும் இறுதிப் போட்டியில் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் நிலை
உண்டாகிறது.இறுதிப் போட்டியில் யார் வென்றது...?முன்னாள் ராணுவ வீரனாகிய டாமி
கான்லான் ஏன் தன் பெயரை டாமி ரியொர்டன் என மாற்றிகொள்கிறான்? இந்த பெருந்தொகையை
யாருக்கு தருவதற்காக டாமி போட்டியிட்டான்...?பிரெண்டன் தனது வீட்டைக்
காப்பாற்றினானா...?
டாமி கான்லானாக 'டாம் ஹார்டி', பிரெண்டன் கான்லானாக 'ஜோயல் எட்கர்டன்', இவர்களின்
தந்தை பேடி கான்லானாக 'நிக் நோல்டே' ஆகியோர் நடித்திருக்கின்றனர்.இயக்குனர் 'கேவின் ஓ கானர்'. இவர்களில் டாம் ஹார்டியை மட்டும் இன்செப்ஷனில் ஒரு காட்சியில் பார்த்ததாக
நியாபகம்.மற்றவர்கள் அனைவரும் எனக்கு புதியவர்களே.. J J
வழக்கமாக இந்த மாதிரி ஆக்சன்/தற்காப்புக் கலை திரைப்படம் என்றாலே அதில்
அழுத்தமான கதை/திரைக்கதை இருக்காது.ஆனால் அந்த குறையை போக்கிவிட்டது இந்தப் படம். உணர்வுப்பூர்வமான
ஒரு கதை கொஞ்சம் நான்-லீனியர் மாதிரி பின்னப்பட்ட திரைக்கதை,ரியலிஸ்டிக்
ஒளிப்பதிவு என அத்தனை அம்சங்களுமே என்னை ஈர்த்தன.’Never Back Down’ க்குப் பிறகு நான் ரொம்பவும் ரசித்த
’Mixed Martial Arts’ திரைப்படம் இதுதான்.
டிஸ்கி: படத்தின் கதையை வரி வரியாக விளக்கவில்லை.பல நல்ல காட்சிகளை ஸ்கிப்
செய்து மேலோட்டமாகவே கூறியிருக்கின்றேன் (நீங்கள் பார்க்கும்போது ஏற்படும்
சுவாரசியக் குறைவை தவிர்க்கும் பொருட்டு).