லஷ்மி
சரவணகுமாரின் ‘ரூஹ்’ நாவல் குறித்து
.
அமேசான் நிறுவனம்
நடத்தும் கிண்டில் #PenToPublish போட்டி குறித்தும், இம்முறை
அதிகளவு தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள்
இடம்பெற்றிருப்பதும் அனைவரும் அறிந்ததே. இந்த வரிசையில் வெளிவந்த
படைப்புகளில் நான் முதலில் படித்தது
லஷ்மியின் ‘ரூஹ்’. ரூஹ் என்ற
சொல்லுக்கு ஆன்மா என்று பொருள்
சொல்கிறது இணையம்.
பிரார்த்தனைகள் நிரம்பிய மனிதர்களை கவலைகள் ஒருபோதும் நெருங்குவதில்லை.
எத்தனை இரவுகளை, எத்தனை பகல்களை தான் என்ற எண்ணமின்றி வாழ்ந்திருக்கிறோம் என ஒரு மனிதன் தெரிந்து கொண்டுவிட்டால் அவன் ஒருபோதும் உலக இச்சைகளின் மீது பற்றுக் கொள்ளாதவனாக வாழத்துவங்கி விடலாம். அப்படிப் பார்த்தால் இங்கு பிணியோடு வந்து குணமாகிச் செல்லும் ஒவ்வொரு மனிதனும் இறைவனின் முழுமையான கருணையால் மறுபிறப்பெடுத்தவனாகவே செல்கிறான்.
சிறுவயதிலிருந்தே
குடும்பமும் சுற்றமும் வெறுக்கிற, அவனுடைய உடல்மொழியின் பெண்மைக்காக சீண்டப்படுகிற
கேலிக்குள்ளாகிற ஜோதி என்கிற உணர்வுகளின் பாற்பட்ட
வெற்று மனிதன்; அவனுடைய எண்ணவோட்டங்களும்
மனவக்கிரங்களும் அவனைச் செலுத்துகிற பாதை;
இறுதியில் அவன் கண்டடைகிற முடிவு.
இந்த உருமாற்றமும் அதனூடான உரையாடல்களும் தத்துவார்த்தமான
கேள்விகளுமே ஒரு cathartic process (இணையான தமிழ்சொல்லாம் துப்புறவாக்கத்தில்
catharsisன் அழகு இல்லை).
அவளின் நினைவென்பது பற்றியெரியும் காட்டுத் தீயின் உக்கிரம், சதையும் எலும்புகளும் சமாதானமாகாத களிப்பின் திரட்சி, ஒரு வெய்யில் நாளின் நீண்ட தாகம், அவளென்பது யாதுமான பேருரு
நிறைந்திருக்கின்றது ‘ரூஹ்’. கிட்டத்தட்ட நூற்றாண்டுகளாய் நிகழ்கிற பெரும் பயணங்களாலும் அதில் பங்குகொண்டு பயணிக்கிறவர்களின் கதைகளாலும் ஆனது ‘ரூஹ்’
வெறுப்பதை விடவும் ஒருவரை நேசித்தல் எளிது, தன்னால் நேசிக்கவே முடியாதென மனம் சொல்லும் போது அமைதியாக ஒதுங்கிச் செல்லுதல் அதனினும் எளிது.
லஷ்மி சரவணகுமாரின் முந்தைய படைப்பான கொமொரா முழுக்க முழுக்க வெறுப்பையும் அது சார்ந்த உணர்வுகளையும் பேசியதெனில், ‘ரூஹ்’ அதன் எதிர் துருவத்தில் நின்று முழுமையான அன்பையும் சரணடைதலையும் பேசுகின்றது. என்னளவில் இதுவரையிலான லஷ்மியின் படைப்புகளில் ‘ரூஹ்’ எப்போதுமே முதலிடத்தில் இருக்கும்.
தவறவிடக் கூடாத படைப்பு...! கட்டாயம் வாசித்துவிடவும்...!
மின் புத்தகம் வாங்க: இந்த இணைப்பை க்ளிக்கவும்
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக