2014 – சென்னை புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய
புத்தகங்கள்
1. சாமானியனின் முகம் – சுகா – வம்சி பதிப்பகம்
– ரூ.170
2. பீக்கதைகள் – பெருமாள் முருகன் – அடையாளம் பதிப்பகம்
– ரூ.60
3. அனுபிஸ் மர்மம் – சத்யஜித் ரே (வீ.பா.கணேசன்)
– பாரதி புத்தகாலயம் – ரூ.30
4. நெப்போலியனின் கடிதம் - சத்யஜித் ரே (வீ.பா.கணேசன்)
– பாரதி புத்தகாலயம் – ரூ.50
5. ’குடி’யின்றி அமையா உலகு… - முத்தையா வெள்ளையன்
(தொகுப்பு) – புலம் – ரூ.120
6. என் நண்பர் ஆத்மாநாம் – ஸ்டெல்லா ப்ரூஸ் – விருட்சம்
– ரூ.100
7. வளையல்கள் அடித்த லூட்டி – விழியன் - பாரதி
புத்தகாலயம் – ரூ.25
8. பென்சில்களின் அட்டகாசம் - விழியன் - பாரதி
புத்தகாலயம் – ரூ.25
9. மாகடிகாரம் - விழியன் - பாரதி புத்தகாலயம் –
ரூ.30
10. டாலும் ழீயும் - விழியன் - பாரதி புத்தகாலயம்
– ரூ.25
11. மலர் அல்ஜீப்ரா – ‘ஆயிஷா’ இரா.நடராசன் – பாரதி
புத்தகாலயம் - ரூ.30
12. புனைவின் நிழல் – மனோஜ் – உயிர்மை – ரூ.70
13. பட்டு – அலெசான்ட்ரோ பாரிக்கோ (சுகுமாரன்)
– காலச்சுவடு – ரூ.95
14. எப்படி ஜெயித்தேன் – எம்.ஜி.ஆர் – நாதன் பதிப்பகம்
– ரூ.50
15. ஆதிமங்கலத்து விசேஷங்கள் – க.சீ.சிவகுமார்
– விகடன் பிரசுரம் – ரூ.50
16. உலக இலக்கிய பேருரைகள் – ஹெமிங்வேயின் கிழவனும்
கடலும் –
எஸ்.ராமகிருஷ்ணன் – உயிர்மை பதிப்பகம் – ரூ.60
17. அணுவின் உள்ளே – ஐஸக் அஸிமோவ் (என்.ராமதுரை)
– தையல் வெளியீடு – ரூ.70
18. நாளை மற்றுமொரு நாளே – ஜி.நாகராஜன் – காலச்சுவடு
19. இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன ? – ராஜ்
சிவா – உயிர்மை – ரூ.175
20. கடலோடி – நரசய்யா – அலர்மேல்மங்கை – ரூ.70
21. கணையாழியின் கடைசிப் பக்கங்கள் – சுஜாதா –
விசா பப்ளிகேஷன்ஸ்
22. விவாதங்கள் விமர்சனங்கள் – சுஜாதா - விசா பப்ளிகேஷன்ஸ்
23. தோரணத்து மாவிலைகள் – சுஜாதா - விசா பப்ளிகேஷன்ஸ்
24. நேனோ-ஓர் அறிமுகம் – அருண் நரசிம்மன் – தமிழினி
– ரூ.75
25. ஜோனதன் லிவிங்ஸ்டன் சீகல் எனும் ஞானப்பறவை
– ரிச்சர்ட் பாக் – விஜயா
பதிப்பகம் – ரூ.35
26. இராசராசன் துணுக்குகள் நூறு – தமிழ்நாடு அரசு
தொல்லியல் துறை
27. லிண்ட்சே லோஹன் – w/o மாரியப்பன் – வா.மணிகண்டன்
– யாவரும்.காம் – ரூ.90
28. 6174 – சுதாகர் கஸ்தூரி – வம்சி பதிப்பகம்
– ரூ.300
புத்தகங்கள் வாங்குவதைக் காட்டிலும் நண்பர்களையும் ஆதர்சங்களையும் சந்திப்பதில் கிடைக்கிற மகிழ்ச்சிக்காகத்தான் ஓவ்வொரு முறையும் புத்தகக் கண்காட்சி தொடங்கும்போது குதூகலாமாய் போய் வருவது. இந்த முறையும் ஏகப்பட்ட நண்பர்களை சந்தித்தேன்.புதிய நட்புகள் கிடைக்கப் பெற்றேன். இதுவரையில் நேரில் பார்த்திராத ஆதர்சங்கள் பலரையும் பார்த்துப் பேசியதில் மகிழ்ச்சி.
பட்டியலில் சில பல புத்தகங்கள் நண்பர்கள் பரிசளித்தவை. பரிசல் அண்ணனின் திடீர் பரிசு தான் ஜி.நாகராஜனின் புத்தகம். ரொம்ப மகிழ்ச்சியளித்தது J J. சுஜாதாவின் புத்தகங்கள் அனைத்தும் என் மாமா வாங்கித் தந்தவை. ரொம்பவே எதிர்பார்த்து புத்தகத் திருவிழா நிறைவடையும் வரையில் வெளிவராத புத்தகங்கள் சுஜாதாவின் அறிவியல் கட்டுரைகளின் தொகுப்பு (உயிர்மை), அருண் நரசிம்மனின் அறிவியல் கட்டுரைகள் (தமிழினி, அமிர்தா) ஆகியவை. ஏகப்பட்ட புதினங்களை நண்பன் வேதாளம் வாங்கிக் குவித்திருப்பதால் ‘டேய் நீ எதுவும் வாங்கிடாத…என்கிட்ட கேட்டுட்டு வாங்கு’ என மிரட்டல் விடுத்திருந்தான்.
அதனால் முடிந்தவரையில் புனைவல்லாதவையில் அறிவியல் கட்டுரைகள், பிற கட்டுரை தொகுப்புகள், சிறுவர் இலக்கியம், வரலாறு தொடர்பான புத்தகங்கள் மட்டுமே வாங்கியிருக்கின்றேன். வாங்குறது முக்கியமில்ல படிக்குறது தான் முக்கியம் என்று யாரவது கமெண்ட் பண்ணும் அபாயமிருப்பதால் நிச்சயம் எல்லா புத்தகங்களையும் படித்து முடித்து விடுவேன் என முன்கூட்டியே சொல்லிக் கொள்கிறேன்.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக