நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

வியாழன், 24 டிசம்பர், 2020

அத்தாரோ - சரவணன் சந்திரன்


பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் அமைந்துள்ள ‘Christ the redeemer' சிலையை நிச்சயமாக நீங்கள் ஏதோவொரு செய்தித்தாளிலோ அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சியிலோ பார்த்திருக்கலாம். கிட்டத்தட்ட அந்த சிலையின் அமைந்திருக்கிற மலை கிராமத்தின் அதே மாதிரியான ஒரு புவியியல் அமைப்பைக் கொண்ட ‘அத்தாரோ’ எனும் மலைத் தீவு தான் கதைக்களம். மேலே மலையும் காடுமாகவும், கீழே அடிவாரத்தைச் சுற்றிலும் கடலுமாய் இருக்கிற இடம். 

ஏடன் என்னும் மூப்பனைப் பற்றிய அறிமுகம் நமக்குச் சொல்லப்படுகிறது. அந்த காடும் மலையும் கடலும் அவனுக்கு எவ்வளவு பழக்கப்பட்டவை என அறிந்து கொள்கிறோம்.சரவணன் சந்திரனின் பிற கதைகளைப்போலவே கதைசொல்லியின் பெயர் நமக்குச் சொல்லப்படுவதில்லை. கதைசொல்லி வேறெங்கோ ஒரு தூர தேசத்திலிருந்து அத்தாரோ மலையை வந்தடைந்த விதத்தை சொல்கிறான். அதன்பின் அந்த காட்டுக்கு அவனை ஏடன் பழக்கப்படுத்துவதும், அவன் என்னவாக மாறி எதைக் கற்றுக் கொண்டான் என்பதையுமே மீதிக்கதை எனக் கொள்ளலாம். 

”காடுகளுக்கு பகலும் இரவும் ஒன்றுதான். காடு எப்போதும் தனித்தே இருக்கிறது. அதுதான் காட்டின் இயல்பும்.  பகலும் இரவும்தான் மாறி மாரி வருகின்றன.ஒவ்வொன்றின் அடிப்படையையும் புரிந்து கொண்டால், அச்சத்திற்கு இடமேயில்லை”

”எல்லைகளை மட்டும் மறுபடி நினைவூட்டுகிறேன்.இதைச் சத்திய வாக்காகக் கொள். முதலில் உன் எல்லை எது என உணர்ந்து கொள்”

 ஏடன் காடுகளைப் பற்றியும் எல்லைகளைப் பற்றியும் இப்படித்தான் முதலில் சொல்கிறான். கதைசொல்லிக்கு அறிமுகப் படுத்தி வைக்கிறான். பின்பு கதைசொல்லியிடம் விலங்குகளைப் பற்றிப் பேசிவிட்டு, “நீ வேட்டை விலங்கா ? சார்பு விலங்கா ?” எனக் கேட்குமிடத்தில் கிட்டத்தட்ட நாம் இதுதான் கதையின் மையமென முடிவு செய்துகொள்ளலாம். 

ஆனால் நிறைய கிளைக்கதைகளையும் வர்ணனைகளையும் என்னால் பொருத்திக் கொள்ளவோ, புரிந்து கொள்ளவோ முடியவில்லை. இது கதைசொல்லியின் transformation பற்றிப் பேசும் நாவலா ? அல்லது அவனுடைய survival பற்றிப் பேசும் நாவலா ? அல்லது காடு-மலை-கடல் கொண்ட ஒரு தீவின் கதையா ? இந்தக் கேள்விகளுக்கான விடை தெரியவில்லை. ஒரு கட்டத்தில் ஏடனும் கதைசொல்லியும் மனிதர்களா அல்லது இரு புலிகளின் கதைகளைத் தான் கேட்டுக் கொண்டிருக்கிறோமா என்ற சந்தேகம் கூட எழுந்தது. மேலும் முள்ளங்கிக்காரிகளைப் பற்றிய வர்ணனைகளும், அந்தக் காட்டில் உலவித் திரியும் புலியும், நாய் போல மாற சாபம் வாங்கிய மூதாட்டியின் மகன்களும் எதற்காகவென  இப்போதும் புரியவில்லை.

