நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

சனி, 24 ஏப்ரல், 2010

என்னைப்பற்றி கொஞ்சம்....


எங்கோ ஒரு ஊரிலிருந்து படிச்சு முடிச்சுட்டு, சென்னைக்குப்போனா நல்ல வேலை கெடச்சு செட்டில் ஆயிடலாம்னு நெனச்சுக்கிட்டு இங்க வந்து , கிடைக்குற ஏதோவொரு வேலைய மாங்கு மாங்குன்னு செய்ற ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான பசங்கள்ள நானும் ஒருத்தன்.... சொந்த ஊர் திருவாரூர்... ஸ்கூல்,காலேஜ் படிப்பெல்லாம் அங்கேதான்...படிச்சது B.C.A... இப்போ desktop support engineerஆ வேலை செய்றேன்.பாட்டுனா ரொம்ப பிடிக்கும்...நிறைய பேசுவேன்...நிறைய பாட்டு கேப்பேன்... கொஞ்சம் சுமாரா பாடுவேன்.... சின்ன வயசுலேர்ந்தே கம்ப்யூட்டர்னா ரொம்பப்பிடிக்கும்... ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது கத்துக்க ஆரம்பிச்சேன்.. செவன்த் படிக்கும்போது S.S.I சென்டர்ல டிப்ளோமா முடிச்சாச்சு... அப்புறம் ஸ்கூல் காலேஜ் எல்லாத்துலயும் கம்ப்யூட்டர் சயின்ஸ்... இப்போ அதே வாழ்க்கையா ஆயிடுச்சு. அவ்ளோதான்... என்னப்பத்தி மத்ததெல்லாம் நீங்களே பழகி தெரிஞ்சுக்கோங்க......

கருத்துகள் இல்லை :

Related Posts Plugin for WordPress, Blogger...