Question: But some reviewers describe him (Fletcher) as a monster, and some as a cruel but necessary teacher, citing what Andrew accomplishes under his watch. Did you intend for Fletcher to be ambiguous? |
1937 ஆம் வருடம். அமெரிக்காவின் கான்ஸாஸ் மாகாணத்தில் 'ரெனோ’ க்ளப்பில் அன்றைய இசை நிகழ்ச்சிக்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறார் 16 வயது சாக்ஸபோன் கலைஞர் சார்லி பார்க்கர். மேடையில் அவரோடு ட்ரம்ஸ் வாசிக்கப்போவது ‘ஜோ ஜோன்ஸ்’ என்கிற மகா ஜித்தர். அவருடைய முறை வந்ததும் வாசிக்கத் தொடங்கிய சார்லி பார்க்கர் ஏதோ கொஞ்சம் சொதப்ப, கடுப்பான டிரம்மர் ஜோ அவருடைய ட்ரம் கிட்டின் சிம்பலை (பெரிய உலோகத்தட்டு போல.. பார்த்திருப்பீர்கள் தானே) சார்லியை நோக்கி விட்டெறிகிறார். பறந்து வந்து சார்லியின் காலில் விழ, அரங்கம் மொத்தமும் அதிர்ந்து சிரித்து ஆரவாரக் கூச்சலிட அவமானப்பட்டு மேடையை விட்டு இறங்குகிறான் இளாம் சார்லி.எங்கோ ஊருக்கு வெளிய ஒரு விடுதியில் தன்னை அடைத்துக் கொண்டு ஒரு வருடம் ராட்சசத்தனமான பயிற்சியில் ஈடுபடுகிறான்.அடுத்த வருடமே ஊர் உலகம் அதிசயிக்கிற மாதிரியான ஒரு solo பெர்ஃபாமன்ஸ் அளிக்கிறான்.அதுமட்டுமல்லாது, தன்னுடைய போதைப் பழக்கத்தால் 34 வயதில் மரணமடைந்த ’சார்லி பார்க்கர்’ aka ’The Bird', தேய்வழக்கில் சொல்வதானால் இன்றுவரை ஜாஸ் இசை உலகின் முடிசூடாமன்னராக விளங்குகிறார். ஒருவேளை 16 வயதில் , மேடை மேல் அந்த அவமானத்தை எதிர் கொள்ளாமல் போயிருந்தால்...அவர் அத்தனை பெரிய மேதையாக உருவாகியிருப்பாரா...??
பிறக்கும்போதே அதீத திறமையுடன் பிறக்கின்ற Prodigyகள் தவிர்த்து பல்வேறு துறைகளில் லெஜண்டுகள் பலரும் எண்ணிலா அவமானங்களையும் தூற்றல்களையும் தடைகளையும் தாண்டி தான் மேலே வந்திருக்கின்றார்கள். தமிழ்த் திரையுலகத்தில் ஒரு பிரபலமான உதாரணம் சொல்வதானால் ‘பராசக்தியில்’ நடிக்க வந்த சிவாஜிகனேசனுக்குக் கிடைத்த ‘குதிரை மூஞ்சி’ப் பட்டம். இசைக்கலைஞரோ, விளையாட்டு வீரரோ, நடிகரோ, கட்டிடப் பொறியாளரோ, அரசியல்வாதியோ.. யாராக இருந்தாலும் தத்தமது துறைகளில் அவர்கள் அடைகிற உயரங்களுக்கு அவமானங்கள் தான் உரமா..அல்லது வேறெப்படியாகிலும் அவர்கள் அந்த நிலையை அடைந்துவிடுவார்களா...??
கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரிகிறவர்களுக்கு இந்த ‘tapping the potential..', 'pushing beyond limits' ஆகிய சொற்றொடர்கள் பரிச்சயமானவையாக இருக்கலாம். அதாவது அதீத திறமை இருப்பதாக அடையாளம் காணப்படும் ஒருவனை, அவன் உடைந்துபோகிற அளவு உச்சகட்ட சுமையை ஏற்றி எதிர்ப்பார்புகளையும் வளார்த்துக் கொள்(ல்)வது. அந்த உச்சகட்ட சுமையில் மன அழுத்தம் தாங்காமல் உடைந்து போகிறவர்களே பெரும்பாலானவர்கள். Mediocres...!! மாறாக அத்தனை அழுத்தத்தையும் தாங்கிக் கொண்டு எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றி வெற்றிக் கோட்டை எட்டுகிற லெஜண்டுகள்/ஜீனியஸ்கள் வெகு சொற்பமே. Whiplash திரப்படத்தின் அடிநாதமே இதுதான்...!
ஆண்ட்ரூ நெய்மன் (Miles Teller), 19 வயது ட்ரம்மர். உலகின் மிகச்சிறந்த ட்ரம்மர்களில் ஒருவனாக ஆக வேண்டுமென்ற கனவோடு ஷேஃபர் இசைப்பள்ளியில் சேர்கிறான். ஒரு இரவு ஆண்ட்ரூ தன் அறையில் ட்ரம்ஸ் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும்போது அந்த வழியே நடந்து செல்கிற பயிற்சியாளர் ஃப்ளெட்சர் (J.K.Simmons), ஆண்ட்ரூவை தன்னை அடுத்த நாள் வந்து சந்திக்கும்படி சொல்கிறார். சில பல இசைத்துணுக்குகளை வாசிக்கச் செய்து ஆண்ட்ரூவைச் சோதித்த பின்னர் அடுத்த நாள் முதல் தன்னுடைய் இசைக்குழுவில் வந்து சேர்ந்து கொள்ளச் சொல்கிறார். தனது திறமை அங்கீகரிக்கப்பட்டுவிட்டதாக முதலில் மகிழும் ஆண்ட்ரூ அடுத்தடுத்த நாட்களில் தன் வாழ்நாளின் மோசமான பகுதிகளைக் கடக்க நேரிடுகிறது. காரணம், ஆசிரியர் ஃப்ளெட்சர், அவருடைய முரட்டுத்தனமான அணுகுமுறையும் மாணவர்களை மிக மிக மோசமாகத் திட்டியும் நடத்தியும், மன அழுத்தத்தை உண்டாக்கியும் அவர்களை perfectionistகளாக மாற்ற முயலும் தன்மையும் ஆண்ட்ரூவைக் கலங்கடிக்கின்றன.அவருடைய ஏச்சுகளைத் தாங்க முடியாமல் கண்ணீர் சிந்தும் ஆண்ட்ரூ, கை கிழிந்து ரத்தம் வருமளவு பயிற்சியில் ஈடுபடுகின்றான். பெரும் மன அழுத்தத்துக்குளாகிறான். ஆனாலும் ஃப்ளெட்சருடைய எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றுமளவு ஒரு போட்டியில் அட்டகாசமாக வாசிக்கவும் செய்கிறான். ஒவ்வொருமுறை ஆண்ட்ரூ தன் திறமையை நிறுவ முயலும்போதெல்லாம் ஃப்ளெட்சர் தன் எதிர்பார்ப்புகளின் உச்சவரம்பை அதிகரித்தபடியே செல்கிறார்.
பின்பு மற்றுமொரு சந்தர்ப்பத்தில் ஒரு மேடையில் வாசிக்கவேண்டிய நேரத்தில் காலதாமதமாக வந்து கார் விபத்தில் சிக்கி ரத்தம் ஒழுக மேடையேறும் ஆண்ட்ரூ சொதப்ப, ஃப்ளெட்சர் கோபத்தில் மேடையிலேயே அவனைத் திட்ட; ஆண்ட்ரூ வெறி பிடித்தாற்போல் அவர் மீது பாய்கிறான். விளைவாக, இசைப்பள்ளியிலிருந்து நீக்கப்படும் ஆண்ட்ரூ தன் தந்தையின் உதவியோடு ஃப்ளெட்சர் மீது வழக்குத் தொடுக்க, அவருக்கும் வேலை பறிபோகிறது.தனது ‘உலகின் மிகச் சிறந்த ட்ரம்மர்’ ஆகும் கனவைக் குப்பைத்தொட்டியில் போடுகிறான். சில நாட்களுக்குப் பின் எங்கோ ஒரு ஜாஸ் நிகழ்ச்சியில் ஃப்ளெட்சர் மேடையில் வாசிப்பதைப் பார்க்கிறான் ஆண்ட்ரூ. அவரும் நிகழ்ச்சி முடிந்த பின் இறங்கிவந்து தனக்கு வேலை போய்விட்டதையும் அதனால் இது போல் வெளி நிகழ்ச்சிகளில் வாசித்துவருவதாகவும் சொல்கிறார், தன்னுடைய வேலை இசைமேதைகளை உருவாவுக்குதான் என்றும், அதற்காக தான் கையாளுகின்ற பயிற்சிமுறையே சிறந்ததென்றும் கூறுகிறார். முதல் பத்தியில் இருக்கிற சார்லி பார்க்கர் உதாரணாத்தைச் சொல்லி ‘A genius can not be made without humiliations' என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார். மேலும் தனக்கு சரியான ட்ரம்மர் யாரும் அமையவில்லை எனவும் இசைப்பள்ளியில் பழக்கப்பட்ட ட்யூன்கள் தான் என்பதால் ஆண்ட்ரூ தனது இசைக்குழுவுக்காக ட்ரம்ஸ் வாசிக்க முடியுமாவென கேட்கிறார்.
ஆண்ட்ரூ ஃப்ளெட்சருடைய இசைக்குழுவுக்காக வாசித்தானா....? அவனது ஆசைப்படி உலகின் மிகச் சிறந்த ட்ரம்மர் ஆனானா ??. இசைமேதையை உருவாக்கும் ஃப்ளெட்சரின் கனவு பலித்ததா...?? படம் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
இயக்குநர் - டேமியன் சஸ்ஸேல் |
படத்தில் ஆண்ட்ரூ முதல் நாள் ஃப்ளெட்சரின் இசைக்குழுவுக்காக வாசிக்கிற காட்சி. டைமிங்கை தவறவிட்டதற்காக ஃப்ளெட்சர் சொல்கிற ‘Not quite my tempo' என்கிற புகழ்பெற்ற வசனம் இடம்பெறுகிற காட்சியும் இதுவே.எப்படி வறுத்தெடுக்கிறாரென பாருங்கள்..!!
உங்கள் கருத்துகளையும் மறக்காமல் தெரிவியுங்கள்...!