ஒரு விடுமுறை நாளின் காலை நேரம். உங்களோடு பத்து வருடங்களுக்கு மேல் பணிபுரிந்த சக பணியாளர் / நண்பர் (பெயர் ஜான் என்று வைத்துக்கொள்வோம்) யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் திடீரென ஊரை விட்டு கிளம்புவதாகத் தெரிகின்றது. நீங்களும் இன்னபிற நண்பர்களும் பரிசுப் பொருட்களோடு அவர் வீட்டை நோக்கி செல்கின்றீர்கள். அந்த நண்பர் ஒரு பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியர். முனைவர் பட்டம் பெற்றவர்.
அவரைப்
போலவே நீங்களும் சக நண்பர்கள் அத்தனை பேருமே வெவ்வேறு துறைகளில் (Biology, Anthropology,
Archaeology, Psychology, Biblical expertise) முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர்கள்.
சுருங்கச் சொன்னால் தத்தமது துறை சார்ந்த அறிவில் வல்லுநர்கள். ஜான் ஒரு அறிவாளி. திறமையான
வேலைக்காரன். அவன் இப்படி சட்டென்று எல்லாவற்றையும் உதறிவிட்டுச் செல்வதில் யாருக்கும்
விருப்பமில்லை. காரணம் கேட்டு அவனைத் துருவத் தொடங்குகின்றார்கள் எல்லோரும். மேலும்,
பத்து வருடங்களாக இளமையாகவே இருப்பதன் இரகசியம் என்ன எனவும் கேலியாகக் கேட்கின்றார்கள்.
முதலில்
மழுப்பி சமாளிக்கும் ஜான் பின்பு பேச்சை திசை திருப்புகின்றான். கற்காலத்துக்கும் முன்பாக
வாழ்ந்த மனிதன் ஒருவன் இன்றும் உயிரோடிருப்பதற்கான சாத்தியம் என்ன என்று கேட்க… ஒவ்வொருவரும்
ஆர்வத்தோடு ஒவ்வொருவரும் தங்கள் கருத்துகளைச் சொல்கின்றார்கள்.
- அவனுக்கு எந்த நோய் தாக்கத்தையும் தாங்கிக் கொள்ளக் கூடிய எதிர்ப்புசக்தி இருந்திருக்க வேண்டும்.
- காலத்தை மீறிய அறிவை அவன் கொண்டிருக்க முடியாது.
- உலகம் எதையாவது புதிதாக கற்றுக் கொள்ளும்போது தான் அவனும் கற்றுக் கொண்டிருப்பான்.
- அவனுடைய தற்போதைய வயது கிட்டத்தட்ட 14,000 ஆண்டுகள் இருக்கும்
இப்படி
ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டே வருபவர்கள்… ஜானிடம், “ நீ ஏதும் புத்தகம் எழுதப் போகின்றாயா…அப்படியென்றால்
நிச்சயம் எங்களிடம் காட்டு…” என பலவாறாக பேசிக்கொண்டிருக்க.. திடீரென ஜான் அந்த விஷயத்தைச்
சொல்கின்றான்.
அந்த 14,000 வயது மனிதன் தான்
தானென்று….!!
அதற்குப் பிறகு…!!!!???
கட்…!!
ஐந்து
அல்லது ஆறு டாக்ரேட்டுகள் (ஒரு பெண் உட்பட)… ஒரு இளம் மாணவி… ஒரு நடுத்தர வயது பேராசிரியை….!
இவர்களனைவரும் ஒரு வீட்டிற்குள்ளேயே உட்கார்ந்து கொண்டு, மனிதனின் தோற்றம் பற்றியும்…பரிணாம
வளர்ச்சி பற்றியும்… மதங்களின் வரலாற்றையும்… உலகின் தோற்றத்தை பற்றியும்… வெறுமனே
பேசிக் கொண்டேயிருப்பதை எவ்வளவு நேரம் கேட்டுக் கொண்டிருப்பீர்கள்…!!
கிட்டத்தட்ட
90 நிமிடங்களில் கொஞ்சமும் சலிப்படைய வைக்காமல் அட்டகாசமான..நேர்த்தியான திரைக்கதையோடு..பெரிய
ஜிகினா வேலைகள் எதுவுமில்லாமல் ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் படம் எடுக்க முடியும் என்பதற்கு
இந்த திரைப்படமே சாட்சி…!! நான் பார்த்தவரையில் 12 Angry Men-க்கு பிறகு பட்டாசான ஒரு
conversation movie…!!
If you are fascinated by
facts, then please don’t miss to watch this movie..!!!
இந்த படம் பற்றி நண்பர் கருந்தேள்
ராஜேஷின் சுவையான அறிமுகத்தைப் படிக்க: இங்கு செல்லவும்
மேலும் திரைப்படம் பற்றிய உருப்படியான ஒரு விவாதம் : இங்கு
படத்தின் ட்ரெய்லர் :
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக