எவ்வளவு நாளாச்சு இப்டி பர பரன்னு ஒரு த்ரில்லர் பார்த்து.படத்தோட கதை என்னான்னா....
வெயிட்...அத சொன்னா படம் பாக்குற ஆர்வம் போயிடும்.அதனால படம் பார்த்து தெரிஞ்சுக்கோங்க. :):)
ஹீரோ ‘விஜய் சேதுபதி’யை பொருத்தவரையில் இது அவருக்கு கெடைச்ச ஒரு செம்ம ப்ரேக்.அவரும் பெர்ஃபார்மன்ஸ்ல குறை வைக்காம பட்டைய கெளப்பிருக்காரு.குறிப்பா அந்த பேய் பங்களா சீக்வன்ஸ்...வாய்ப்பே இல்ல..ஒளிப்பதிவாளர் ’கோபி அமர்நாத்’ அவரோட முழுத்திறனுக்கும் அந்த ஒரு காட்சித்தொடரே போதும்...Extraordinary..!!
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பத்தியும் சொல்லியே ஆகனும்.’அட்டகத்தி’ல கலக்குனவரு தான் இவரு. இந்த மாதிரி ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்துல படம், பாக்குறவங்களை அப்படியே கட்டி போடுறதுதான் முக்கியம்.அந்த வேலையை திரைக்கதையே பாதி செஞ்சுடும்னாலும் ஒளிப்பதிவும் இசையும் தான் அதை முழுமையாக்கும். அந்த பின்னணி இசையிலும் சரி... அங்கங்கு ஒலிக்கும் பாடல்களும் சரி...சும்மா அதகளம்.’மோகத்திரை’ பாட்டு மட்டும் தான் படத்துல முழுசா வருது.’ரம்யா நம்பீசன்’ படம் முழுக்க கொஞ்சம் காட்சிகளில் வந்தாலும் அழகா இம்ப்ரெஸ் பண்ணிட்டு போறாங்க.'மோகத்திரை’ பாட்டோட விஷ்வல்ஸ் செம்ம க்யூட்.
மற்ற நடிகர்கள் ஏற்கனவே குறும்படங்கள்ல நமக்கு அறிமுகமான முகங்கள் தான். SS Music பூஜா ஒரு ரோல் பண்ணிருக்காங்க.குறும்படம் எடுத்து அப்புறம் வெள்ளித்திரைக்கு வந்ததுல இந்த பட இயக்குனருக்கு முன்னோடி ‘காதலில் சொதப்புவது எப்படி?’ புகழ் பாலாஜி மோகன்.அந்த படத்துலேயும் பூஜா ஒரு சின்ன ரோல்ல நடிச்சிருப்பாங்க.இது செண்டிமெண்டா..என்னன்னு தெரியலை.. :) :)
படத்துலே ஏதும் குறையிருக்கா அப்டின்னெல்லாம் நீங்க யோசிக்குறதுக்கு இயக்குனர் நேரமே குடுக்கல.ரோலர் கோஸ்டர் ரைட் மாதிரி தட தடன்னு தொடங்கி அதே வேகத்துல படம் முடிஞ்சுடுது.குடுக்குற காசுக்கு படம் ஒர்த்து.
நல்ல Sound System உள்ள தியேட்டர்ல போய் பாருங்க.நல்ல அனுபவமா இருக்கும்.
சப்போர்ட்டிங்கான டெக்னிக்கல் விஷயங்கள் + ஒரு பிரமாதமான திரைக்கதை ரெண்டும் இருந்தா ஒரு கலக்கலான படத்தை தர முடியும்னு நிரூபிச்ச ‘பீட்சா’ படக் குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
பீட்சா- Don't miss to get your slice..!!
Photos Courtesy: Original Uploaders
2 கருத்துகள் :
பார்க்கணும்னு நினைச்சு வைக்கிற படம் எதுவும் இங்க ரிலீஸ் ஆகிறதா தெரியல. நீங்க வேற நல்ல சவுண்ட் சிஸ்டம் தியேட்டர்ல பார்த்தா நல்லாயிருக்கும்னு சொல்றீங்க. நமக்கு பழையபடி டிவிடி தான் மிஞ்சுமோ? :(
கவலைப்படாதீங்க தலைவரே.. ஒரிஜினல் டிவிடி வெளியானதும் வீட்ல... ராத்திரி.. 5.1ல..பாருங்க.. :) :) அப்பவும் அட்டகாசமா தான் இருக்கும்... :)
கருத்துரையிடுக