எல்லோருக்குமே பள்ளிப்பருவம் என்பது வாழ்வில் மறக்க முடியாத ஒன்று. கல்வி மட்டுமல்லாமல் பல்வகைப்பட்ட அனுபவங்களையும், பல்வேறு நண்பர்களையும், இன்னும் பல விஷயங்களையும் நமக்கு பரிச்சயமாக்கும் இடம் பள்ளிக்கூடம் தான்.எத்தனை சந்தோஷங்கள், எத்தனை சண்டைகள்,எத்தனை விளையாட்டுக்கள்.நிச்சயமாக மறக்க முடியாதவை...நினைத்தாலும் திரும்பக்கிடைக்காதவை.... என்னுடைய பள்ளிப்பருவமும் அதற்கு விதிவிலக்கல்ல...
L.K.G முதல் ஐந்தாம் வகுப்பு வரை பல்வேறு பள்ளிகளில் படித்துவிட்டு (!!!) ஆறாம் வகுப்பிற்கு வேலுடையார் மேல்நிலைப்பள்ளிக்கு வந்து சேர்ந்தேன்....திருவாரூரில் அப்போது மூன்று உயர்நிலைப்பள்ளிகள் தான் பெரியவை (இப்போதும்). அவை பாய்ஸ் ஹைஸ்கூல் என்றழைக்கப்பட்ட வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜி.ஆர்.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் வேலுடையார் மேல்நிலைப்பள்ளி..ஆகியன... எனக்கு ரெண்டு சாய்ஸ் இருந்தது... ஒன்னு பாய்ஸ் ஹை ஸ்கூலில் சேர்வது...மற்றொன்று வேலுடையார்... பெரும்பாலான என் நண்பர்கள் பாய்ஸ் ஹைஸ்கூலில் சேரப்போவதாக சொல்லி இருந்ததால் நானும் அங்கேயே சேர விரும்பினேன்... ஆனால், "அங்கே கூட்டம் அதிகம் புள்ள படிக்க முடியாது..இங்கயே இங்கிலீஷ் மீடியம் நல்ல இருக்கு" என சில பல அறிவுஜீவி சுற்றத்தார்களின் அறிவுரையால் வேலுடையார் ஸ்கூல்க்கு என்ட்ரன்ஸ் எழுத வேண்டியதாகியது. நானும் பாஸ் பண்ணிவிட்டேன்.
முதன் முதலில் ஸ்கூலுக்குள் நுழைந்தபோது அந்த பெரிய மைதானத்தையும் மரங்களையும்
பார்த்து மனம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.எங்கள் வீடு அப்போது மடப்புரத்தில் இருந்தது.அங்கிருந்து வேலுடையார் ஸ்கூல் இருந்த துர்காலயா ரோடு பக்கம் என்பதால் தினமும் பள்ளிக்கு நடந்தே சென்று வந்தேன்.அப்போது எனக்கென சைக்கிள் இல்லையாதலால் மதிய உணவுக்கு நண்பர்கள் யாருடைய சைகிளையாவது இரவல் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சாப்பிடப்போவேன்.மடப்புரத்தில் இருந்து துர்காலயா ரோடு போவதற்கு இரண்டு வழி உண்டு..ஒன்று கமலாலயம் மேல்கரை வழியகப்போய் நேராக துர்கால்ய ரோட்டில் சேர்வது, மற்றது ஜவுளிக்காரத்தெரு கள்ளத்தெரு வழியாகச் சென்று துர்காலயா ரோட்டின் நடுவில் இணைவது. அதிக நேரம் சைக்கில் ஓட்டலாம் என நான் எப்போதும் இரண்டாவது வழியையே தேர்ந்தெடுத்தேன்.
எங்களுக்கு வகுப்பாசிரியராக இருந்தவர் இளஞ்செழியன் சார், ஹாஸ்டலுக்கும் வார்டனாக இருந்தவர்.மிகவும் கண்டிப்பானவர், ஒரு அறை விட்டால் காது கிழியும்.மறக்க முடியாத ஆசிரியர் இவர். தற்போது தீயணைப்புத்துறையில் பணிபுரிகிறார் என நினைக்கிறேன்.
எங்கள் வகுப்பில் பையன்கள் அப்போது இரண்டு மூன்று குழுக்களாக இருப்பார்கள். சலாம் தலைமையில் ஐயப்பன், நிருபன்ராஜ் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு க்ரூப் - விளையாட்டென்றால் முதலில் நிற்கும் க்ரூப் இது. உமாசுதன்,டி.வெங்கடேஷ், ஈ.வெங்கடேஷ், வினோத் ஆகியோரை உள்ளடக்கிய படிப்பாளி க்ரூப் ஒன்று. இதில் உமாசுதன், தீபக் இருவரும் table tennis ப்ளேயர்கள்.உருவத்தில் பெரியவர்களாக இருந்த சுவாமியும், பரமேஷும் அப்போ எங்க கிளாஸ் Don' கள்.எல்லோரும் பயப்படுவார்கள்.எங்கள் வகுப்பிலேயே அதிக சேட்டையாக இருந்தது ஷேக் இஸ்மாயில் தான். கைலாஷும் பாலாஜியும் ரெட்டைப்பறவைகள்.எப்போதும் ஒன்றாகத்தான் திரிவார்கள். விளமல் மற்றும் ஜி.ஆர்.டி கார்டனிலிருந்து வந்த கணேஷ்,சிங்கரவேல், கணேஷ் பிரபு, ராஜ்திலக் ஆகியோர் ஒரு க்ரூப்பாகத் திரிவார்கள். இதில் எந்த க்ரூப்பிலும் உருப்படியாக இல்லாமல் அங்கயும் இங்கயுமாக அலைந்துகொண்டிருந்தது நான் மட்டும் தான் :-)
தென்னை மட்டை கிரிக்கெட், புட்டு (ஏழு கல்), ஹை த்ரோ, பேப்பே எனத் தொடங்கிய எங்கள் விளையாட்டுக்கள் வகுப்பு ஏற ஏற வாலி பால், கோக்கோ என வேறு பரிமாணம் பெற்றன. இப்போது நினைத்தாலும் இனிக்கும் நாட்கள் அவை...!!!
தொடரும்...!!!
உங்கள் பின்னூட்டங்களையும் கருத்துகளையும் ஆவலுடன் எதிர்நோக்கும் -சுதர்
நானும் என் உலகும்
எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.
திங்கள், 26 ஏப்ரல், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக