நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

ஞாயிறு, 8 மார்ச், 2015

இசை சூழ் தனிமை - Playlist#2இதுக்கு முந்தைய மூனு பாடல்கள் பத்தின போஸ்ட் இங்கே : இசை சூழ் தனிமை Playlist#1

ரொம்ப நாள் முன்னாடி எழுத ஆரம்பிச்ச ப்ளேலிஸ்ட் போஸ்ட்ட தொடரலாமேன்னு... இப்போ மறுபடியும்.

4.இந்த பாட்டும் ஒரு random accidentல கெடச்சது தான்.ரொம்ப பொழுது போகலன்னா சவுண்ட்க்ளவ்ட்ல எதையாவது ரேண்டமா தேடி எடுத்து கேட்டுட்டு இருப்பேன்.அப்போ எதேச்சையா இந்த பாட்டுடைய ஒரு சின்ன ஆடியோ க்ளிப்ப கேட்டேன். கேட்டவுடனே ரொம்பவும் பிடிச்சுப் போய் அந்த ஹிந்தி வரிகள்ல எனக்கு புரிஞ்சளவுக்கு எதோ tune meri jaana.. kabhi nahi jaana ன்னு ரெண்டு வரிய மட்டும் கூகுள்ல தேட ஆரம்பிச்சு ஒரு வழியா பாட்டைக் கண்டு பிடிச்சேன். ஆல்பம் பேரு ‘Emptiness'... பாடுனவரு கஜேந்திர வர்மா. பாதி லிரிக்ஸ் இங்க்லீஷ்லயும் மீதி ஹிந்திலையுமா... ரொம்ப அழகான பாட்டு. விஷுவலாவும் ரசிக்கிற மாதிரி தான் இருக்கும்.வட இந்திய இளைஞர்கள் மத்தியில ரொம்பவே பிரபலம் இந்தப் பாட்டு. காதல் பாட்டு தான்.ஹிந்தி லிரிக்ஸுக்கு மீனிங் இங்க பாத்துக்கோங்க.


Oh! Love of mine

With a song and a wine

You're harsh and divine

Like truth and a lie
But the tale ends not here
I've nothing to fear
For my love is yellow forgiving & hollow
And the bright emptiness
In a room full of heads
Is the cruel mistress... wo ho..
I feel this unrest
That nests a hollowness
For I have no where to go
And I am cold
And I feel so lonely yea..
There's a better place then this, emptiness
And I'm so lonely yea...
There's a better place then this emptiness...
Yei yei yei ye....


Read more: http://www.lyricsmint.com/2011/03/tune-mere-jaana-emptiness-lyrics-rohan.html#ixzz3Tit8Yv8k

இந்தப் பாட்டுக்கு ஒரு reprise வெர்ஷனும் இருக்கு.அதுவும் அட்டகாசமா தான் இருக்கும்.அதையும் கேட்டுடுங்க.

5.இதுவரைக்கும் சொன்ன பாடல்கள் எல்லாமே வரிகள், அது தர்ர உணர்வு, பாடலுடைய mood, காட்சிப்படுத்துன விதம்.... இதெல்லாம் தான் மேலோங்கி இருக்கும். Arrangement wise பாத்தா நான் ரொம்பவே ரசிச்ச, துள்ளலான ஒரு ஆல்பம் பாடல் இது.பெப்பு.. பெப்பு...ன்னு சொல்வாங்கள்ல அத நம்மள அறியாம நமக்குத்தரும்.செம்ம டைனமிக்கான vocals....!! பாட்டுடைய தீம்.. வழக்கம் போல காதல் தான்.நம்ம தமிழ் சினிமா ஹீரோக்களெல்லாம் ஒரு வசனம் சொல்லுவாங்கள்ல.. ’என்னத்தவிர உன்ன வேற எவனும் நல்லா பாத்துக்க முடியாது’ன்னு..கிட்டத்தட்ட அந்த மாதிரி தான்.பாதி ஹிந்தி.. பாதி இங்க்லீஷ். பெங்ளூர்வாசியான ரகு திக்‌ஸித் தான் எழுதியது.. பாடியது.. எல்லாமே...இவர் புகழ் BBC வரைக்கும் பரவியிருக்கு...!!வீடியோ வெர்ஷன் கொஞ்சம் சவ சவன்னு இருக்குற மாதிரி ஃபீல் பண்ணீங்கன்னா இங்க soundcloudல தெறிக்கிற க்வாலிட்டியோட இருக்கு..இதே பாட்டு... அதக் கேட்டுப் பாருங்க.
               

No man will ever love you, like I do

Ever since this wandering heart of mine, met you
I dismissed the time when we were strangers,
and made you mine on this journey I began My love!

I am a lost cloud in the blue sky
I hum, thunder and shower rain
Infatuated by you My Love
Amidst the stars, on the moon, on the earth and in the sky
My aspirations echo My Love
No man will ever love you, like I do


6.என்னடா ஹிந்தியாவே போய்ட்டு இருக்கேன்னு யோசிக்காதீங்க.ஒரு சேஞ்சுக்கு ஒரு மலையாள ஆல்பத்துல வந்த பாட்டு. நான் காலேஜ் படிக்கும்போது தான் மொத மொதல்ல கேட்டது. ஃப்ரெண்டோட ஃப்ரெண்டோட ஃப்ரெண்டி ரெஃபர் பண்ண பாட்டு.மலையாளமா இருந்தாலும் கிட்டத்தட்ட நமக்கு அர்த்தம் புரியும்னு வைங்க. கொஞ்சம் ‘மின்னலைப் பிடித்து மின்னலைப் பிடித்து’ பாட்ட ஞாபகப் படுத்துனா நான் பொறுப்பில்ல.ஆல்பம் பாடல்களுக்கே உரிய அந்த பாட்டுக்குள்ள கத சொல்ற டெக்னிக் ரொம்பவே பொருந்தியிருக்கும்.
அந்த ‘வெள்ளிக் கொலுசிட்ட காலச்சம் கேக்க...காத்திருக்கும் எண்டே ஹ்ருதயமே’ வரியை அப்புடி ரசிச்சேன் நான். இப்பவும் தான் :) :)

தொடரும்...!!

கருத்துகள் இல்லை :

Related Posts Plugin for WordPress, Blogger...