இன்னைக்குக் காலைல சன் டிவில ஒரு
அறிவுஜீவி சூரிய வணக்கத்துல பேசுனதைக் கேட்டேன்.வழக்கம் போல “வருஷத்துக்கு 5 லட்சம்
இஞ்சினியர்கள் படிப்ப முடிச்சு வெளில வராங்க.அதுல எத்தன பேருக்கு வேல கெடைக்குது...??
பெரும்பாலானவர்கள் சைபர் கூலிகள் தான்.அடிமைத்தனமா ஐ.டி யுடைய மேல்மட்ட வேலைகள்ள சேந்துக்குறாங்க…எதையும்
புதுசா உருவாக்கல…” அப்டி இப்டின்னு பேத்திகிட்டே.. ச்சை.. பேசிகிட்டே போனாரு.
இப்பொ ட்ரெண்ட் இதான் போல.பொறியியல் படிச்சு முடிச்சவன்
தன்னுடைய core (mechanical/electrical/civil) துறைல வேலைக்குச் சேர்ந்தான்னா ஆரம்பகால
சம்பளம் அவ்வளவு சிலாக்கியமில்ல.அடிமட்ட ட்ரெய்னியா வேலைக்குச் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமா
வேலையக் கத்துக்கிட்டு மேல வர்ரதுக்கு குறைந்தபட்சம் 4 முதல் 5 வருடங்கள் வரை ஆகலாம்.எடுத்த
உடனே காசு பார்க்க முடியாது. பெத்தவங்களும் அத விரும்புரதில்ல... அவங்களுக்குத் தேவையானதெல்லாம்
ready cash..US Visa..கல்யாணம்… கார்..வீடு.. எட்செட்ரா. Peer pressure வேற. So பசங்க ஐ.டி ய தேர்ந்தெடுக்குறாங்க.அதிக
உடல் உழைப்பு தேவையில்ல (ஆனா அதீத மன உளைச்சல் பைத்தியம் பிடிக்க வெச்சுடும்) முதல்
நிலையிலேயே ஓரளவு convincingஆன சம்பளம் (12000-14000னு வெச்சுக்கோங்க).அப்புறம் அந்த
sophistication அவங்கள வெளில வர விடாது.And it goes on...!!
இப்போ BPO க்கு வரேன்.இங்க கதையே
வேற.குறைந்த பட்சம் 7000-8000ல தொடங்கி திறமைக்கும்/அனுபவத்துக்கும் ஏத்த மாதிரி படிப்படியா சம்பள உயர்வு கிடைக்கும்.(ரொம்ப யோசிக்காதீங்க..நாலு
வருஷம் கழிச்சு 15000 சம்பாதிச்சா பெருசு) ஐ.டி கம்பெனி இண்ட்ர்வ்யூல கழிச்சு கட்டுனவங்களும்…
குறைவான சதவீதம் மதிப்பெண் வாங்குனவங்களும்...அரியர்ல Man of the series வாங்குனவங்களும்…
ஊர்ப்பக்கத்துலேர்ந்து இங்க வர்ர B.Sc\B.Com\B.C.A பட்டதாரிகளும் தான்.இவங்களுக்கெல்லாம்
பெரும்பாலும் வேலைக்குப் போய் சம்பாதிச்சே ஆக வேண்டிய கட்டாயம் இருக்கும்.ஏதோ ஒரு நிர்ப்பந்தமிருக்கும்.