உண்மையில் ஒரு நூற்றி இருபது பக்க நாவலை (நாற்பது வெற்றுப்பக்கங்களைத் தவிர்த்துவிட்டு) படிக்க மிக அதிக நேரம் எடுத்துக் கொண்டது இதுவே முதல் முறை. சரவணனின் பிற படைப்புக்களைப் போல ஒரு தடையில்லாத கதையோட்டமோ இலகுவான மொழிநடையோ இல்லை என்பது முதல் காரணம். இங்கு அத்தாரோ என்னும் நாவலில் மையம் நிலையான ஒன்றாக இல்லாமல் பல கதைகளையும் தொட்டுச் செல்வதாலும், அனைத்துமே ஒரு மாதிரியான abstract ஆக சொல்லப்பட்டிருப்பதாலும் கொஞ்சம் குழப்பத்துடனேயே படித்து முடித்தேன்.

இறுதியாக...

”அறிந்து  திகட்டிப் போன ருசியை விட்டு, அறியாத ருசியை நோக்கிப் போ, இந்த மலை பல ருசிகளைக் காட்டிக் கண்கட்டி வித்தை காட்டும். அதில் எது சிறந்தது எனக் கணக்கிடுவதற்குள் வாழ்நாள் முடிந்துவிடும்”

ஏடனின் இந்த வாக்கியத்தையே எனக்கானதாகவும் எடுத்துக்கொள்கிறேன். இது நான் அறியாத ருசி. எனக்குப் புரியாத களம். சில காலம் கழித்து இந்த நாவல் எனக்கு முற்றிலும் வேறு மாதிரியாகத் தெரியலாம். மறுவாசிப்பின் போது வேறொரு கதையை அறிந்து கொள்ளலாம். உங்களுக்கும் கூட அப்படியே ஆகலாம்.

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: இணைப்பு இங்கே

புதன், 23 டிசம்பர், 2020

Hestia - நெருப்பின் தேவதைக்கு

 

பேரன்பின் ஹெஸ்டியா,

இந்தக் கடிதத்தை நான் எழுதிக்கொண்டிருக்கும் இரவில், உன் நாட்டில் விடியல் வந்திருக்கும்.கடல் கடந்து, பல்லாயிரம் மைல்களுக்கப்பால் நீ இருந்தாலும், கிட்டத்தட்ட பத்தாண்டுகளாய் தொடரும் இந்த உறவின் பொருட்டும் மனதளவில் உணரும் நெருக்கத்தின் பொருட்டுமே, இந்த மின்மடலில் உனக்காக சொற்களைத் தேடித்தேடி எழுதிக்கொண்டிருக்கிறேன். 

இவர்கள் நம் வாழ்வில் நிலைத்து நிற்கப் போகிறவர்கள் என்ற எதிர்பார்ப்பு கொஞ்சமும் இல்லாத மனிதர்களோடு தான், நாம் பல ஆண்டுகள் நிலைத்திருக்கிற உறவுகளை உருவாக்கிக் கொள்ளுகிறோம். அப்படியொரு முற்றிலும் எதிர்பாராத உறவு தான் நம்முடையதும். உனக்கு நானும் எனக்கு நீயும் அறிமுகமான போது நாமும் அப்படித்தான் நினைத்திருப்போம். உன் எண்ணம் அறியேன் எனினும், நான் அப்படித்தான் நினைத்தேன். 

சம்பிரதாய அறிமுகத்தின் போது ஒரு புன்னகையுடன் கடந்து போய்விட்டாலும், நான் உன்னிடம் முதன்முதலில் அதிகம் பேசியது உன் கண்கள் கலங்கிய ஒரு தருணத்தில் தான். கண்ணீருக்கான காரணத்தையும் உன் தரப்பு நியாயத்தையும் விளக்கிச் சொன்னபின் கொஞ்சம் ஆறுதலடைந்தாய் நீ. 

 பிறகு நீ ஓரிடமும் நான் ஓரிடமுமாய் பணிநிமித்தம் விலகிச் சென்றோம். சம்பிரதாய நல் விசாரிப்புகளும் குறுந்தகவல்களும் தவிர்த்து அதிகமாய் ஒன்றும் பேசிக்கொண்டதில்லை நான். காலம் மீண்டும் நம் பாதைகளை ஒன்றிணைத்தது, சில மாதங்களுக்குப் பின் மீண்டும் ஒரே இடத்தில் பணிபுரிந்தோ. அப்போது தொடங்கியது நம் இரண்டாம் அத்தியாயம் . உரையாடல்களும், காஃபிக் கோப்பைகளும், மாலை நேரத்து நடைகளும், புகைப்படங்களும், பாடல்களும்,திரைப்படங்களும், புத்தகங்களுமாய் கழிந்த அற்புதமான நாட்கள் அவை. உன் எதிர்காலம் குறித்த பெரும் அச்சங்கள் ஏதுமற்றவளாகவே இருந்தாய் நீ. 

வாழ்வில் உன்னைச்சுற்றி உன்னைக் காயப்படுத்தாத மனிதர்கள் இருந்தால் போதுமானது என்றே சொல்வாய். நானும்  உனக்கு அதுவே வாய்க்கட்டுமென விரும்பினேன்..வாழ்த்தினேன். ஒரு வாரயிறுதியில் எதிர்கால வாழ்வு குறித்த பெரும் கனவுகளோடு நீ ஊருக்குக் கிளம்பிச் சென்றிருந்தாய். ஓரிரு நாட்களுக்கும் பின், ஓர் இரவில் என்னைத் தொலைப்பேசியில் அழைத்த நீ வெடித்து அழுதாய். உன்னைத் தேற்ற வார்த்தைகளின்றி ”எல்லாம் சரியாயிடும், நீ அழாத” என்று சொல்லிக் கொண்டேயிருந்தேன்.  பின் நீ ஊர் திரும்பியதும் எதிர்பாராத ஓர் அதிகாலையில் உன்னைப் பார்க்க வந்தேன். வாழ்நாளைக்கும் மறக்கமுடியாத புன்னகையை உன் முகத்தில் கண்டேன் அன்று.

நாம் ஒன்றாகச் சென்று வாங்கிய கிட்டார் நினைவிருக்கிறதா உனக்கு. என்னுடைய கிட்டார் இன்றும் உன்னை நினைவூட்டியபடி என் வீட்டுச் சுவற்றில் தொங்கிக்கொண்டிருக்கிறது. நீ வெளிநாட்டுக்கு பறந்து போவதாய்ச் சொன்ன ஓர் நாளில் என் கிட்டார் இசைப் பயணம் முடிவுக்கு வந்தது.  :) விமான நிலையத்தில் உன்னைச் சந்தித்துவிட பெருமுயற்சி செய்தும், அதில் தோற்று எங்கோ நெடுந்தொலைவில் இருந்து உனக்குக் கையசைத்து விடைகொடுத்துவிட்டு வந்தேன் நான். 

அதன் பின் நீ ஊர் வந்து, நாம் சந்திக்கையில் உன் அடுத்த வாழ்க்கைப் பயணத்திற்கான அறிவிப்புடன் வந்தாய். மனம் நிறைந்த வாழ்த்துகளுடன் உன்னிடமிருந்து விடைபெற்றேன் நான். மாதங்கள் உருண்டோடின, நமக்கிடையேயான தொலைபேசி அழைப்புகள் வெகுவாய் குறைந்துவிட்டிருந்த தருணத்தில் , நான் சற்றும் எதிர்பாரா ஓர் நாளில் ஒரு பெரும் துயரிலிருந்து நீ தப்பிப் பிழைத்த வீடு வந்த கதையைச் சொன்னாய்.  இந்தப் பெண் இன்னும் எத்தனைப் போராட்டங்களைத் தான் தாங்குவாள் என விதியை நொந்து கொண்டேன் நான்.

உனது, ஒரு பயணத்திற்கும்  அடுத்த பயணத்திற்கும் இடையேயான நாட்களே நாம் சந்தித்த நாட்களாக மாறிப்போயின. ஒவ்வொரு முறையும் ஒரு புதுமாதிரியான சவாலைக் கடந்து வாழ்வின் அடுத்த கட்டத்தை எதிர்கொள்ளத் தயாராகவே இருந்தாய் நீ. மற்றுமொரு முறை நீ கடல்கடந்து பறந்துவிட ஆயத்தங்களை மேற்கொண்டிருந்தாய். பல ஆண்டுகளுக்குப்பின் மீண்டுமொரு முறை சந்தித்தோம். ஒரு தேவதை போல உருமாறியிருந்தாய் நீ. அதே பழுப்பு நிற விழிகளும், சிங்கப்பல் புன்னகையுமாய் உடல் மட்டும் வெகுவாய் மெலிந்திருந்தாய். காய்ச்சல் வந்த தேவதையாக, கடுமையான உடல் உபாதைகளுடன் போராடிக் கொண்டிருந்த உன்னை நான் நேரே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. ஓரளவு நீ சீரான பின், உணவும், உலாவலும், தேநீருமாய் மிச்ச நாளைக் கடத்திவிட்டு பின்பு உன்னைப் பிரிய மனமில்லாமல் ஒரு மென் அணைப்புடனும் , கலங்கிய கண்களுடனும் உன்னிடமிருந்து விடை பெற்றேன்.

இப்போது எண்ணிப்பார்த்தால், எப்போதெல்லாம் நீ ஏதோ ஒரு துன்பத்தில் சிக்குண்டு இருந்தாயே அப்போதெல்லாம் நான் உன்னோடு இருந்திருக்கிறேன். தனிப்பட்ட முறையில் உன் வாழ்வில் பெரிதாய் என்னால் ஒன்றும் செய்ய முடியாமல் போயிருந்தாலும், உனக்காக செவிசாய்க்கவும் உரையாடவும், முடிந்தவரையில் கூட நடக்கவும் செய்திருக்கிறேன். I was there for you and will continue to be so.  நாம் அதிகம் பேசிக்கொள்ளாத, குறுந்தகவல்கள் அனுப்பிக் கொள்ளாத நாட்களில் எல்லாம் நீ கவலைகள் ஏதுமில்லாமல் மகிழ்ச்சியாய் இருப்பதாகவே நினைத்துக் கொள்கிறேன்..நம்புகிறேன்...!

இந்த பிரபஞ்சம் உனக்காக இன்னும் எத்தனை ஆச்சரியங்களை வைத்திருக்கிறதோ தெரியாது. ஆனால் அவை உனக்கு மனநிம்மதியையும் மகிழ்ச்சியையும் தரும் என உறுதியாக நம்பிகிறேன். உன் வாழ்வின் இந்தப் பகுதி, முழுக்க முழுக்க உனக்கே உனக்கானது. எதிர்கொண்ட அத்தனை போராட்டங்களையும் வெற்றிகரமாகக் கடந்துவந்த உனக்கு, இது அமர்ந்து இளைப்பாற வேண்டிய நேரம். உன் மகிழ்ச்சியைத் தவிற வேறெதையும் முன்னிறுத்தாமல், புன்னகையும் கொண்டாட்டமுமாய் உன் வாழ்வை நிறைத்துக் கொள். உன் விருப்பப்படி இன்னும் உயரமாகவும் , தூரமாகவும் பறந்து திரி. கொண்டாடு...! 

இந்தப் பத்தாண்டுகளில் பேசியவை போக,அடுத்த முறை சந்திக்கும்போது உன் பழுப்பு நிற விழிகள் மின்ன இன்னும் நிறைய கதைகளைச் சொல். ஒரு புன்னகையோடு உன் எதிரே அமர்ந்து , உன் பேச்சைக் கேட்க காத்திருக்கிறேன்...!

Loads of love to you...! Love you...!

மனம் நிறைந்த அன்புடன், 

நான்  <3

வெள்ளி, 18 டிசம்பர், 2020

கலகம் காதல் இசை - Bibliography/References/Glossary - Part 1

 

இன்று சாருவின் பிறந்தநாள்...! <3

புத்தகம்/வாசிப்பு சார்ந்து என் நட்புவட்டத்தில் இயங்கும் பலரும் சாருவின் வழியாக நான் கண்டடைந்தவர்களே. வாசகர் வட்டம், விமர்சகர் வட்டம், வாசகசாலை என எல்லா பக்கத்திலிருந்தும் நண்பர்களை இணைக்கிற ஒற்றைப் புள்ளி சாரு.

தனிப்பட்ட முறையில் அவருடைய புனைவல்லாத புத்தகங்களில் ஏதேனும் ஒன்றுக்கு ஆய்வு நூல்களைப் போல Bibliography/Glossary/Index/References உருவாக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாய் ஒரு விருப்பம்.
சுஜாதாவின் ’கற்றதும் பெற்றதும்’ புத்தகத்திற்கு யாரோ ஒருவர் இதனைச் செய்ததும் நினைவில் வந்தது.

