நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

ஞாயிறு, 30 நவம்பர், 2014

காவியத்தலைவன்
நேத்து காவியத்தலைவன் பாத்துட்டேன். வழக்கமா வசந்தபாலன் படங்களில் இருக்கிற சோகமோ...இருன்மையோ இல்லாம ரொம்ப கொண்டாட்டமா கலர்ஃபுல்லா இருந்துச்சு படம். என்னுடைய தாத்தா அந்த காலத்துல ஏகப்பட்ட மேடை நாடகங்கள்ல நடிச்சவரு... நிறைய கதைகள சொல்லுவாரு... சங்கரதாஸ் சுவாமிகளுடைய நாடகங்கள்.. நாடக நடிகர்களுடைய வாழ்க்கைமுறை... அரிதாரம் பூசிக்கிறதுல தொடங்கி... மண்ணெண்ணை வெச்சு தேங்கா நார போட்டு தேய்ச்சு வேஷங்கலைக்குற வரைக்கும்...நெறைய சொல்லிருக்காரு. அந்த வெத்தலை குதப்பலோட கண்ல கொஞ்சம் போதையோட பேசுகிற ஸ்டைலாகட்டும்... மல் துணி சட்டையாகட்டும்... நான் கேள்விப்பட்ட விஷயங்கள் எல்லாமே படத்துல Close to reality காமிச்சுருக்காங்க. அதப் பத்தி எழுத ஆரம்பிச்சா இன்னும் எழுதிட்டே போலாம்.

அப்புறம் நாடக நடிகர்களுக்கு கெடைச்ச சமூக அங்கீகாரம் பத்தி படத்துல பாதி தான் (இராஜ பார்ட் மட்டும்) வருது.இது இல்லாம ஸ்த்ரீ பார்ட் போடுறவங்க.. கள்ளபார்ட் வேஷம் கட்டுனவங்க.. அவங்கள மக்கள் நடத்துன விதம் (ஸ்த்ரீ பார்ட் -கேலி, கள்ள பார்ட் - வெறுப்பு) இதெல்லாம் தாத்தா சொல்லி கேட்டுருக்கேன்.ரொம்ப பழைய படங்கள் மேல ஆர்வமேற்பட்டதுக்கு என் பெரிய மாமாவும் தாத்தாவும் தான் காரணம்.

படத்துல சொல்லப்பட்டிருக்குறது எஸ்.ஜி.கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள் அவர்களுடைய கதைன்னு சொன்னாலும்... சித்தார்த்துடைய அந்த வாழ்ந்து கெட்ட பாத்திரம் எனக்கு தியாகராஜ பாகவதரைத் தான் ஞாபகப் படுத்துச்சு.அவருடைய Rise and fall மட்டும் ஓரளவு ஒத்துப் போகுது.. ஆனா சுதந்திரப் போராட்ட பின்னணி..சினிமா வாழ்க்கை இதிலெல்லாம்..MKT வாழ்க்கை irrelevant.

பிருத்விராஜுங்குற நடிப்பு ராட்சசனுக்கு முன்னால சித்தார்த் டல்லடிச்சு தான் போறாரு.என்னவோ என்னால சித்தார்த் கேரக்டரோட ஒத்துப்போகவே முடியல...!அந்த ஜமீந்தார் மகளுடனான காதலாகட்டும்..அவளுடைய மறைவுக்குப் பின்னான சோகமும் அழுகையுமாகட்டும்.. சித்தார்த்துடைய நடிப்பு கொஞ்சங்கூட என்ன பாதிக்கல. பிருத்விராஜ் அடிச்சு ஃப்ரேமுக்கு ஃப்ரேம் பட்டைய கெளப்பிருக்காரு.வேதிகாவைப் பத்தியும் சொல்லனும்..ரொம்ப இயல்பான...அழகான நடிப்பு. வெச்ச கண் வாங்கல :) :) அழ...கி..!


செட்கள், எழுத்து, ஒப்பனைன்னு எல்லா விஷயத்தையும் பாத்துப் பாத்து பண்ணிருக்காங்க.ஆனாலும் வசனங்கள் எனக்கு திருப்தியில்ல...! :( ராஜேஷ் சொல்லிருக்க மாதிரி ரொம்பவே சாதாரணமான வசனங்கள்.இதுக்கு ஜெயமோகன் தேவையில்ல.அப்புறம் இதுவரைக்கும் இல்லாத வகைல.. இது ரஹ்மான் இசைன்னு துருத்திகிட்டுத் தெரியாம.. நம்மள distract பண்ணாம (ARR எப்பவும் அப்படியில்ல..ஆனாலும் இசை தனியா தெரியும்) படத்தோட ஒன்றி பாக்கமுடிஞ்சுது. (ஏற்கனவே இந்தப்படப் பாடல்களுக்கு நான் அடிமை) பாட்டா கேக்கும்போது கொஞ்சம் போரடிச்சது எல்லாம் படத்துல ரசிக்குற விதமாதான் இருந்துச்சு.ஒரு துறைல ஒரே சமயத்துல நுழையுற ரெண்டு பேரு.. அதுல ஒருத்தருக்கு கிடைக்குற புகழ்.. அங்கீகாரம்... இதனால இன்னொருத்தருக்கு வர கோபம்.. வெறுப்பு ..வஞ்சம்...ego. இதையெல்லாம் ஏற்கனவே ‘இருவர்’ல கொஞ்சம் பாத்துருக்கோம். நாசருடைய கேரக்டர் வேற அதையே ஞாபகப்படுத்துச்சு.நாசர்.. பொன்வண்ணன்...இவங்களுக்கு நாம சர்டிஃபிகேட் தரத்தேவையில்ல.பட்டாசு performance.படம் முழுக்க நெறைய டீட்டெய்லிங் இருந்தாலும்...முடிவு மட்டும் ஏனோ திருப்தியில்ல. கண்டிப்பா பாக்கலாம்.பழைய நாடகங்கள் பத்தி கேள்வியே படாதவங்களுக்கு நிச்சயம் ஒரு புது அனுபவமாதான் இருக்கும்.

கீழே: ராஜேஷ் எழுதுன ‘காவியத்தலைவன்’ விமர்சனம். இன்னபிற விவரங்களோட விரிவான விமர்சனம்.கண்டிப்பா படிங்க.

http://karundhel.com/2014/11/kaaviya-thalaivan-2014-tamil-review.html

2 கருத்துகள் :

amas சொன்னது…

நல்ல விமர்சனம். சரியா எழுதியிருக்கீங்க :-)

amas32

ila mathy சொன்னது…

!அருமையான விமர்சனம்!

Related Posts Plugin for WordPress, Blogger...