ஆனால் எதிர்பாராத விதமாக ஒரு சிறந்த, கதையம்சம் உள்ள, உணர்வுப்பூர்வமான படமாக இருக்குமென்று நிச்சயம் எதிர்பார்க்கவில்லை.
Dasvidaniya - The Best Good bye ever....
தஸ்விதானியா என்றால் ரஷ்ய மொழியில் குட்பை என்று பொருள். ஒரு மருந்து கம்பெனியில் Accounts Manager ஆகப் பணிபுரிகிறவர் நமது கதாநாயகன் அமர் கௌல் (வினய் பதக்). எந்த கெட்ட பழக்கமும் இல்லாத, பொய் வஞ்சம் எதுவும் தெரியாத, கோபப்படாத, எப்போதும் நோகடிக்கும் தனது முதலாளியை எதிர்த்துப்பேச தைரியம் இல்லாத... இப்போதுள்ள வாழ்க்கை முறைப்படி சொல்வதானால் மொத்தத்தில் பிழைக்கத் தெரியாத ஒரு மனிதன். காது கேளாத தனது தாயுடன் தனித்து வாழ்கிற ஒரு 37 வயது பிரம்மச்சாரி.தனக்கு வயிற்றில் அல்சர் இருப்பதாகச்சொல்லிய டாக்டரிடம் ரிப்போர்ட் வாங்கச்செல்லும்போது தான் தெரிகிறது வயிற்றில் கேன்சர் என்று. மிகுந்த ஆயசத்துடனும் அழுகையுடனும் மருத்துவரிடம் " எனக்கு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை, சிகரெட் பிடித்ததில்லை, மது குடித்ததில்லை எனக்கு ஏன் கேன்சர் வரவேண்டும் என்று கேட்டுவிட்டு வெளியில் வரும் அவனுக்கு வாழ்க்கையே இருண்டு விடுகிறது.
அடுத்த நாள் காலையில் வழக்கம் போல் அவன் செய்ய வேண்டிய வேலைகளை பட்டியலிடும்போது அவனது மனசாட்சி அவன் முன்னே தோன்றி அவனை கேலி செய்கிறது.இன்னும் எத்தனை நாள் தான் இதே போன்று வழக்கமான வேலைகளையே செய்துகொண்டிருக்கப் போகிறாய் என கேட்கவும் அமர் வெடித்து அழுகிறான்.அதற்காக என்னை என்ன செய்யச்சொல்கிறாய்...ரோட்டில் பொய் துணியை கிழித்துக்கொண்டு போவோர் வருவோரிடமெல்லாம் நான் சாகப்போகிறேன் என சொல்லச்சொல்கிறாயா எனக்கேட்க, கடவுள் கொடுத்தது கொஞ்சம் தான் எனத்தெரிந்து விட்ட பிறகு எதற்காக நீ அழுகிறாய்...வாழ்கையை அனுபவித்துப்பார் எனச்சொல்ல....அமர் தான் சாவதற்குள் செய்ய வேண்டிய பத்து விஷயங்களை பட்டியலிடுகிறான்.
புது கார் வாங்குவது, முதலாளியை எதிர்ப்பது, வெளிநாடு செல்வது, கிடார் வாசிப்பது,
சிறு வயது தோழி நேஹாவிடம் காதலைச்சொல்வது, பால்ய நண்பன் ராஜீவ் ஜூல்காவைச் சந்திப்பது, அம்மாவை சந்தோஷப்படுத்துவது, குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற தன தம்பி விவேக்கை திரும்ப அழைப்பது, பேப்பரின் முதல் பக்கத்தில் தன புகைப்படம் வர வைப்பது என அந்தப்பட்டியல் முடிகிறது.
அமர் தான் சாவதற்குள் அத்தனையையும் நிறைவேற்றினானா என்பது மீதிப்படம்...
படம் நெடுகிலும் நகைச்சுவையுடன் கூடிய எளிமையான, உணர்வுப்பூர்வமான காட்சியமைப்புகளால் நம்மைக் கட்டிப்போடுகிறார் இயக்குனர்.ஏதோவொரு காட்சியில் நம் கண்கள் கலங்குவதை நம்மால் கட்டுப்படுத்த முடியாது...உதாரணம், கணவன்.. குழந்தை...
என செட்டில் ஆகி விட்ட தன சிறு வயது தோழியிடம் மழையில் நனைந்தபடி, வார்த்தைகளின்றி வெறும் கை அசைவினாலேயே தன் காதலை சொல்லும் காட்சி...
பால்ய நண்பனை சந்திக்க ரஷ்யா செல்வதும் அங்கே எதிர்பாராத விதமாக அந்த வீட்டை விட்டு வெளியேறுவதும்... அதற்குப்பின் கால் கேர்ல்ஸ் கூட்டத்திடம் ஒரு சச்சரவு ஏற்பட்டு அவர்களிடம் அடி வாங்கி அழும்போதும், பின் பாலத்திலிருந்து குதித்து தற்கொலைக்கு முயல அந்த கால் கேர்ல் கூட்டத்திலிருந்து ஒருத்தி (தத்யானா) வந்து கன்னத்தில் அறைந்து அவனை காப்பாற்ற அவளிடம் குலுங்கி அழும்போதும், அதற்குப்பின் அவர்களுக்குள் ஏற்படும் காதல் என அனைத்து இடங்களில் வினய் பதக்கின் நடிப்பு சத்தியமாய் ஈடு இணையில்லாதது...
அர்ஷத் சையதின் எளிமையான கதையை மிகத்திறமையாக இயக்கியிருக்கிறார் ஷஷாந்த் ஷா...நேஹாவாக வரும் நேஹா தூபியா, நண்பன் ராஜீவ் வாக வரும் ரஜத் கபூர், தீனி பண்டார முதளியாக சௌரவ் சுக்லா, ரஷ்ய காதலி தத்யானாவாக வரும் ரஷ்ய பெண், கிடார் ஆசிரியர், தம்பி விவேக் என அனைத்து கதாபாத்திரங்களுமே மனதில் நிற்பவை...
படத்தில் கைலாஷ் கேரின் இசை பெரிய பிளஸ்... அமர் இறப்பதற்கு முன் தன் தம்பியோடு சேர்ந்து அம்மாவுக்காக கிடாரோடு பாடும் மேரி மா பாடல் ( கைலாஷ் கேர் குரலிலேயே)டாப் கிளாஸ்... அமர் இறந்த பின் அவனது நண்பனும் தம்பியும் அவனை பற்றி பேசும்போது வரும் பின்னணி இசையும் அதைத்தொடர்ந்து வரும் கிடார் தீமும் நிச்சயம் உங்கள் மனதில் நிற்கும்... பாரஸ்ட் கம்ப் (Forrest Gump) போல படம் பார்த்த பின் ஒரு மனிதனின் வாழ்க்கையையே பார்த்த நிறைவைத் தருகிறது...நேரமிருந்தால் நிச்சயம் பாருங்கள்...
அந்த பாடல்...இங்கு...!!!
டிரைலர் இதோ.
உங்கள் கருத்துரைகளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.... -சுதர்
Images Courtesy: Original Uploaders
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக