எனக்கு பெரிய உலக சினிமா பரிச்சயமெல்லாம் இல்லை. ஆனாலும் வெவ்வேறு இயக்குநர்களின் திரைப்படங்களை தொடர்ச்சியாகப் பார்க்கும் போது அவர்களுடைய காட்சி மொழி, Signatureலாம் ஓரளவு புரிஞ்சுக்க முடிஞ்சுது ( Eg: Wes Anderson, Quentin Tarantino, Spike Lee, David Fincher)
அந்த மாதிரி சில குறிப்பிட்ட உணர்வுகளை திரைல காட்சிப் படுத்தும்போது இந்த இயக்குநர் தான் இத சிறப்பா பண்ண முடியும்னு தோணும்....ஒரு கட்டத்துல அதே உணர்வுகளையும் காட்சி மொழியையும் வேற யார் கையாண்டாலும் நம்ம மனசுல பதிஞ்ச நமக்கு விருப்பமான இயக்குநருடைய signature தான் தெரியும்...
(spoilers ahead)
அந்தகாரம் படம் பாத்தப்போ படம் முழுக்க என் மனசுல மிஷ்கின் தான் இருந்தாரு. கதைலயும் நிறைய விஷயங்கள் அவருடைய படங்கள நினைவூட்டிகிட்டே இருந்துச்சு. பார்க்கும் திறனற்ற செல்வம் பாத்திரம், அப்புறம் அந்த ஃபோன தூக்கிட்டு வினோத் ஓட்றது அப்டியே பிசாசு படத்துல நாயகன் ஆப்பிள் டப்பாவோட ஒட்ற காட்சியையும் நினைவு படுத்துச்சு. மரணத்துக்கான தேடல், காரணங்கள், இறந்து போனவங்க உதவி பண்றதுன்னு நிறைய பிசாசு references.
(spoilers end)
படம் பார்த்த நிறைய பேர் குறையா சொன்னது running time... கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்கள்... ஆனா இயக்குநர் நினைச்ச மாதிரி எல்லாத்தையும் visual ஆ காட்டிருந்தா இன்னமும் ஒரு 30-40 நிமிஷம் அதிகமாகியிருக்கும். அதை தவிர்க்க தான் க்ளைமாக்ஸ்ல மொத்தமா வசனத்துல எல்லாத்தையும் விளக்கி சொல்ல வேண்டியதா இருந்துச்சுன்னு நினைக்கிறேன்.
தனிப்பட்ட முறைல எனக்கு சிக்கலா தோன்றியது Psychiatry/psychology பத்தி பொதுவா மக்களுக்கு இருக்கிற தவறான புரிதல்களையும் அச்சங்களையும் ஊதிப் பெருசாக்குற மாதிரியான காட்சிகள்/உரையாடல்கள் படம் முழுக்க இருக்கு. நிறைய misconceptions and misunderstandings வர வாய்ப்பிருக்கு. டாக்டர் பாத்திரத்தின் அடிப்படையிலேயே பிரச்சனை இருக்குறதா தோணுது. அமானுஷ்யத்தையும், உளவியலையும் குழப்பியடிச்சிருக்க வேணாம்.
மத்தபடி ரொம்ப சிக்கலான திரைக்கதை அமைப்போட வினோத், செல்வம், டாக்டர் இவங்க மூனு பேருடைய கதைகளையும் இணைச்சு சொன்ன விதமும், காட்சிப்படுத்தலும், Non-linearஆ அதைத் தொகுத்த விதமும் ரொம்பவே நல்லா இருந்துச்சு. நான் சலிக்காம பாத்தேன். ரொம்பவே புடிச்சுது...! பிரதீப் குமாரின் இசையும் பொருத்தமா, சிறப்பாவே இருந்துச்சு (Srini மாதிரி யாராவது இதப்பத்தி technical ஆ விரிவா எழுதுவாங்கன்னு நம்புறேன்)
நந்தா படத்துல ஜூனியர் சூர்யாவா அறிமுகமாகி 'நான் மகான் அல்ல'ல வில்லத்தனம் பண்ண விநோத் கிஷன் இதுவரைக்கும் template ஆ பண்ண எந்த பாத்திரம் மாதிரியும் இல்லாம நல்லாவே நடிச்சுருக்காரு. ரொம்ப பவர்ஃபுல்லான கண்கள் அவருக்கு.. ஆனா அவரை பார்வையற்றவரா நடிக்க வெச்சுட்டாங்க. ஆனாலும் he scored 😊❤️ அர்ஜூன் தாஸுக்கும் நல்ல scope இருக்கிற பாத்திரம்... அந்த madnessக்கு சரியா பொருந்திப் போற ஒரு ஆள். நல்ல performance. Casting was on point. அந்த பிரதீப் அக்கா (Misha Goshal) and வினோத்துடைய காதலி (Pooja Ramachandran) பாத்திரங்களின் உருவ ஒற்றுமை தற்செயலா அல்லது நம்மள குழப்புறதுக்காக வலிஞ்சு பண்ணதா தெரியல 😂
OTT இல்லன்னா இந்த மாதிரி experimentகள் வெளிச்சதுக்கே வராது.Despite of some clichés, I liked the movie overall and was totally immersed Since it is an entirely different attempt made in Tamil (or I feel that way), I wanted to write about this movie. Kudos to the director and the whole team 😊
Can't believe that the movie was originally made in 2014...!
Anthagaram is streaming on Netflix
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக