நிர்மல் அவர்களின் ‘ காணாமல் போன தேசங்கள்’ புத்தகம் குறித்து...
Geopolitics - politics, especially international relations, as influenced by geographical factors. புவியியல் காரணிகள் , சர்வதேச அளவில் பிற நாடுகளோடான உறவு, இவை சார்ந்த அரசியலே - புவியரசியல்.
‘காணாமல் போன தேசங்கள்’ -தலைப்பே விவரிப்பது போல, கால ஓட்டத்தில் உலக வரைபடத்திலிருந்து காணாமல் போன நாடுகள் குறித்தும் அந்தந்த நாடுகளின் அரசியல், மொழி, கலாச்சாரம், இனக்குழுக்கள் (Ethnic groups) , வாழ்வியல், சந்தித்த பிரச்சனைகள், பிற நாடுகளின் தலையீடுகள் குறித்தும் மிக விரிவாக பேசியிருக்கிறார்.
யூகோஸ்லாவியா தொடங்கி ஒருங்கிணைந்த சோவியத் ரஷ்யா வரை காணாமல் போன இந்த தேசங்களின் வரலாறுகளை உற்று நோக்கினால் இனம், மொழி, மதம், அரசியல், கலாச்சாரம் என பல வேறுபாடுகளைக் கொண்டிருக்கிற நாடுகள், மொழியின் அடிப்படையிலோ மதத்தின் அடிப்படையிலோ, ஏதோவொரு ஒரு ஒற்றை அடையாளத்தின் கீழ் மக்களைத் திணிக்க முயல்வதே புரட்சியும் வன்முறையுமாய் சிதறிப் போக காரணமாக இருந்திருக்கிறது.
ஒவ்வொரு நாடுகளின் இடர்பாடுகள் உள்நாட்டுக் குழப்பங்கள் குறித்து வாசிக்கும்போதும் நம் நாட்டில் அதே மாதிரியான ஒரு நிகழ்வோடு அதனை ஒப்புநோக்கத் தோன்றுவதை தவிர்க்கவே முடியவில்லை. ஈழம், காஷ்மிர் என பலவற்றை நிர்மல் அவரே விரிவாக ஒப்பிட்டு பேசியிருக்கிறார். காலம் காலமாக நாம் சமூக அறிவியல் புத்தகங்களில் படித்துவந்த இந்திய நாட்டின் ’Unity in diversity - வேற்றுமையில் ஒற்றுமை’ என்கிற கோட்பாட்டின் நடைமுறைச் சாத்தியக் கூறுகள் குறித்தும் உண்மையான நிலை குறித்தும் நமக்கொரு தெளிவான புரிதல் கிடைக்கிறது. நிலவுடைமை, நிலப்பிரபுத்துவம், பண்ணை அடிமை முறை,தேசியவாதம், தனிப்பட்ட மனிதர்களின் அதிகார வெறியால் பாதிக்கப்பட்ட நாடுகள், இயற்கை வளங்களின் மேலாண்மை, மூன்றாம் உலக நாடுகளில் வல்லரசுகளின் சூழ்ச்சி விளையாட்டுகள், என அவ்வளவு தகவல்கள் புத்தகம் முழுவதும் கொட்டிக் கிடக்கின்றன.
திராவிட சித்தாந்தம் முன்வைக்கிற மாநில சுயாட்சி (State Autonomy), இறையாண்மை (Sovereign state) ஆகிய கொள்கைகளின் முக்கியத்துவம் பற்றி பேசுகிற அதே வேளையில் தேசியம் (Nationalism), இன அடையாளங்களை (Ethnic identity) பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்தும் பேசப்படுகிறது.
இறுதியாக ஒரு தேசம் அதன் மக்களிடையேயான இன/மத/மொழி/கலாச்சார வேறுபாடுகளுக்கு மதிப்பளித்து சுதந்திரமாக தன்னாட்சி செய்வதால் விளைகிற நன்மைகளையும் அதற்கு உதாரணமாக சுவிட்சர்லாந்தின் ஆட்சிமுறை/அரசியலமைப்பை சொல்வதோடு முடிகிறது.
த்ரில்லர் வகைக் கதைகளும்,திரைப்படத்தின் சுருக்கமான வடிவிலான கதைகளும், காதல் கதைகளுமாய் நிறைந்து கிடக்கிற இந்த #PenToPublish போட்டியில் இத்தனை தீவிரத்தன்மை வாய்ந்த ’புவியரசியல்’ (Geopolitics) பேசுகிற கட்டுரைத் தொகுப்பை எழுத முடிவு செய்ததற்கே தனிப்பட்ட முறையில் வாழ்த்துக்கள். புத்தகத்தின் கடைசியில் கொடுக்கப்பட்டிருக்கும் reference புத்தகங்களின் பட்டியல் மட்டும் நான்கு பக்கங்களுக்கு நீள்கிறது. அத்தனை அசுரத்தனமான உழைப்பு & விவரணை. So far, this has been the most sincere effort which has been made for 2019 #PenToPublish contest.
தமிழ் இலக்கியப் பரப்பில் புனைவல்லாத படைப்புகளுக்கான இடம் பயணக் கட்டுரைகள், இலக்கியவாதிகளின் அனுபவக் கட்டுரைகள் என்கிற அளவில் பெரும்பான்மையாகவும், மாநில/தேசிய அரசியல், வரலாறு, அறிவியல் பேசுகிற புத்தகங்கள் ஓரளவும் புழக்கத்தில் இருக்கின்றன. அபுனைவின் முக்கியமான சிக்கல் அவற்றில் பெரும்பாலானவை கொண்டிருக்கிற ஆய்வுக்கட்டுரை மாதிரியான கடுமையான மொழியே. வளர்-இளம் பருவத்தினருக்கான (Teen & Young adults) எளிமையான மொழியைக் கொண்ட அபுனைவுகள் இல்லாத குறையை , இந்தப் புத்தகம் போக்கும் என நிச்சயம் நம்புவோம்.மீண்டுமொரு முறை மனம்நிறைந்த வாழ்த்துக்கள் நிர்மல்.வாய்ப்பும் நேரமும் அமைந்தால் தொடர்ந்து எழுதவும்...!
புத்தகம் ஆன்லைனில் வாங்க: இங்கு
"இனக்குழுக்கள் உலகெங்கும் எல்லா சமூகங்களிலும் இருப்பதுதான். அதனால் இனக்குழு என்பது பிரச்சனை அல்ல. அரசியல் அதிகாரத்தின் மூலம் சில குறிப்பிட்ட இனக்குழுக்களுக்கு காட்டும் தனி முக்கியத்துவமும் மற்றவர்களை ஓரம் கட்டுவதுமே முக்கிய பிரச்சனை. அதிகாரத்தை வைத்து நில வளங்கள் மற்றும் வேலை வாய்ப்பை தங்களுக்குள் வைத்துக் கொண்டு சிலரை ஒதுக்குவதே இனக்குழு பிரச்சனையின் மூலம். இதுதான் பகை உணர்வுகளும் வன்முறைகளும் உருவாவதற்கு காரணங்கள்."
‘காணாமல் போன தேசங்கள்’ -தலைப்பே விவரிப்பது போல, கால ஓட்டத்தில் உலக வரைபடத்திலிருந்து காணாமல் போன நாடுகள் குறித்தும் அந்தந்த நாடுகளின் அரசியல், மொழி, கலாச்சாரம், இனக்குழுக்கள் (Ethnic groups) , வாழ்வியல், சந்தித்த பிரச்சனைகள், பிற நாடுகளின் தலையீடுகள் குறித்தும் மிக விரிவாக பேசியிருக்கிறார்.
யூகோஸ்லாவியா தொடங்கி ஒருங்கிணைந்த சோவியத் ரஷ்யா வரை காணாமல் போன இந்த தேசங்களின் வரலாறுகளை உற்று நோக்கினால் இனம், மொழி, மதம், அரசியல், கலாச்சாரம் என பல வேறுபாடுகளைக் கொண்டிருக்கிற நாடுகள், மொழியின் அடிப்படையிலோ மதத்தின் அடிப்படையிலோ, ஏதோவொரு ஒரு ஒற்றை அடையாளத்தின் கீழ் மக்களைத் திணிக்க முயல்வதே புரட்சியும் வன்முறையுமாய் சிதறிப் போக காரணமாக இருந்திருக்கிறது.
ஒவ்வொரு நாடுகளின் இடர்பாடுகள் உள்நாட்டுக் குழப்பங்கள் குறித்து வாசிக்கும்போதும் நம் நாட்டில் அதே மாதிரியான ஒரு நிகழ்வோடு அதனை ஒப்புநோக்கத் தோன்றுவதை தவிர்க்கவே முடியவில்லை. ஈழம், காஷ்மிர் என பலவற்றை நிர்மல் அவரே விரிவாக ஒப்பிட்டு பேசியிருக்கிறார். காலம் காலமாக நாம் சமூக அறிவியல் புத்தகங்களில் படித்துவந்த இந்திய நாட்டின் ’Unity in diversity - வேற்றுமையில் ஒற்றுமை’ என்கிற கோட்பாட்டின் நடைமுறைச் சாத்தியக் கூறுகள் குறித்தும் உண்மையான நிலை குறித்தும் நமக்கொரு தெளிவான புரிதல் கிடைக்கிறது. நிலவுடைமை, நிலப்பிரபுத்துவம், பண்ணை அடிமை முறை,தேசியவாதம், தனிப்பட்ட மனிதர்களின் அதிகார வெறியால் பாதிக்கப்பட்ட நாடுகள், இயற்கை வளங்களின் மேலாண்மை, மூன்றாம் உலக நாடுகளில் வல்லரசுகளின் சூழ்ச்சி விளையாட்டுகள், என அவ்வளவு தகவல்கள் புத்தகம் முழுவதும் கொட்டிக் கிடக்கின்றன.
For every Nationalism there will be a counter Nationalism. ஏனென்றால் தேசிய உணர்வு என்பது மிக எளிதில் மக்களை ஒன்றுபடுத்தக் கூடிய உணர்வு. அது மிக எளிதாக முன் பின் தெரியாத நபர்களை இணைக்கும், போராட வைக்கும்.... அந்த இணைப்பு சிலரையோ, பலரையோ தனிமைபடுத்தக் கூடும்.