நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

திங்கள், 4 பிப்ரவரி, 2013

Gran Torino (2008)

                  பெரும்பாலும் மிகைப்படுத்தப்பட்ட ஹாலிவுட் ஆக்‌ஷன் திரைப்படங்களையும், Adam Sandler வகையறா நகைச்சுவை படங்களையே நான் விரும்பி பார்த்தாலும் அவ்வப்போது நண்பர்களின் பரிந்துரையின் பேரில் சில நல்ல படங்களையும் பார்த்துவிடுவதுண்டு.அப்படியொரு படமாக நான் கருதுவது தான் முரட்டு தாத்தா Clint Eastwood இயக்கி நடித்த ‘Gran Torino’.

    வால்ட் கோவால்ஸ்கி ஒரு முன்னாள் ராணுவ வீரர். போரின் போது செய்த கொலைகளுக்காக உள்ளூர குற்ற உணர்ச்சியோடும்வெளியில் வீராப்பும் வீம்புமாய் தன் வேலைகள் எல்லாவற்றையும் தானே ராணுவ ஒழுங்கோடு செய்துகொள்கின்ற வயதான ‘Korean War’ Veteran. சமீபத்தில் தனது மனைவியின் மறைவிற்குப்பின்  தனிமையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றவர். தன் இரு மகன்களோடும் அவ்வளவாக ஒட்டுதல் இல்லை. அவருடைய கார் தான் படத்தின் பெயரான ‘Gran Torino’. அமெரிக்கர்களின் ‘Muscle’ கார்கள் மீதான மோகம் ஒரு தனிக்கதை. உதாரணம் சொல்வதானால் நம் ஊரில் வெறித்தனமான புல்லட் (Bullet) ரசிகர்களை நீங்கள் கண்டிருக்கக்கூடும் கிட்டத்தட்ட அந்த மாதிரியான ஒரு craze தான் இது.

வால்ட் வசிக்கின்ற பகுதி (Neighborhood) பெரும்பங்கு தெற்காசிய நாடுகளிலிருந்து குடியேறியவர்களால் ஆக்கிரமிக்கப் பட்டுவிட அவர்களின் கலாச்சாரம் பிடிக்காமல் அவர்களோடு ஒட்டவும் முடியாமல் ஒதுங்கவும் முடியாமல் வேறு வழியின்றி வசித்துவருகின்றார். வால்ட்-ன் பக்கத்து வீட்டில் ஹ்மாங் (Hmong) என்ற இனத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் வாழ்கின்றார்கள். அந்த வீட்டின் பதின்பருவ விடலை  சிறுவன் டாவ்(Tao) அவனைத் தூண்டிவிட்ட  லோக்கல் கேங்க்ஸ்டர் நண்பர்களிடம் தன்னை நிரூபிக்கும் பொருட்டு வால்ட்-ன் காரை திருட முயற்சி செய்ய சத்தம் கேட்டு துப்பாக்கியோடு வருகின்றார் வால்ட். அவரைக் கண்டவுடன் பயந்து ஓடிவிடுகின்றான்.

இப்படியாக வால்ட்-க்கு டாவ்-வின் மீதான ஒரு தவறான பிம்பம் தோன்றுகின்றது. மற்றொரு சந்தர்ப்பத்தில் டாவ்-வின் சகோதரியை ஒரு ரவுடி கும்பலிடமிருந்து காப்பாற்றி தன்னுடைய ட்ரக்கில் அழைத்துவருகின்றார் வால்ட். அந்த பெண்ணின் பெயர் ஸ்யூ (Sue). அவளின் துடுக்குத்தனமான பேச்சால் கவரப்படும் வால்ட் அவளிடன் டாவ் பற்றி கேட்க, அவன் மிக நல்லவன் ஆனால் சரியான வழிகாட்ட யாருமில்லை எனச் சொல்கின்றாள். அவனும் அவர்களின் இனத்தைச் சார்ந்த மற்ற இளைஞர்கள்போல தவறான பாதையைத் தேர்ந்தெடுத்து விடுவானோ என தான் அஞ்சுவதாகவும் கூறுகின்றாள்.

அதன்பின் டாவ்-வுக்கு வாழ்க்கையை கற்றுக்கொடுக்கும் பொறுப்பை தான் ஏற்றுகொள்ளுகின்றார் வால்ட். டாவ்-க்கும் வால்ட்டுக்கும் இடையேயான பழக்கம்… இருவரிடமும் ஏற்படும் மனமாற்றம்…லோக்கல் ரவுடிகும்பலால் டாவ்-வின் குடும்பத்திற்கு ஏற்படும் இடைஞ்சல்கள்…எல்லா பிரச்சனைகளையும் முடிவுக்கு கொண்டுவர வால்ட் எடுக்கும் இறுதி முடிவு என்னானது…?? இவையே படத்தின் மீதிக்கதை. படம் கொஞ்சம் மெதுவாகவே நகர்ந்தாலும் நம்மை உணர்வுப்பூர்வமாக இறுதியில் ஒன்றவைப்பது உறுதி. எனக்கு படம் ரொம்பவும் பிடித்திருந்தது.

படம் பார்த்தவர்கள் உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்…! பார்க்காதவர்கள் படத்தைப் பார்த்துவிட்டு சொல்லுங்கள்..! 
Review சுட்டி: http://www.guardian.co.uk/film/2009/feb/20/gran-torino-film-review-clint-eastwood
Images Courtesy: Original Uploader

3 கருத்துகள் :

ஹாலிவுட்ரசிகன் சொன்னது…

போன மாசம் தான் “முரட்டுத் தாத்தாவோட” A Million Dollar Baby பார்த்தேன். பார்த்திருக்கீங்களா??

அது முடிந்தகையோட இந்தப் படத்தையும் ஸ்டார்ட் பண்ணினேன். கொஞ்சம் ஸ்லோவா மூவ் பண்ற மாதிரி ஃபீலிங்ஸ் வந்திச்சு. நிப்பாட்டி வச்சிட்டேன். பார்க்கணும்!

Sudharsan Haribaskar சொன்னது…

@ஹாலிவுட்ரசிகன் இல்ல ஜி.. இன்னும் மில்லியன் டாலர் பேபி பாக்கல...அடுத்தது அதான். :) இந்த படம் ஆரம்பத்துல கண்டிப்பா மெதுவா போற மாதிரி தான் இருக்கும்.ஆனா முழுசா பாருங்க.நிச்சயம் பிடிக்கும் உங்களுக்கு. Eastwood கிட்ட இருந்து இப்படி ஒரு Melodramaவை எதிர்பார்க்கல... :)Soulfull!!

...αηαη∂.... சொன்னது…

கிளைமேக்ஸ் ஏங்க பிடிக்கல.., அவங்க வீட்ல நின்னுட்டு டயலாக் பேசும் போது ரியாக்ஸன் எல்லாம் செம மாஸா இருக்குமே.. :)

Related Posts Plugin for WordPress, Blogger...