நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

செவ்வாய், 29 செப்டம்பர், 2020

Soul Piercing Balu...!


மூன்று நாட்களாக மனம், சொல், செயல் என அத்தனையிலும் நிரம்பிக்கிடக்கிறார் SPB...! எனக்குத் தெரிந்தவரையில, அண்மையில் எந்த ஒருவரின் மறைவிற்கும் இத்தனை பேர் this feels personal என்று சொல்லக் கேட்டதில்லை;கண்டதில்லை. Indeed, it felt personal for me as well and the loss is incomparable...! 

இசையமைப்பாளருக்கும், பின்னணிப் பாடகருக்கும், பாடலாசிரியருக்கும், நடிகருக்கும் இடயேயான வேறுபாடுகளை பகுத்து அறிந்துகொள்ளத் தெரியாத வயதிலிருந்தே பரிச்சயமானவை அவருடைய முகமும் குரலும்...! 

கடந்த இரு நாட்களாக நண்பர்கள் பலரும் SPB பற்றி எழுதிய, பேசிய விஷயங்களில் குறிப்பிட்ட ஒன்று, அவர் ஏதோ ஒரு வகையில் எந்த ஒரு சாமானியனும் அவரைத் தொட்டுவிடக்கூடிய, எதாவது ஒரு பாடலில் அவரது குரலை நகலெடுத்து தன்னையும் SPBயாக உணர்ந்துகொள்ளக் கூடிய இடத்தைத் தந்திருக்கிறார் என்கிற விஷயம். எத்தனை ஆழமான, உணர்வுப்பூர்வமான கண்டுணர்தல் இது..! கவிஞர் இசையின் ‘பரோட்டா மாஸ்டரின் கானம்’ கவிதை இந்தத் தருணத்தை வார்த்தைகளில் படம்பிடித்த அற்புதமானதொரு snapshot.

நானொரு small time amateur singer...SPB மாதிரியான பெருங்கலைஞர்களின் பாடல்களிலிருந்து அவர்களின் குரலை..சாயலை... நகலெடுத்துவிட்டு அற்பமாய் மகிழ்ந்து சிரித்துக் கொள்கிறவன். பாடலின் ஒரு துணுக்கையாவது பத்து சதவிகிதம் சரியாகப் பாடிவிட்டால் பெருமிதத்தில் தூக்கம் வராது எனக்கு.

ஐம்பதாண்டுகளாய் பாடிக்கொண்டே இருந்த மனிதனுக்கு அதுவும் இசையமைப்பாளர் , கவிஞர், நடிகர், இயக்குநர், கதை, சூழல், உணர்வு என அத்தனையையும்/அனைவரையும் உள்வாங்கிக் கொண்டு அவற்றை குரலில் மிகச்சரியாக வெளிப்படுத்திவிடுகிற பெரும் கலைஞனுக்கு இந்த இசை எத்தனை இன்பத்தை வாரி வழங்கியிருக்கக்கூடும் ! I've been wondering how fulfilled and pleasure full he must've felt என்று...!

And most of us are realizing how close he has been to all of us, only now... மனதளவில் ஆண்டாண்டுகளாகத் தன் குரலால் நம்மை அணைத்துக் கொண்டிருந்தார் தானே ?

சில இழப்புகளை வார்த்தைகளின் துணையின்றி வேறு எப்படியும் கடந்துவிடவே முடியாது. எந்த நோக்கமும் இல்லாமல் கடந்த மூன்று நாட்களாக அவருடைய பழைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், மேடைக் கச்சேரிகளையும், பாடல்களையும் தொடர்ச்சியாக ஓடவிட்டு கேட்டுக்கொண்டே இருக்கிறேன். கட்டுப்படுத்தவே முடியாத கண்ணீருடனும்..! 

மனதில் தோன்றுவதையெல்லாம் எழுதிக் கொண்டேயிருக்கின்றேன். கோவையாய் பெரிதாகச் சொல்லிவிட என்னிடம் என்ன இருக்குமோ தெரியவில்லை. Pardon me if none of what I've written here makes any sense to you. 

பொதுவாக எல்லாக் கலைஞர்களும் தங்களுக்கு மிகப் பிடித்தமான அல்லது கைவந்த கலையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளுகையில் , அது எந்தளவு அவர்களை மகிழ்வித்து மனம் நிறைக்கிறதென மூன்றாவது மனிதராய் வெளியிலிருந்து பார்க்கிறவர்களுக்குத் தெரிவதில்லை. ஆனால் SPB அப்படியல்ல.. மேடையோ டிவியோ..பாடினாரென்றால் ஒரு பாடல் வரியை எந்தளவு, உணர்ந்து, ரசித்து, உருகி, கொண்டாட்டமாய் அனுபவித்துப் பாடிக்கொண்டிருக்கிறார் என அப்பட்டமாய் புலப்படும் நமக்கு. சோகமோ, மகிழ்ச்சியோ, நெகிழ்ச்சியோ, அந்த உணர்வு சிந்தாமல் சிதறாமல் அப்படியே நம்மை வந்தடைந்து மொத்தமாய்த் தாக்கும்...! It has always been a pleasure, not only to listen him sing but also to watch him sing...! 

எத்தனை மொழிகள், எத்தனை ஆயிரம் பாடல்கள், எவ்வளவு உணர்வுகள்...அத்தனைக்கும் ஒரே குரல்..ஒரே உடல்..ஒரே முகம்...! 

Interstellar திரைப்படத்தில் love பற்றிய ஒரு உரையாடல் உண்டு...

“Listen to me when I say that love isn’t something we invented, it’s observable and powerful, it has to mean something…maybe it means something more, something we can’t yet understand. Maybe it’s some evidence, some artifact of a higher dimension that we can’t consciously perceive... Love is the one thing we’re capable of perceiving that transcends dimensions of time and space. Maybe we should trust that, even if we can't understand it. ” — Dr. Brand, Interstellar.


”கால வெளி பரிமாணங்களையும் தாண்டி நம்மால் ஒன்றை உணர்ந்து கொள்ள முடியுமென்றால், அது அன்பு மட்டுமே” என விளங்கிக் கொள்கிறேன். 


அவருடை குரலில் வந்த பாடல்களின் வழியாக, கால வெளி கணக்குகளுக்கு அப்பாற்பட்ட பரிமாணத்தில் அவரோடு பேசிவிட முயன்றபடியே இருந்துவிடப்போகிறேன்...!

கடைசியாக குமரகுருபரனின் கவிதை ஒன்று... 

நனைக்கிற எல்லாத் துளியிலும் இருக்கிறது

ஏதோ ஒரு மழை.

வெட்டுகிற எல்லா மின்னல் கீற்றுகளிலும் இருக்கிறது

ஏதோ ஒரு ஞாபகம்.

தவிக்கும் எல்லோரின் ஞாபகங்களிலும் இருக்கும்

ஏதோ ஒரு நிலா.

ஆமென்.

பாடும் நிலா...my beloved Balu sir.. Love you to the moon and back.. And I terribly terribly miss you...! ❤️


Related Posts Plugin for WordPress, Blogger...