(டைம் பாஸ்க்கு வேலைக்கு வர்ர பணக்கார சொட்டவாளக்குட்டிகள் விதிவிலக்கு) ஏன் BPOல ஜாயின்
பண்ணேன்னு கேட்டா ஐ.டி ல கெடைக்கல அதான் communication இம்ப்ரூவ் பண்ணிக்கலாமேன்னு
சேர்ந்தேன்னு சொல்லுவாங்க. தொடர்ச்சியான நைட் ஷிஃப்ட்...இடத்த விட்டு நகர முடியாத அளவு
பணிச்சுமை...செய்ற வேலைக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத ஊதியம்னு..எல்லாம் சேர்ந்து அவங்க
உடல் இயக்கத்தையே தலைகீழா மாத்திப் போட்டுடும்.ஒரு மூனு நாலு வருஷம் BPO ல வேலை செஞ்சவங்கள்ட்ட
பேசுனீங்கன்னா அவங்களோட அதிபட்ச கோரிக்கை “Day shiftல எதாவது ப்ராஜெக்ட் கெடைச்சா பரவால்ல
பாஸு”ங்குறது தான்.
எதுவுமே செய்யாம இருக்குறதுக்கு
எதாவது ஒரு வேலை செய்வோமேங்குறது தான் பெரும்பாலான பசங்களோட எண்ணம். அதுக்கும் மேல,
வேற பெரிய கனவுகளோட... ஐடியாக்களோட..சொந்தமா எதாவது தொழில் பண்ணனும்..மார்கெட்ல இல்லாதத
புதுசா யோசிக்கனும்னு..யாரவது திரிஞ்சாங்கன்னா இன்னும் சுத்தம்..அவங்க வீடு சுற்றம்
தொடங்கி போற வர்ரவனெல்லாம் அவனுக்கு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுடுவாங்க.”Practicalஆ யோசி..இதெல்லாம்
நடைமுறைக்கு சாத்தியமில்லாத விஷயஙகள்”னு பேசி அவனோ கனவெல்லாத்தையும் போட்டு நசுக்கிட வேண்டியது.அப்புறம்
அவனா தக்கி முக்கி எதையாவது பண்ணி மேல வர்ரதுக்கு முயற்சி செஞ்சு..சறுக்கிட்டான்னா…
அவ்ளோதான்..மொத்தமா வந்துடுவாங்க..”பாத்தியா..நான்
அப்பவே சொன்னேன்ல..உனக்கேன் இந்த வேண்டாத வேலை”ன்னு. Entrepreneurship ங்குறது இந்தியாவுல ஒரு சபிக்கப்பட்ட
விஷயம். You can never create entrepreneurs just by graduating them with an MBA
from premier institutions.
இதுவரைக்கும் சொன்ன எல்லா விஷயமும்
அபார திறமையும் அறிவும் உள்ள, அதுக்கேத்த வசதி வாய்ப்பும், தரமான கல்வியும் கிடைக்குற
இளைஞர்களுக்கு இல்ல. எல்லாத்துலயுமே mediocreஆ இருக்குற தன்னுடைய survivalக்காக ஓடிகிட்டே
இருக்குற பெரும்பான்மையான இளைஞர்களுக்கானது.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது
சார்ந்த துறைகள்ள வேல பாக்குற எல்லாரும் என்னமோ திட்டம்போட்டு அமெரிக்காவுக்கும் இன்னபிற
வெளிநாடுகளுக்கும் அடிமை வேல பாக்கப் போன மாதிரியும்..லட்ச லட்மா பணத்துல குளிக்கிற
மாதிரியும் ஒரு பிம்பத்த, சினிமாவும்..பிற ஊடகங்களும் உருவாக்கி வெச்சுருக்கு.மக்களோட
பொது புத்தியிலயும் அது பதிஞ்சு போச்சு.பன்னாட்டு நிறுவனங்களுக்குக் கதவத் தொறந்து
விட்ட அரசை எதிர்த்து யாரும் மூச்சு கூட விட மாட்டாங்க.சரியான வேலை வாய்ப்புகளையும்
உருவாக்காம..இருக்குற வேலைகளுக்குத் தகுதியான பட்டதாரிகளையும் உருவாக்காம… அவனவன் சொந்தக்
கஷ்டத்துக்கு ஏதோ கெடைச்ச வேலைக்குப் போறவனப் புடிச்சு நீ அடிமை..நீ கூலி… அது இதுன்னு
வறுத்தெடுக்குறது எந்த வகைல நியாயம் ???