நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

சனி, 15 அக்டோபர், 2016

இசைசூழ் தனிமை - Playlist#4 - Melancholy ?!


இன்னதுதான்னு பகுத்தறியமுடியாத உணர்வை சில பாடல்கள் தரும் (unfortunately சினிமாப் பாடல்கள்லேயே திருப்திப்பட்டுக்குற ஜென்மம் நான்) .இசையமைச்சது ஒரே இசையமைப்பாளரா இல்லாம இருக்கலாம், ஒரே மாதிரியான ராகமா இருக்காது, arrangements வேற வேற மாதிரியானதா இருக்கலாம்.. ஆனா கேக்கும்போது அந்தப் பாடல்கள் தர்ற உணர்வு இருக்கே, அது இந்த எல்லாப் பாடல்களையும் ஒரு புள்ளியில இணைக்குற ரொம்ப மெல்லிசான ஒரு இழை. இந்த பாடல்கள் எல்லாமே கிட்டத்தட்ட பாசம், காதல், ஏக்கம்,பிரிவு, நினைவுகள், அமைதி... இந்த வகைகளுக்குள்ள அடக்கிடலாம். அப்புடி நினைவு தெரிஞ்சு மொதல்ல ரசிச்ச பாடல்
பாடல்: கண்டநாள் முதலாய் காதல் பெருகுதடி
இசை: யுவன்
அசலை எழுதி இசையமைத்தவர்: N.S.சிதம்பரம்
படம்: கண்டநாள் முதல்
பாடியவர்கள் : சுபிக்‌ஷா, பூஜா

அதுக்கப்புறம் கிட்டத்தட்ட அதே மாதிரியான feel கெடைச்ச இன்னொரு பாட்டு.துக்கம், சோகம்... ஏக்கம் எல்லாமே...கலந்த உணர்வு மொத வாட்டி கேட்டுட்டு அழுதுட்டேன்.
பாடல்: மஞ்சள் முகமே... மங்கள விளக்கே
இசை: இமான்
எழுதியவர்: சரவண சுப்பைய்யா
படம்: ABCD
பாடியவர்: சைந்தவி (இவங்க மேல பயங்கரமான லவ்வோட சுத்திட்டு இருந்தேன் அப்போ)

தலைவனுக்காக காத்திருக்குற தலைவியோட உணர்வுகள் வகைப் பாடலா இருந்தாலும் கொஞ்சமே கொஞ்சம் கிண்டலும் மகிழ்ச்சியும் கலந்து இருக்குற இந்தப் பாட்டும் இந்த பட்டியல்ல வரும். தனிப்பட்ட முறைல இந்தப் பட்டியல்லேயே எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்பப் பிடிச்ச பாட்டு இதான். (இதுக்குப் பின்னால ஒரு கத இருக்கு)
பாடல்: எங்கிருந்து வந்தாயடா
இசை: ஸ்ரீராம் பரசுராம் (பாடகி அனுராதா ஸ்ரீராமோட ஊட்டுக்காரர் தான்)
எழுதியவர்: தாமரை
படம்: ஃபைவ்ஸ்டார்
பாடியவர்: சந்தனா பாலா

கொஞ்சம் தாலாட்டு சாயல்ல இருந்தாலும் ரொம்ப ரொம்ப அழகான பாட்டு. ஊர்ல இருந்தப்ப இத காரைக்கால் வானொலில கேட்டுட்டு தேடியலஞ்சு ப்ரவ்சிங் செண்டர்ல ஒருவழியா கண்டுபிடிச்சு டவுன்லோட் பண்ணி சிடில காப்பி பண்ணிட்டு வந்தேன். வீட்டுக்கு வந்து கிட்டத்தட்ட ஒரு வாரம் கேட்டுட்டே இருந்தேன்.
பாடல்: என்னம்மா தோழி பொம்மைய காணோம்
இசை: சதிஷ் ராமலிங்கம்
எழுதியவர்: சசிக்குமார்
படம்: காலைப்பனி
பாடியவர்: (RJ) சுலபா

இது ஒரு அம்மா-மகன் பாட்டு தான். கிட்டத்தட்ட மேல பாத்த பாடல்கள பாடுனவங்களோட voice timbre தான் இந்த பாடகிக்கும். மொதல்ல கேட்டப்போ சாதாரணமா இருந்து அப்புறமா this one grew on me..!! Lovely song..! கவிஞர் தாமரையோட வரிகள்ல இருக்குற உயிர்ப்பே தனி தான்.
பாடல்: கண்கள் நீயே
இசை: ஜி.வி.பிரகாஷ்
எழுதியவர்: தாமரை
படம்: முப்பொழுதும் உன் கற்பனைகள்
பாடியவர்: சித்தாரா

இதுவும் அம்மா-மகன் பாட்டு தான். பிரிவுத் துயரம் ஊடாடுற வரிகள்... வைக்கம் விஜயலக்ஷ்மி தமிழ்ல பாடுன முதல் பாட்டு.கலங்கடிச்ச பாட்டு...!
பாடல்: புதிய உலகை புதிய உலகை
இசை: இமான்
எழுதியவர்: மதன் கார்க்கி
படம்: என்னமோ ஏதோ
பாடியவர்: வைக்கம் விஜயலக்ஷ்மி



கடைசியா இப்டி ஒரு லிஸ்ட் போடுறதுக்கு காரணமான பாட்டு. இந்தப் படத்துக்கு வந்து சிக்கிட்டோமேன்னு ஃபீல் பண்ணாலும் ஒரே ஆறுதல் இந்தப் பாட்டு தான். மறுபடியும் இமான்... நாதஸ்வர preludeஓட ஆரம்பிக்கிற பாட்டு..அந்த dense voiceக்காகவே எத்தன வாட்டி வேணாலும் கேக்கலாம்..!!! <3 span=""> <3 span=""> <3 span="">நந்தினி ஸ்ரீகர் குரல்ல யுகபாரதியின் வரிகள் அவ்ளோ அழகு..!
பாடல்: கண்ணம்மா கண்ணம்மா
இசை: இமான்
எழுதியவர்: யுகபாரதி
படம்: ரெக்க
பாடியவர்: நந்தினி ஸ்ரீகர்

1 கருத்து :

Unknown சொன்னது…

ofcourse everybody has their own priority songs....

Related Posts Plugin for WordPress, Blogger...