சில மாதங்களுக்கு முன் சாருவின் புனைவல்லாத புத்தகங்களில் ஒன்றான ‘கலகம் காதல் இசை’ புத்தகத்தை இதற்காக எடுத்துக்கொண்டேன். இசை தொடர்பான தொழில்நுட்ப தகவல்களைக் கொண்ட பத்து கட்டுரைகளின் தொகுப்பு; வெறும் 120 பக்கங்கள் என்பதால் எளிதாக முடித்துவிடலாம் என்பது என் கருத்து.

Boy.. I was so wrong....! முன்னுரை தொடங்கி ஒவ்வொரு அத்தியாயத்திலும் அவர் குறிப்பிட்ட இசைக்கலைஞர்கள், பாடல்கள், வரலாற்றுத் தகவல்கள், புத்தகங்கள், இசைக்கருவிகள், என ஒவ்வொன்றைப் பற்றிய referenceஐயும் Wiki, youtube, Spotify, Research papers, articles எனத் தேடித் தேடி தொகுக்க வாரங்கள் மாதங்கள் ஆகின.

இந்த பணியை செய்யும்போது நான் புரிந்து கொண்ட விஷயம், வெறுமனே namedropping செய்வதற்காக கூட இத்தனை பேரைப் பற்றி இவ்வளவு தகவல்களையும் இந்த இணைய யுகத்தில் சேகரிக்கவும் புரிந்து கொள்ளவும் இவ்வளவு நேரத்தையும் உழைப்பையும் செலவிட வேண்டியிருக்குமே. அத்தனையையும் ஆராய்ந்து கட்டுரைகள் எழுத சாரு எவ்வளவு வாசித்திருப்பார், எவ்வளவு தேடியிருப்பார்...! எவ்வளவு பாடல்களைக் கேட்டிருப்பார் ? உண்மையிலே மலைப்பாக இருக்கிறது...!

Charu is indeed an icon of our times...! <3 Long may you live, write and celebrate Charu....! <3
 
இதோ இன்று வரை முன்னுரை உட்பட முதல் நான்கு அத்தியாயங்களுக்கான references என் blogல். கூடிய விரைவில் இரண்டாம் பகுதியையும் பதிப்பிக்கிறேன். 
 
Link to buy the book : Zero Degree Publishing

Preface:

Naqareh - Youtube - Musical Instrument

Senior Dagar brothers -  Junior Dagar brothersNasir Zahiruddin and Nasir Faiyazuddin - Youtube - Singer/Artist/Musician

Dhrupad - Dagar Tradition 

Baba Behram Khan Dagar - Singer/Artist/Musician

Octavio Paz - Book by Octavio Paz - In Light Of India  - Writer/Author

Dr.Gangubai Hangal - Spotify Playlist  - Youtube- Singer/Artist/Musician

Pandit Jasraj - Spotify Playlist  - Youtube - Singer/Artist/Musician

Mallikarjun MansurSpotify Playlist  - Youtube - Singer/Artist/Musician

Kumar Gandharva - Spotify Playlist  - Youtube - Singer/Artist/Musician

Basavaraj Rajguru - Youtube - Singer/Artist/Musician

Kishori Amonkar - Youtube- Singer/Artist/Musician

Rajan and Sajan Mishra - Youtube- Singer/Artist/Musician

Parween Sultana - Youtube- Singer/Artist/Musician

Ustad Allah Rakha - Youtube - Singer/Artist/Musician

Ravi Shankar - Youtube  - Singer/Artist/Musician

Rais Khan - Youtube - Singer/Artist/Musician

Bismillah Khan - Youtube - Singer/Artist/Musician

N.Rajam - Youtube - Singer/Artist/Musician

Pannalal Ghosh - Youtube - Singer/Artist/Musician

Shivkumar Sharma - Youtube - Singer/Artist/Musician

Bade Ghulam Ali Khan - Youtube - Singer/Artist/Musician

Iannis Xenakis - Youtube - Singer/Artist/Musician

Reggaeton Ninos - Youtube - Singer/Artist/Musician

Daddy Yankee - Gasolina  - Singer/Artist/Musician

Eminem  - Rapper/Artist/Musician

Cesária Évora - Youtube - Singer/Artist/Musician

Fado - Music form/genre - Portuguese / Youtube

Morna - Music form/genre - Cape Verde/Cabo Verde / Youtube

Chapter - 1

Augusto Pinochet - Dictator ruler of Chile / Politician

Victor Jara - - Singer/Artist/Musician - Venceremos song - Plegaria a un labrador song

Patricia Verdugo - Journalist/Author

Nicanor Parra - Chilean Poet - Poetry

Violeta Parra - Composer - Youtube

Nueva canción - Social movement / Music genre

Salvador Allende - Politician - Chile

Illapu - Music Band - Despedida Del Pueblo song

Charango - Musical Instrument - Youtube

Quena  - Musical Instrument - Youtube

El candombe para jose - Song

Preguntas por Puerto Montt - Song written by Victor Jara

Chapter - 2

Plutarch - Greek Philosopher

Lycurgus of Sparta - Lawgiver of ancient Sparta 

Lyre - Youtube - Greek Music Instrument

Pindar - Ancient Greek Poet

Muses -  Greek goddesses

Thamyris - Greek Mythology - Singer

The Iliad by Homer - Ancient Greek Poem

Paradise Lost by John Milton - Poem

Alypius - Author of Eisagōgē mousikē (Introduction to Music) book

Ensemble De Organographia - Instrumental/Band/Music - Greek - Youtube

Euripides - Greek Playwright who wrote Medea 

A Dream of Passion (1978) aka  Kravgi gynaikon - Movie based on the Greek tragedy Medea

The Consolation of Philosophy - Book by Boethius - Youtube

Chapter - 3



Zorba's dance - Song/Music - Youtube / Original score

Nikolaos Mantzaros - Greek Music Composer

Georgios Papandreou - Greek politician / Former Prime Minister of Greece

Georgios Papadopoulos - Greek politician / Colonel / Military ruler

Athens Polytechnic Uprising - Historic/Political event


Leonard Bernstein - American Music Composer - Youtube

Yehudi Menuhin - American born Violinist/ Music Conductor - Youtube

Bouzouki - Greek Musical Instrument - String - Youtube

Rebetiko/Rembetika - Ancient Greek Music Fom - Youtube

Smyrna 1922: The Destruction of a City - Book written by Majorie Housepian Dobkin - Amazon

Anabasis - Ancient Greek Book written by Xenophon

'Rebetika – The Music of the Outsiders' - Research work of Rembetika music by Lysandros pitharas - Youtube for the documentary

Dionysis Savvopoulos - Greek Songwriter/Singer/Music Composer - Youtube
Vrómiko Psomí (1972 ) - Music album by Dionýsis Savvópoulos - Youtube
Road to Rembetika: Music of a Greek Sub-Culture - Songs of Love, Sorrow and Hashish -
book written by Gail Holst
Songs of the Greek Underworld: The Rebetika Tradition  - book written by Elias Petropoulos


(The other books of Elias which Charu has mentioned are not yet translated in English - However, you can access the list here in the Greek Wikipedia page)

Ilias Petropoulos-An Underground World - The documentary on Elias Petropoulos is available on Youtube - (without English subtitles)

Márkos Vamvakáris - Greek Musician - Youtube - Spotify

Vassilis Tsitsanis - Greek Musician/Songwriter - Youtube - Spotify

Roza Eskenazi - Greek Singer - Youtube - Spotify

Rita abatzi - Greek Singer - Youtube - Spotify

Sotiria Bellou - Greek Singer - Youtube - Spotify

Marika Ninou - Greek Singer - Youtube - Spotify
 

Chapter -4

Iannis Xenakis - Youtube - Singer/Artist/Musician
 
Metastasis  - Orchestration/Composition by Iannis Xenakis - Youtube
 
 
 
Pithoprakta - Orchestration/Composition by Iannis Xenakis - Youtube 
 
Towards a Metamusic - Journal/Article by Iannis Xenakis

The Geometry of Art and Life - Book on Msuic and Mathematics by  Matila Ghyka

Polytope - Orchestration/Composition by Iannis Xenakis - Youtube
 
Xenakis - Biography of Iannis Xenakis written by  Nouritza Matossian

Related Posts Plugin for WordPress, Blogger...